என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 17 December 2012

புழுதி காடு..

** நினைவுகள் **

எனக்கு பிடித்த,

புழுதி காடு..

**
வெற்று காலில்,

புழுதி படிய,

முட்கள் பாதம் கிழிக்க,

மண் தூவி, ,

மருத்துவம் செய்து ,

ஓடி திரிந்ததொரு காலம்..

**
ஆங்காங்கே,

சர்ப்பம் கண்டு,

பயந்து ஒளிந்ததொரு காலம்..

**
இரவு நேரங்களில்,

இந்த புழுதி காட்டின் மத்தியில்,

கூரை வீட்டின் வெளியே,

உறவுகள் இணைந்து,

உறங்கியதொரு காலம்..

**
எல்லாம் தித்திப்பு நினைவாக,

கண்ணீர் சுமந்தபடி,

இன்று நான் வெறும்,

புழுதி காட்டை தரிசிக்கிறேன்,

தனிமை சூழ..

சிறிது காமம் சேர்த்து..

காதலை கொண்டாடி, 
காதலோடு, 
சிறிது காமம் சேர்த்து, 
உன்னோடு, 
வாழ்வு துவக்கிட, 
ஆசை எனக்கு..

உன் இதழ்களில்,
ஒளிந்திருக்கிறது,
உன் சம்மதம்...

உன் இதழ்களை,
நோக்கி,
காத்திருக்கிறேன்,
தவிப்பாக..

அரசியல்வாதிகள்..

அந்தி பொழுதில்,,

அவர்கள்,

வெளிநாட்டு குளிர்பானங்கள்,,

வெளிநாட்டு உணவுகளோடு,,

கடற்கரையோர பளபளக்கும்,,

உணவகங்களில்,,

கை நிறைய சம்பளம் பெரும்,,

இளைஞர்களும் ,,

இளைஞிகளும்,,

காதலித்தபடி,,

அல்லது,,

கதைகள் பேசியபடி,

உலகை மறந்து..

மகிழ்வோடு இருக்கிறார்கள்..

வாழ்த்துக்கள்..

****
அங்கே,,

கொட்டடி சாலைகளில்,,

அடைபட்டு,

வீடிழந்து,, எல்லாம் இழந்து,,

சதைகள் பிய்ந்து,

வலிகளோடு,,

கதறல்களோடு,,

போராடும் இளைஞர்கள்,

இளைஞிகள்,,

மற்றும் முதியோர்..

இவர்களுக்கு வாழ்க்கையே போராட்டம்.

கை கொடுப்பார் யாருமில்லை..

**
அவர்களுக்கோ,,

எதை பற்றியும் கவலை இல்லை.

கை நிறைய சம்பளம்,,

தன் வாழ்க்கை,,

காதல் என்ற பெயரில்,,

அழகிய பெண்ணோடு சிநேகிதம்,,

பொழுதுபோக்கு என்றபடி..,

கழிகிறது அவர்கள் பொழுது.

**
இவர்கள் கேள்விக்குறிகளை சுமந்தபடி.

உலகெங்கும் இந்த வேறுபாடுகள்,,

நிறைந்திருக்கின்றன..

**
அப்பட்டமான சுயநல பதவி,, இன வெறி,,

பிடித்தவர்களும்,,

ஊழல் செய்து சொத்து சேர்பவர்களும்,,

அரசியல்வாதிகளாக இருக்கும் வரை,,

தொடர்ந்து இந்த வேறுபாடு இருந்து கொண்டேதான் இருக்கும்..

இந்த வேறுபாடுகள்தான்,,

அரசியல் பிழைப்போரின் பிழைப்பிற்கு வழி..

**
அரசியல்வாதிகள்..

என்றுமே வெறுப்பிற்கு உரியவர்களே,,

இந்நிலை தொடர்ந்தால்..

இது காதல் அன்றி....

** பிரியமுடன் **

என் பிம்பங்கள்,

உனக்குள் கால போக்கில்,

தொலைந்து போகும்..

என் நினைவுகள்,

உன்னுள் அழிந்தும் போகும்..

*
எல்லாம் மாயை என்று,

வாழ்வும் நகரும்...

**
ஆனால்,

வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில்,

அல்லது,

கஷ்ட கணத்தில்,

உனக்குள் நிச்சயம்,

நான் அல்லது,

என் காதல் அதிர்வு,

ஒரு வினாடி நேரம்,

வந்து போகும்..

**
இது நிதர்சனம்..

இது காதல் அன்றி வேறில்லை..

** பிரியமுடன் நான் **

** பிரியமுடன் **

** பிரியமுடன் **

மனம்,

மெலிதாய் அதிரத்தான் ,

செய்கிறது இன்னமும்,

உன்னை காணும்போதெல்லாம். ..

**
என் செய்ய?

இன்றைய சூழல்,

மௌனிக்க மட்டுமே..

**
ஏனோ,

இப்போது, மனதும் சேர்ந்து,

மௌனிக்கிறது..

**
சூழல் புரிபட,

பக்குவம் பெற்றதோ, மனது ?

** பிரியமுடன் நான் **

தவிப்போடு..

பல பல பிரியங்களுடன்,

அவனின் நினைவுகளில்,

சற்றே காமம் கலந்து,

கனவுகளில்,

மிதக்கிறாள்,

அவள்...

**

அவள்...

அழகியலின் உச்சத்தில் மிதக்கும்,

புது மண பெண்..

**
புதிய உலகை,

தரிசிக்க,

அவனின் அருகாமை,

எதிர்பார்த்து,

தவிப்போடு,

முதலிரவில் காத்திருப்பு,

தொடர்கிறது,

காலம் காலமாக..

** காதல் இனிது **

** காதல் இனிது **

அழகிய ரோஜா, இதழ்களை,

ஒன்றிணைத்து,

கோர்க்கப்பட்ட அவளின்,

அழகிய உதடுகளுக்கு,

மிக அருகில்,

நிறுத்தி,

காதலிக்க துவங்குகிறான்,

அவன்..

**
அவன் காதலன்,,

ஆண்மை அங்கே,

சற்றே தலையில் கனம் ஏற்றியபடி..

மிதக்கிறது உற்சாகத்தில்..

**
பெண்மை,

ஏனோ தவிப்பாய்,

சற்றே பயம் கொண்டு,

வெகுவாய் மகிழ்வு கலந்து..

** காதல் இனிது **