Google+ Badge

என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday, 29 August 2012

அன்றொரு நாளில்..

அன்றொரு நாளில்,,

நான் பள்ளி சிறுவன்..

இன்றைய சிறார் போல அல்ல,

அன்று,,

என் போன்றவர்கள் எல்லாம்,,

பள்ளி இறுதி வரையில்,,

குழந்தைகளாகவே இருந்த ஒரு காலம் அது..

**
அன்றெல்லாம்,,

என் அறையில்,, இரவு உறக்கத்தில்,

கண்ட கனவுகள்,

ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்..

**
கனவுகள் வராத,,

நினைவு இரவுகளில்,,

என் உடல் மட்டும்,,

படுக்கையில் இருக்க,,

நான் மெல்ல பறந்து,,

ஜன்னலின் வழியே,,

வெளியேற முற்பட்டதுண்டு..

**
அவ்வப்போது,,

சிறுவனாகிய என்னை,,

இறைவன் அழைப்பார் போலும்..

இன்றும் நினைவிருக்கிறது,,

உடல் இருக்க,,

நான் மட்டும் அந்தரத்தில் உலவியது..

**
நான் மனதார நேசித்த,

என் நண்பனின் தந்தை,,

இறந்தபோது கூட,,

அதே வினாடிகளில்,,

அவர் என் கனவினில் வந்து சொல்லி,,

சென்றதும் நினைவிருக்கிறது..

அன்று குழந்தை உள்ளத்தோடு இருந்தேன்.

அதனால்தானோ அந்த சம்பவங்கள்.?

**
இன்று,, ?!!

கனவுகள் வருகின்றன,

வெறும் பயங்கர கனவுகள்.,,

சர்ப்பம் எனை தீண்ட,,

பிறிதொரு கனவில்,,

நடுநிசி பேய்கள் எனை துரத்த,

நான் எங்கோ தடம் மாறி விட்டேன் ,,

என்று புரிகிறது,, இப்பொழுது..

**
ஆம்,,

அறநெறி வாழ்விலிருந்து,,

சற்றே எங்கோ சறுக்கி இருக்கிறேன்..

அதன் விளைவுதான்,

இன்றைய துயரங்களும்,,

பயங்கர கனவுகளும்.

சிறு புள்ளியாய் நான்......

பின்னிரவின்,,

நிசப்தம் சிலிர்த்தது....

உடல் கோரை பாயில் படுத்திருக்க,,

வானமே கூரையாய்,

மொட்டை மாடியில்,,

உறக்கம் தடைபெற,,

விழித்திருந்தேன்..

**
வானம்,

கருமை நிறத்தோடு,,

எண்ணற்ற விண்மீன்களை,,

தன்னுள்ளே கொண்டு,,

வட்ட நிலவையும்,,

தனக்குள்ளே வைத்து,,

மெல்லிய வெளிச்சத்தால்,,

என்னையும்,,

பூமியையும் ஒருசேர,

நனைத்து கொண்டு இருந்தது..

**
நான்,,

மனம் நிறைய கேள்விகளோடு,,

வானம் பார்த்தபடி,,

ஓரளவிற்கு பிரபஞ்சம் அளந்தபடி,,

கண்ணில் தெரியாத,,

சிறு புள்ளியாய்,,

புரண்டு கொண்டிருந்தேன்,,

**
பிரபஞ்சத்தில்,,

கலந்துவிட போகும்,,

இந்த உடலோடு,,

இந்த ஆன்மாவும்,,

ஏனோ சோர்வுற்று இருந்தது,,

விடை அறியாது..

கதைகள் பேசியபடி

அந்தி பொழுதில்,,

அவர்கள்,

வெளிநாட்டு குளிர்பானங்கள்,,

வெளிநாட்டு உணவுகளோடு,,

கடற்கரையோர பளபளக்கும்,,

உணவகங்களில்,,

கை நிறைய சம்பளம் பெரும்,,

இளைஞர்களும் ,,

இளைஞிகளும்,,

காதலித்தபடி,,

அல்லது,,

கதைகள் பேசியபடி,

உலகை மறந்து..

மகிழ்வோடு இருக்கிறார்கள்..

வாழ்த்துக்கள்..

