என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 27 June 2012

முதல் காதல்

முதல் காதல்,,

எப்போது உதித்தது என,,

நினைவில்லை..

உன்னை எப்போது பிடித்தது,,

என்றும் தெரியவில்லை..

**
ஆனாலும் தொடர்ந்த ,

தினசரி பேருந்து நிறுத்தத்தில்,

இருந்து,,

தொடர் பிரயாணத்தில்,,

மெல்ல என் மனம்,,

உன்னிடத்திற்கு அழகாக,,

தாவி கொண்டிருந்ததை நான் அறியவில்லை..

**
ஏதோ ஒரு அனிச்சை செயலால்,,

ஒரு முறை நீ திரும்பி,,,

சற்றே பின் தள்ளி நின்றிருந்த,,

என் கண்களை சில நொடி,,

உன் கண்கள்,,

சந்தித்த பொழுது,,

நமக்குள் முன்னமே உருவான,,

மெல்லிய காதல்,,

மெல்ல புரிந்தது நமக்கு...

**
நிறைய நிகழ்வுகள்,,

தினசரி சந்திக்க வாய்ப்பு இருந்தும்,,

பேசிக்கொள்ளவே இல்லை.

ஏனோ பெரும் தயக்கம்,

இருவரிடமும்..

ஆனால்,,

நமக்குள் மிக அழகான,,

காதல் பூத்திருந்தது...

**
என் உறவு பெண்ணும் கூட நீ,,

தொடர்ந்த பார்வை பரிமாற்றங்கள் ,,

நமக்குள் இருந்த காதலை,,

அழுத்தமாக சொல்லின..

தொடர்ந்த கனவுகளில்,, அன்று,,

நீ மட்டுமே வந்தாய்..

**
அது என் அழகான,,

இருபதுகளின் வயது..

சற்றே வாழ்வதற்ககான தேடலை ,,

நான் துவங்கியபோதும்,, கூட,,

எனக்கான தேடலாக இல்லாமல்,,

நமக்கான தேடலாக தேடினேன்...

கிடைத்தது ஒரு வாழ்க்கை ,,

வெளிநாட்டில்...

பிரித்தது சில காலம் நம்மை..

**
திரும்ப ஒரு நாள் வந்தபோது,,

உன் அழகான திருமண பத்திரிக்கை,,

என் வீட்டு வரவேற்பு அறையை ,,

அழகாக அலங்கரித்து..

சிலையானேன் சில நிமிடம்,,

சுதாரித்தேன்,,

என்றோ முடிந்திருந்தது,,

உன் திருமணம்..

**
காலம் கடந்த ஒரு நாளில்,,

என் உறவினருடன்,

உன் வீட்டிற்கு வந்தபோது,,

மெல்ல பேசினாய் ,,

நலமா என்று..

பிறகு,, என்ன நினைத்தாயோ,

தூளியில் உறங்கி கொண்டு இருந்த,

உன் குழந்தையை,,

என் மடியில் கிடத்தினாய்..

**
சற்றே பக்குவம் அடைந்திருந்த ,

என் மனதால்,

குழந்தைக்கு என் ஆசிகளை தெரிவித்தேன்,,

**
பிறிதொரு நாளில் என் திருமணமும் முடிந்தது...

ஏனோ அதன் பின்,,

இருவரும் சந்திக்கும் தருணம் கூட நிகழவில்லை..

வாழ்க்கை சூழல்,,

வெகு வேகமாக நம்மை நகர்த்தியது போலும்.

**
வாழ்க்கை தீர்ந்த ஒரு பொழுதில்,

ஒரு உறக்கம் வராத பின்னிரவில்,,

இந்த தள்ளாத அந்திம வயதில்,,

ஏனோ உன் நினைவு.

**
இந்த அந்திம வயதிலும்,,

அழகிய உன் இளமை தோற்றத்தின் நினைவுகளோடு..

மெல்லிய கண்ணீரை வெளிப்படுத்தியபடி,,

மரணம் நோக்கி காத்திருக்கிறேன்..

***
((நிஜத்தோடு சிறிதாக கற்பனை கலந்து.. ))

No comments: