என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 20 February 2012

மூதாட்டிகள்..

மூதாட்டிகள்..
கிராமத்து மூதாட்டிகள்..
இப்பொழுதெல்லாம் ,,

கிராமங்களில் கூட இந்த மூதாட்டிகள் ,,
அரிதாகி வருகிறார்கள்..
அழகிய வெற்றிலை கிண்ணத்தில்,,
வெற்றிலையும் பாக்கும் நிரப்பி,,
அழகிய தாளத்துடன்,, இடித்து,,
காதோரம் பெரிய குண்டலங்கள்,,
அசைந்தாட,,
வெள்ளந்தி மனதுடன்,
கிராமத்து வாசனையை,, தன் பேச்சில் வைத்து கொண்டு,,
அன்பு உபசரிப்பில்,
விருந்தினரை கவனித்து,,
குழந்தைகளுக்கு கதைகள் பல சொல்லி,,
தாலாட்டி தூங்க வைத்த,,
நம் கிராமத்து மூதாட்டிகளை,,
இப்பொழுதெல்லாம் காணவில்லை..
ஏனோ வலிக்கிறது நெஞ்சம்,,

கனவு காதலன்,,

முற்றிலும் நனைந்த,,

ஒரு மழை நேரத்தில்..

உடலெங்கும் சிதறிய மழை துளிகளின்,, தாக்கத்தில்,

மெல்ல உடல் நடுங்கியது.

மழையும்,, சாரலும்,,

... கண்ணை மறைத்த அந்த நேரத்தில்,

மெல்லிய வாசனை,,

என் மேனியெங்கும் வியாபித்து,,

அந்த மழை வாசனையை கூட,,

லேசாக மங்க செய்தது.

சாரலில் நனைந்த துப்பட்டாவால்,

நீர் வடிந்த முகத்தை ஒற்றியபடி,,

அவளின் அருகாமை,,

மழையின் குளிர்ச்சியைவிட,,

இன்னும் அதிகமாக குளிர செய்தது,,

மெல்ல ஒரு வினாடியில்,,

என்னை கண்டுகொண்டாள்,,

ஒரு சிறிய சிநேக சிரிப்பில்..

என் உள்ளம் முழுதும் கொள்ளை கொண்டவள்..

மெல்ல உதடு திறந்து,,

என் நீண்ட கால காதலை ,,

ஏற்றுக்கொண்டாள்.

மகிழ்ச்சியில்,,

மழை நிரம்பிய ,,

அந்த மலை பிரதேசம் முழுதும் ,,

எதிரொலிக்க,,

உற்சாக குரல் எழுப்பியபோது,,,

நன்றாகவே பொழுது விடிந்து விட்டிருந்தது..

தெளிந்த வானம்,,

தெளிந்த வானம்,,

அழகிய குழந்தைகளை போல..

கண் சிமிட்டும் நட்சத்திர கூட்டம்,,

பின்னிரவு தனிமையில்,,

மனம் மெல்ல விண்மீன் குழந்தைகளை ரசிக்க தொடங்கியது.

ஒரு குழந்தை மட்டும் ஏனோ வேகம் பிடித்து,,

எங்கோ விரைந்து சென்றது.

விழிகளை அதன் மேல் படர விட்டு,,

நானும் பின் தொடர்ந்தேன்,,

சற்றே சிரமத்துடன்,,

என் பார்வையை அதன் மேல் செலுத்தி,,

வழியெங்கும் தொடர்ந்தேன்.

அதன் வேகம்,, பெரு வேகமானது,,

அதன் வேகத்தில்,,

சட்டென்று பளீரென்று மின்னி மறைந்து,,

எங்கோ என் பார்வையில் இருந்து ,,

தப்பி விட்டது.

தேடலை தொடர இயலாமல்,.,

மனம் தவிப்படைந்து,,

பின்,,

வெறுமை அடைந்தது..

Friday 17 February 2012

எங்கிருந்தோ வந்து,

எங்கிருந்தோ வந்து,,

இப்புவியில் இறங்கி,,

வழிப்போக்கன் போல..
...
அங்கிங்கு அலைந்து,,,

சில பல கடமைகள் முடித்து,,

ஓய்வு எடுக்கும் நேரம்,,

மற்றுமொரு பயணம்,,

இப்புவியிலிருந்து ,,

எங்கோ...

இந்த நீண்ட பயணத்தின்,,

சில கஷ்ட நொடிகள்..

இப்புவியில் பயணிக்கும் காலம் மட்டுமே,,

மீண்டும்,,

ஜனிப்போம்,, என்றாவது,,, எங்காவது,,

அழகிய காதல்,...

வறண்ட பிரதேசம் ,,

வெயில் என்ற அரக்கனின் கோர பிடியில் ...


வியர்வை எரிச்சலோடு வழிந்தோட..


கண்கள் மெல்ல இருண்ட பொழுதில்..


நிழலாக...


மெல்லிய சாரலுடன்,,

அழகிய தென்றலுடன்,,

அழகிய சிற்பமாக வந்தாய்.

காலம் பல கடந்து,,

இன்று அந்திம காலம் நெருங்கிய பின்னும்,,

நான் உனக்கு முன்னே,,

நீ எனக்கு முன்னே,,

செல்ல வேண்டும் என்று ,, பிரார்த்திக்கிறோம் கடவுளிடம்,

விந்தைதான்,,

ஈருடல் ஓருயிராக வாழ்ந்து,,

அந்திம காலத்தில் மட்டும்,,

ஒருவரை ஒருவர் முந்தி செல்ல ,,

ஆசைபடுகிறோம்,,

காதல் ,,

அழகிய காதல்,...

மௌனம் கலைத்து விடு,,

என் மரணம் நிகழ்ந்தபோது,,

நீயில்லை..


உன் மௌனம் என்னும், பயங்கரத்தை விட,,,


என் மரணம் மிகவும் சுகமே,,


மெல்ல எனை நீ புரிந்தால்,,


பிறிதொரு ஜென்மத்திலாவது,,

உன் மௌனம் கலைத்து விடு,,

என் மரணம் என்னும்,

உறக்கம் முடிந்தபின்னும்,,

காத்திருப்பேன்,,

குழந்தை,,

நீண்ட தூர ரயில் பயணங்களில்,,

எப்பொழுதும்,,


ஒரு குழந்தை,,


மனதில், சுகமான நினைவாக,,


இடம் பிடித்து விடுகிறது...

Saturday 11 February 2012

அழகிய காதல்..

அழகிய சோலைகளின்,,

அழகிய மரங்களின்,,


அழகிய கிளைகளில்..


அழகிய தூறல் பட்டு,,


மினுமினுக்கும்,,


சிலிர்த்த பச்சை நிற மலர்ச்சியான ,,

இளம் இலையை போல..

அவள்..

என்னவள்..

அழகிய காதல்..

Friday 10 February 2012

அழகிய காதல்..

அழகிய சோலைகளின்,,

அழகிய மரங்களின்,,

அழகிய கிளைகளில்..

அழகிய தூறல் பட்டு,,

மினுமினுக்கும்,, 

சிலிர்த்த பச்சை நிற மலர்ச்சியான ,,

இளம் இலையை போல..

அவள்..

என்னவள்..

அழகிய காதல்..

காதல்.. அவள் .....

வியர்வை சிந்திய,,

முரட்டு வெயிலின்,,

மதிய வேளை..

கண்கள் இருண்டு,,

நடை தள்ளாடி,,

பாலைவன புழுதியில்,,

மெல்ல சோர்வுற்று,,

சாயும் நேரம்,,

சில்லென்ற பனித்துளி.. மெல்லிய சாரலுடன்,,

உடல் தழுவி... மனம் தெளிவுற்று..

காதல்.. அவள் .....

அழகிய காதல்,,

தலை நிமிர்ந்து,,

கண்களில் குறுகுறுப்போடு,,

அழகியல் பாடம் சொல்லும்,,

சிலிர்ப்பான சிரிப்போடு,,

என் கண்களை சந்திக்க ,,

முயற்சிக்கிறாள்...

அவள் பார்வையின் வெப்பம் ,, தாளாமல்,,

தலை குனிந்து நின்றேன்,,

ஆவலோடு,,, தவிப்போடு,,

அழகிய காதல்,,

Saturday 4 February 2012

வலிக்கும் மனதுடன்,,,,

இனிய கனவுகளை..

எதிர்நோக்கி..

உறங்க செல்லும் முன்,,,

மனதோரம்,,

மெல்லியதாய் ஒரு வலி..

பிறகு,,

வழக்கம் போல.. இன்றும்,,

வலிக்கும் கனவுகளை,,

எதிர்நோக்கி,...

வலிக்கும் மனதுடன்,,,,

இரவு வணக்கம்,,,