****
அங்கே,,

கொட்டடி சாலைகளில்,,

அடைபட்டு,

வீடிழந்து,, எல்லாம் இழந்து,,

சதைகள் பிய்ந்து,

வலிகளோடு,,

கதறல்களோடு,,

போராடும் இளைஞர்கள்,

இளைஞிகள்,,

மற்றும் முதியோர்..

இவர்களுக்கு வாழ்க்கையே போராட்டம்.

கை கொடுப்பார் யாருமில்லை..

**
அவர்களுக்கோ,,

எதை பற்றியும் கவலை இல்லை.

கை நிறைய சம்பளம்,,

தன் வாழ்க்கை,,

காதல் என்ற பெயரில்,,

அழகிய பெண்ணோடு சிநேகிதம்,,

பொழுதுபோக்கு என்றபடி..,

கழிகிறது அவர்கள் பொழுது.

**
இவர்கள் கேள்விக்குறிகளை சுமந்தபடி.

உலகெங்கும் இந்த வேறுபாடுகள்,,

நிறைந்திருக்கின்றன..

**
அப்பட்டமான சுயநல பதவி,, இன வெறி,,

பிடித்தவர்களும்,,

ஊழல் செய்து சொத்து சேர்பவர்களும்,,

அரசியல்வாதிகளாக இருக்கும் வரை,,

தொடர்ந்து இந்த வேறுபாடு இருந்து கொண்டேதான் இருக்கும்..

இந்த வேறுபாடுகள்தான்,,

அரசியல் பிழைப்போரின் பிழைப்பிற்கு வழி..

**
அரசியல்வாதிகள்..

என்றுமே வெறுப்பிற்கு உரியவர்களே,,

இந்நிலை தொடர்ந்தால்..

ஒற்றை மனிதனாய்...

சிறு தூறலில் இருந்து,,

விலகி சென்று விட்டேன்..


நானாகவோ,,


இல்லை எதுவோ,,

என்னை அகற்றி விட்டது,,


அங்கிருந்து..


**

கொடியதொரு, வெற்று ,,

வனாந்திரத்தில்,,


தகிக்கும் சூரிய கதிர்களின்,,


சித்திரவதையை,,


உள்வாங்கி கொண்டே,,


சர்ப்பங்கள் நர்த்தனமாட,,


ஒற்றை மனிதனாய்,,


தூர தெரியும்,,

பசுமை பள்ளத்தாக்கை,,

பார்த்தபடி ,,

நின்றுகொண்டிருக்கிறேன்,,

முன் செல்ல வழியின்றி..

உருவமற்ற மனது,

சிறிதாய் சிறிதாய்,

உதிர்ந்து கொண்டிருக்கிறேன்.

உருவமற்ற மனது,,

மெளனமாக தவிக்க,,

மெல்ல அத்திசை கண்டு,,

அவள் வருகை எதிர்நோக்கி,,

காத்திருக்கிறேன்,,

என் காதலின் பதிலுக்காக,,

**
காணவில்லை,

இன்றுவரை,,

*
இருப்பினும்,

நம்பிக்கை கொண்டு,,

காத்திருக்கிறேன்,,

நடுத்தர பருவம் ,,

தீர்ந்த பின்னும்..
 
 
*காதல்.. அழகிய காதல் *

நான்...

நான்...

சுயநலம் அற்று,,

கள்ளம் அற்று,


கபடு அற்று,,

சிரித்த முகம் கொண்டு,,

உலவியதால்,,

கள்ளம் கொண்ட,,

வஞ்சம் கொண்ட,,

மனிதர் சிலரால்,,

ஏமாற்றப்பட்டவன்.
 
****
 
நான்,,

ஒரு பிம்பம் ,,


அல்லது,,


வேறு எங்கோ,,

எதுவோ,,


இயக்க ,,


இங்கே இயங்கும் ,,


அற்ப இயந்திரம் போல,,


நான்...


அவ்வளவே நான்..
 
***
நான்..

அன்றொரு நாளில் ஏதுமற்றவன்,,


ஏதும் அற்று இன்றும்,


பிறிதொரு நாளில்,,

ஏதுமற்றவனாகவே, எங்கோ செல்வேன்..


அவ்வளவே நான்..
 
**
 

 

Thursday, 16 August 2012

கனவுகள் ...

நான் கனவுகள் பல கண்டவன்..

இந்த பரந்த உலகில்,,

நான் மட்டுமே மகிழ்வானவன்,,

என் கனவுகளில்..

**
அவ்வப்போது,

இந்த பூவுலகில் இருந்து,,

பிரிந்து,,

அவ்வப்போது வான வெளியில்,,

பிரபஞ்சத்தில் திரிவேன்..

எல்லாம் என் சிறுவயது,,

கனவுகளில்..

**
சற்றே இளைஞனாக,

உருவம் பெற்ற பின்,,

ஏனோ,,

சில உண்மை கனவுகள்,,

படை எடுத்தன..

**
என் நண்பரின் தந்தை,

இப்பூவுலகில் இருந்து,

விடைபெற்ற போது,

என் கனவினில் வந்து,,

சொல்லி விடை பெற்று சென்றார்,..

**
அப்பொழுதெல்லாம் சிறிது,,

நேர்மையானவனாக இருந்திருக்க வேண்டும்..

அதனால்தான்,

சில நேர்மையான கனவுகளை,,

கண்டிருக்க வேண்டும்..

**
பிறகு புரட்டி எடுத்த,,

வாழ்வியல் சூழலில்,,

சற்றே தடுமாற்றம் அடைந்த போது,,

விலங்குகளிடம் இருந்து,,

தப்பிப்பதே என் கனவுகளில் ,

என் முக்கிய பணியாக இருந்தது..

**
அவ்வபொழுது,,

நிஜத்தை போலவே நிகழ்ந்த,,

ஆவி கனவுகளின் பயங்கரங்கள், வேறு..

**
தொடர்ந்த நிஜ வாழ்வின் ,,

வீழ்ச்சியில்,,

கனவுகள் பயங்கரமாக உருவெடுத்து,,

சர்ப்பம் தீண்டும் அளவிற்கு,,

வலுபெற்றது..

**
சற்றே நிதானித்து,,

சிந்தித்த பொழுது,,

நான் நிஜத்தில் ,,

தெளிவாக சறுக்கி இருக்கிறேன்..

சற்றே, அற நெறி தவறி இருக்கிறேன்..

**
கனவுகளின் பயங்கரத்தின்,,

அர்த்தம் புரிந்து,,

இப்போது,

மெளனமாக இருக்கிறேன்,,

உயிர் துடிப்பின் ஓசையை மட்டும்,,

கேட்டபடி..


** வாழ்வியல்.. கனவுகள் உணர்த்தும் நெறிகள் **

முழுதாக,, மறைந்தேன்..

மெல்ல விடுபட்டேன்,,

உறக்கத்தின் பிடியிலிருந்து..

குளிர்ந்த நீரால்,,

முகம் கழுவி,,

தொலை தூரம் செல்ல,,

ஆயத்தமானேன்..

**
இந்த பின்னிரவு பொழுதுகளில்,,

தனியே சுற்றுவது,,

நிரம்ப பிடிக்கும்..

அதுவும்,,

வனம் சார்ந்த பகுதிகள் பிடிக்கும்..

**
நிச்சய ஆபத்து,,

அங்கே அந்த வனத்தினூடே காத்திருக்கும்..

இருப்பினும்,,

அங்கு செல்லத்தான் மனது,,

இந்த பின்னிரவில்,

பிரியப்படுகிறது..

**
விரைந்தேன்.,,

நகரை பின்னோக்கி நகர்த்தியபடி..

வனம் வந்தது..

**
கடும் வெப்பத்தில்,,

வியர்த்த உடலில்,

சட்டென்று அடித்த தென்றலை,,

போல ஒரு உணர்வு..

**
வெகு ஜாக்கிரதையாக,,

காலடி வைத்தேன், வனத்தினுள்..

நிதானம்,, என்னுள்ளே,

சற்றே விழிப்பும் கூட..

**
சரசரவென்ற புற்களின்,,

சப்தம் தேவை இன்றி,,

சர்ப்பத்தை நினைவூட்டியது..

பார்த்து பார்த்து ,,

நிசப்தம் கெடாது,,

என் காலடி எடுத்து வைத்தேன்..

**
மிருகங்களின் வாசனை வேறு,,

ஆங்காங்கே  உணர்ந்தேன்..

மெல்ல மெல்ல முன்னேறினேன்...

கலவையான உணர்ச்சிகளோடு,

ஒரு அடர்ந்த பகுதியை ,,

அடைந்தேன்..

**
விலங்குகளுக்கு தெரிந்திருக்கும்,,

யாரோ ஒரு மனிதன் உள்ளே,,

நுழைந்துவிட்டான் என்று..

இருப்பினும் அமைதி காத்தன,,

மனிதன் நிச்சயம் தவறு செய்வான்,,

அப்போது தாக்கி கொள்ளலாம் என்று,,

நினைத்திருக்கும் போல..

**
அடர்ந்த புதர் ஓரமாக,,

தெரிந்த சிறு சமவெளி,,

புல்வெளியை நோக்கி,,

மெல்ல முன்னேறி கொண்டு ,,

இருந்தேன்..

**
நேரம் செல்ல செல்ல,,

பின்னிரவின் இருளில்,,

வனத்தினுள்ளே,,

முழுதாக,,

மறைந்தேன்..

Sunday, 12 August 2012

தொடர்ந்த பயணத்தில்

தொடர்ந்த பயணத்தில்,,

ஜனனம் முதல்,,

பயணம் தொடர்கிறேன்...

**
தொடர்ந்த பயணம்,,

முற்று பெறும் ஓர்நாள் என்று,,

தெரியும்..

**
அந்த தெரியாத நாளை,,

நினைத்து,,

சிலிர்ப்போடு தொடர்கிறது,,

பயணம்..

அன்றே நான்...

அன்றே நான்,,

வாழ்ந்து மடிந்திருக்க வேண்டும்..

ஆம்,

அந்த காலகட்டத்தில்,,

வாழ்ந்திருக்க வேண்டும்.

**
உழைத்து வாழ்ந்த,

மக்களோடு..

மகத்தான தலைவர்கள்,,

வாழ்ந்த அந்த காலத்தில்,,

நான் வாழ்ந்திருக்க வேண்டும்.

**
ஆம்,,

சுதந்திர தீயின் போராட்டத்தில்,,

பங்கெடுத்து என் வாழ்வை துவக்கி,,

பின் நாட்களில்,,

உழைப்பை மூலதனமாய்,

நீதி நெறி கொண்ட மக்களோடு,,

பாமர வெள்ளந்தி மனிதர்களோடு,,

நான் கலந்திருக்க வேண்டும்..

**
பிறிதொரு நாளில்,

என் மனம் கவர்ந்த தலைவர்கள்,,

கக்கன்,, காமராஜர்,,

பெரியார்,

போன்ற தலைவர்கள்,,

மரணித்த போது,

நானும் மரணித்திருக்க வேண்டும்..

**
அப்படி மரணத்திருந்தால்,,

நிம்மதியாக பிரபஞ்சத்தில் ,,

உறங்கி கொண்டிருக்கும் என் ஆன்மா..

**
அந்த நல்ல தலைவர்கள்,,

மறைந்த பின்னே,,

பிறந்து,,

இன்றைய விஞ்ஞான உலகத்தில்,

நேசம் தொலைத்த மனிதர்களோடு,,

கலந்து,,

ஊழல் அரசியல்வாதிகளின் செய்திகளை,

படித்து கொண்டே,,

வாழும் கொடுமையை,,

அனுபவித்து இருக்க கூடாது..

**
ஏதோ பாவம் செய்திருக்கிறேன்,,

முற்பிறவியில்,,

அதனால்தான்,

நல்ல மனிதர்கள் எல்லாம் ,

மறைந்து போன பிறகு,,

பிறந்திருக்கிறேன் போலும்..

மரணத்திற்கு பிந்தைய நிலை..

மெல்ல..

நினைவற்றேன் சில வினாடி.


உயிரும்,, மனமும்,,


எங்கோ ஒன்றினையும்,,

புள்ளியில்,,


அமைதி கொண்டேன்..


**

'நான்' இழந்தேன்,,

என் சொல் இழந்தேன்,,


புவி இழந்தேன்,,.


**

எதுவுமற்று,,

மனதும்,, உயிரும் இணைந்த,,


அந்த புள்ளி பிரதேசத்தை,


வெறுமையாய்,,


சலனமற்று,,


வெற்றிடமாக மாற்றி கொண்டேன்..


**

சில வினாடிகள்,,

சில நிமிடங்களாக மாறி,,


சில நிமிடங்கள்,,


சில மணி நேரமாக கழிந்த பின்,,


மெல்ல,,


புவிக்குள் இறங்கினேன்..


**

நினைவில் 'நான்' அமர்ந்தேன்..

கண்களை அகல திறந்தேன்,,


புத்துணர்வில் நனைந்தேன்..


அந்த சில மணி நேரத்தை ,


நினைத்தேன்,,


**

நான் எதுவுமற்று இருந்த,,

நிகழ்வு புரிபடவில்லை..


ஏதும் இல்லை அப்போது..


**

சற்றே நிதானித்த பின்,

மெல்ல புரிந்தது போல இருந்தது,


இப்போது,, ,,


மரணத்திற்கு பிந்தைய நிலை.
. ,

Friday, 10 August 2012

அவர்களுக்கு, தெரியவில்லை

அவர்களுக்கு, தெரியவில்லை..

பிழைக்க தெரியவில்லை..

சொத்தும் சுகமும்தான் பெரியது,,

என்று எண்ணவில்லை..

**
அவர்கள் பாவம்,,

கள்ளம்,, கபடு, சூது, அறியாது,,

வாழ்ந்து சிறை சென்று,,

கொடுமைகளை அனுபவித்தார்கள்..

**
இன்றுள்ளவர்களை போல,

சொத்து சுகம் என்று அனுபவிக்க தெரியவில்லை,.

தன் குடும்பம்தான் பெரிதென எண்ண தோன்றவில்லை..

பாவம் அவர்கள்..

இருந்த ஒரே வாழ்க்கையையும்,,

சுதந்திர போராட்டத்திற்காக தியாகம்,

செய்து விட்டார்கள்.

**
பாவம் அவர்கள்..

இந்த மக்களை பற்றி தெரியவில்லை..

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைத்தான்,,

தேர்ந்தெடுப்பார்கள் என்று,,

அன்றே தெரிந்திருந்தால்,,

பாவம் அவர்கள் வேலையாவது பார்த்திருப்பார்கள்..

**
எது எப்படியோ..

அந்த முகம் தெரிந்த,, தெரியாத,,

சுதந்திர போராட்ட தியாகிகளை..

அவர்தம் தியாகங்களை,,

மக்களாகிய நாம் கொச்சை படுத்திவிட்டோம்..

**
ஆம், தவறு நம்மேல்தான்..

அரசியல்வாதிகளை குறை கூறி,,

இனி ஒன்றும் ஆக போவதில்லை..

*
வாழ்க சுதந்திரம்..

சாதாரணமானவர்கள்

இன்னும் சில தூரம்,,

முடிந்து விடும் வாழ்க்கை..


**


உடலற்ற ஆன்மா,,

பரந்து விரிந்த பிரபஞ்சத்தில்,


ஆனந்தமாக திரியும்..


**

இங்கே,,

வாழ்ந்த காலத்தின் ,,


அழியாத நினைவுகளோடு,,


நேசம் கொண்ட உறவுகள்,,


வாழ்ந்து கொண்டு இருக்கும்,,


**

இந்த பிரபஞ்சத்தின்,,

ஒரு கோடியில் இருந்து,,


மறு கோடி வரை,,


ஆன்மா அலைந்து திரிந்து,,


மீண்டும் பிறப்பெடுக்கும்,


ஓர்நாள்...


**

அது,,

உடலோடு,


மனிதனாகவோ,,


அல்லது விலங்காகவோ..


அல்லது,,


ஆன்மா, மரித்தும் போகலாம்..


**

இறுதியில்,,

நான் இல்லை..


எதுவும் இல்லை..


உயிர் இல்லை,,


உடல் இல்லை,,


ஆன்மா இல்லை..


**

நாம்,,

ஏதோ ஒரு சக்திக்கு,,


கட்டுப்படும்,,


மிக சாதாரணமானவர்கள்..

துயரம் சூழ்ந்த பின்

மனம் நிறைய,,

துயரம் சூழ்ந்த பின்,,

வலியுற்று வீழ்ந்த பின்,,

வறுமையோடு இணைந்த பின்,,

சுற்றம் நம்மை விலக்கிய பின்,,

கண்ணீர் கூட இன்றி கண்கள் காய்ந்த பின்,

தத்துவ மேதையும் ,,

அர்த்தமுள்ள கவிஞனும் ,,

ஜீவனுள்ள எழுத்தாளனும்,

சிரிக்க வைக்கும் அற்புத கலைஞனும்,,

பிறப்பெடுக்கிறான்..

வேதனையில் மரங்கள்..

பதட்டம் தொடர்கிறது ..

தன் இனம் தொடர்ந்து,


அழிக்கப்பட்டு வருவதை கண்டு,,


வேதனையில் இருக்கின்றன மரங்கள்..

இருப்பினும் துயரம் தொடர்கிறது..


மனசாட்சி அற்ற,,


மரம் வெட்டி மனிதர்கள் மீது,,


கடும் கோபம் கொண்டிருக்கின்றன,,


நிழல் தரும் மரங்கள்.

* மறவேன் என்றும் *

என் சின்னஞ்சிறு வயதில்,,

என்னருகே வாழ்ந்த,,

வயதான பெரியவர்கள்,,

மரணித்த நாட்கள்,,

நினைவில் வருகிறது..

கண்கள் கலங்க,,

அருகில் நின்றவர்கள் நினைவிற்கு,,

வருகிறார்கள்..

**
அன்றைய பெரியவர்கள்,,

என் போன்ற குழந்தைகளிடம்,,

பழகிய விதம் நினைவிற்கு,,

வருகிறது..

**
அவர்களுக்கு தெரிந்த அறிவுரை எல்லாம்,

முடிந்த வரை புராணங்களில் இருந்துதான்,,

வரும்..

**
அவர்கள் வாழ்ந்த விதம்,,

அவர்கள் பேசிய விதம்..

அவர்கள் பழகிய விதம்,,

எல்லாமே,

அழியாத என் நினைவு பொக்கிஷங்கள்..

* மறவேன் என்றும் *

Saturday, 4 August 2012

காற்றே நீ போ

அம்மா..

மொட்டை மாடியில்,,

துணி உலர்த்தி கொண்டு இருந்தாள்..

காற்றில் படபடத்தன,,

துணிகள்..

**
பறந்து செல்ல எத்தனித்த துணிகளை,,

போராடி,,

உலர்த்தி கொண்டிருந்தாள்..

அருகில் நின்றிருந்த,,

அவளின் இரண்டரை வயது அன்பு மகனுக்கு,,

தாய் சிரமப்படுவதை கண்டு,,

வருத்தம்..

**
வருத்தம் கோபமாக மாறி,,

சுழற்றி அடித்த காற்றை நோக்கி,,

' காற்றே நீ போ,,

கிட்ட வந்தே தொலைச்சுடுவேன் "

என்று காற்றை மிரட்டி ,,

காற்றுடன் போராடினான்..

**
இதை கண்ட தாய்க்கு,,

அப்படி ஒரு மகிழ்வு..

மகனின் மீது..

****
பி.கு :

என் வீட்டில் நடந்த நிகழ்வு இது..
**

சுதந்திர தினம்

பரபரவென்று இயங்கி ,

கொண்டிருக்கிறார்கள் ,,

தொழிலாளர்கள்..

**
சுதந்திர கொடிகளும்,,

பேனர்களும்,,

விதவிதமான வடிவமைப்பில்,,

வேகமாக தயாராகி கொண்டிருக்கின்றன,,.

**
பெரும் ஆர்டர் கிடைத்த திருப்தியில்,,

முதலாளிகள்,,

தொழிலாளர்களை வேலை வாங்கி,

கொண்டிருக்கின்றனர்..

**
இன்னொரு பக்கம்,,

சுதந்திர வரலாற்றை,,

கணக்கெடுத்து,

அறிக்கைகளாக மாற்றும் பணியில்,,

அரசியல்வாதிகளின்,,

உயர்மட்ட குழுக்கள் ,,

இயங்கி கொண்டிருக்கின்றன..

**
இனி சுதந்திர தினம் எங்கும்,

இந்த தேசத்தின் கொடி,,

பட்டொளி வீசி பறக்கும்..

தலைவர்கள் எல்லாம்,,

பரபரப்பாக குண்டு துளைக்காத ,,

காரில் போய் இறங்கி,,

பாகிஸ்தானுக்கும்,

சீனாவிற்கும்,,

தீவிரவாதிகளுக்கும் சவால் விடுவார்கள்..

**
ஆங்காங்கே நாடெங்கும்,,

மற்ற தலைவர்கள்,,

அழகிய கார்களில் பறந்து,,

சென்று சுதந்திரத்தை,,

கொண்டாடுவார்கள்..

**
இங்கே,,

ஒரு கிராமத்தில்,

ஒருவன் இதேல்லாம் வேடிக்கை பார்த்தபடி,,

எப்போதும் போல,

கூலி வேலை செய்து கொண்டு இருப்பான்..

**
இவன்..

ஒருவேளை,,

அன்றைய சுதந்திர போராட்டத்திற்காக,,

கோடிக்கனக்கான சொத்துகளை,,

தானம் செய்த தலைமுறையின்,,

வாரிசாக கூட இருக்கலாம்..

**
ஆக,,

சுதந்திர தினம் கொண்டாட போகிறோம்.

**

பாரீசிலிருந்து......
நேற்று முன்தினம்தான்,,

பாரீசிலிருந்து கிளம்பினேன்..

அதற்குள் ,,

ரியோ டி ஜெனீரோ வில்,,

ஒரு கருத்தரங்கம்,,

இருப்பதை நினைவு படுத்தினார் என் காரியதரிசி..

**
உடனே அங்கு சென்று,,

ஆலோசனை முடித்துவிட்டு,,

அங்கிருந்து,,

அர்ஜென்டினா சென்று,,

மரடோனவை பார்த்து,,

அவருடன் ஒரு நாள்,,

ஊர் சுற்றி பார்த்துவிட்டு,,

ஊர் திரும்பலாம்,,

என்று நினைத்த வேளையில்,,

டொராண்டோவில் இருந்து,,

நண்பர் ஒருவர் போன்..

**
அவசியம் வரசொன்னதால்,

அங்கு சென்றுவிட்டு,,

வரும் வழியில்,,

துபாய் நண்பர்களை சந்தித்து,,

பிறகு,,

ஊர் வந்ததும்,,

அடுத்த நிமிடமே (??!!)

அலுவலக வேலையாக,,

நியூசிலாந்து நாட்டின்,,

வெலிங்டன் நகருக்கு செல்லும்,,

சூழல்..

**
ஒரு வழியாக முடித்துவிட்டு,,

சிட்னி சென்று,,

காலை உணவருந்தி,,

மதிய உணவிர்க்குள் சிங்கப்பூர் சென்றுவிடும்,,

அவசரத்தில் பயணித்தேன்..

**
சிங்கப்பூரில் மதிய உணவருந்தி,,

சென்னை வந்து சேர்ந்தபோது,,

மாலை தேநீர் நேரம்..

தேநீர் அருந்திவிட்டு,,

கோயம்புத்தூர் செல்ல காத்திருந்தேன்..

**
ரயில் வந்ததும் ஏறி,,

கோயம்புத்தூர் வந்து சேர்வதற்குள்,

பொழுது விடிந்து,,

உறக்கம் கலைந்தது..

படபடப்பு..பதட்டம்

பதட்டம் அடைகிறது,,

உள்ளம்,.


சிக்கலான நேரங்களில்..


**
பதட்டம் தணிக்க,

பெரு முயற்சி மேற்கொண்டாலும்,


பதட்டம் ஏற்படுவதை,,


தவிர்க்க இயலவில்லை..


**

காரணமற்ற இந்த படபடப்பு,,

இதய துடிப்பை அதிகரித்து,,


தேவை அற்ற மன பயத்தை,,


கிளப்பி விடுகிறது..


**

சில சிக்கலான,,

நிகழ்வுகளில் வரும் படபடப்பு தவிர,,


தனிமைகளில்,,


சில எண்ணங்கள்,, அல்லது சூழல்,,


தரும் படபடப்பு,,


அதிகரித்து கொண்டே இருக்கிறது,,


சமீபமாக..


**

என்றெல்லாம் வீழ்ந்து விடுகிறோமோ,,

அல்லது,,


பொருளாதரத்தில் தாழ்ந்து,,


திக்கற்று செய்வதறியாது,,


நிற்கும் காலங்களில்,,


வரும் படபடப்பும் மிக மோசமான,,


மன பயத்தை தருகின்றன..


**

படபடப்பு...

நிகழ்வுகளை கண்டபோது வருவதை விட,,


தனித்த சூழல்களில்,,


எண்ணங்களின் ஆக்கிரமிப்பால்,,


வரும் படபடப்பு,,


கோர முகம் காட்டி,,


என்னை பயமுறுத்தவே செய்கிறது..


**

உறக்கம் கெட்ட பின்னிரவுகளில்,

என் இதயம் இந்த படபடப்பால்,,


அளவுக்கதிகமாகவே துடிக்கிறது..


**

வேறு வழியின்றி,,

இப்போது தியானத்தில்...