என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 24 April 2012

இயற்கை புதிதாய்

சட்டென்ற வினாடியில்,,

என் கனவுலகில் இருந்து,,

விடை பெற்றேன்..

**
துயில் களைந்து எழுந்தேன்,,

அது இருள் பிரியா ,,

அதிகாலை பொழுது..

வினாடியில் மனதை,,

இறைவனிடம் செலுத்தி,,

பின் வெளியே வந்தேன்,,

**
நேற்றிரவு பெய்த மழையின் வாசம்,,

இன்னமும் மிச்சம் இருந்தது,,

மெல்ல நடை பிடித்து,,

பின் வேகம் பிடித்து,,

குளிர்ந்த தென்றலை,

ரசித்தபடி,,

அழகிய பள்ளத்தாக்கை,,

வந்தடைந்தேன்..

**
அழகிய நீரோடை ,,

வனப்பு மிக்க சோலை மரங்கள்..

என்னை வசீகரித்தன..

தினமும்தான் ரசிக்கிறேன்,,

ஆனால் என்றுமே புதிதாய்,,

வனப்பாய்,,

இயற்கை மிளிர்கிறது..

**
மிகபெரும் ரசனை மிகுந்த ,,

படைப்பாளி,,

இறைவன் என்பதை மீண்டும் ஒருமுறை,,

உணர்ந்தேன்..


வீணான பொழுதுகள்

அழகிய மிக பெரும் ,,

நவநாகரீக கட்டிடம் அது..

**
யாரோ பெரும் செல்வாக்கான ,,

மனிதர்களால் கட்டிய கட்டிடம் போலும்,,

திரும்புமிடமெல்லாம் பிரமிப்பு,,

அதனுள் இருந்த அத்துணை கடைகளும்,,

இன்னும் பிரமிப்பு,,

**
அலங்கார விளக்குகளால்,,

பொருட்கள் மின்னின,,

கடும் வெப்பம் தணிக்க,,

அதிகப்படியான குளிரூட்டும் ,,

இயந்திரம் உதவியோடு,,,

சிலு சிலுவென்று இருந்தது,.,.

***
பெரும் கடலென மக்கள் கூட்டம்,

உழைத்து சேர்த்த பணத்தை,,

வெற்று பகட்டோடு,,

கடைகாரர் சொன்ன விலைக்கே,,

பேரம் பேசாமல்,,

வாங்கி சென்றனர்,...

**
எங்கெங்கு காணினும்,,

மக்கள் கூட்டம்,,

பெரும் பணத்தை கையில் வைத்து,..

பொருட்களை குவித்து,,

வெளியேறிய வண்ணம் இருந்தனர்..

சொற்ப பணம் கொண்டு,,

ஏதும் வாங்காமல்..

அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி.,

வெளியே வந்தேன்..

**
வெளியே கட்டிடத்தின் ஓரமாக,,

கடும் வெய்யிலில் நின்றிருந்த,,

பூக்கார கிழவியிடம்,,

முழம் என்ன விலை என்று,,

வாய் ஓயாமல் பேரம் பேசி கொண்டு இருந்தது,,

அந்த பெரும் பணக்கார கூட்டம்..

***
சூழல்.. உழைப்பு.. வீணான பொழுதுகள்..

***

Monday 23 April 2012

இதயம் கீறுகிறாய்

என் இதயம் கீறுகிறாய்,,

என் சொல்பேச்சை கேளாமல் திரிகிறாய்..

எனக்குள் வலிகளை உருவாக்குகிறாய்..

என் இலக்கணம் மீறுகிறாய்..

மென்மை கொண்ட என்னை,,

வலிகளுக்குள் செலுத்துகிறாய்,,

நான் பொறுமை அதிகம் கொண்டவள் ,,

இருப்பினும் அவ்வபோது ,,

என் விதி மீறினால்,,

மனிதா !!,,.

நான் பெரும் சூறாவளியாய் உன்னை

சாய்த்திடுவேன் ,,

**
இயற்கை அன்னையின் பெரும்கோபம் ,,

**

சுடும் நிஜங்கள்

மனம் நிறைய..

சிந்தனை குப்பைகளின் சங்கமம்..

**
வெகு தூரம்,,

பிரயாணம் செய்யும்,,

கனவு அசுத்தங்கள்..

**
சுற்றி சுழற்றி அடிக்கும்,,

எண்ணங்களில்,,

கனவுகளில்,,

மனம் முழுதும்,,

துர்வாடை காற்றின் அசுத்தங்கள்..

**
திக்கு தெரியாமல் நிகழ்காலம்,,

தேர்ந்த வழிகளில் கனவுக்கோலம்,,

**
இங்கே,,

செல்லாக்காசாகி வீதியோரம் நின்று,,

அங்கே,,

உலகிற்கே ராஜாவாக சிம்மாசனம் கொண்டு..

**
வீதியோரம் குப்பைகள்,,

நாசியை துளைக்க,,

திடுக்கிட்டு உரைக்கும் நிகழ்காலம்,,

ஊமை கனவுகளை,,

சரமாரியாக பழிக்கிறது,,


**

சூழல் ... சுடும் நிஜங்கள்.. நிகழ்காலம்..

***

Saturday 21 April 2012

வாய்மை தவறேல்..

உண்மை ....

அப்போது தகிக்க வைப்பினும்,,

பிறகு குளிர வைக்கும..

**
பொய்யுரை பேசி,,

அவ்வப்போது தப்பித்து கொண்டாலும்,,

பிறகு வரும் சிக்கல்,,

தீரா காயத்தை கொடுக்கின்றன..

**
காலம் பல கடந்து,,

வலிகள் பல சுமந்து,,

வெற்றிடம் வந்த பின்,,

இப்பொழுதுதான் தெரிகிறது ,

உண்மை மேலானது என்று..

**
உண்மை,,

அப்போது வலித்தாலும்,,

தீர்வுகள் என்றுமே சுபம்..

பொய்யுரை போல..

அவ்வப்போது தப்பித்து,,

பல பல சிக்கல்களில்,,

மாட்டிகொள்வதை போல அல்லாமல்..

உண்மை.. நிம்மதி என்றென்றும்,,

**
உண்மை என்னும் உன்னத சூழலில்,,

அழகிய எண்ணங்கள் சூழ,,

நிம்மதி கொண்ட மனதோடு,,

வாழ்வியல் புரிதலோடு,,

நான்,, இந்த வினாடியில்..

***
சூழல்.. வாழ்வியல்.. வாய்மை தவறேல்..

***

Thursday 19 April 2012

பிரியாத நினைவலைகள்

இருள் அப்பிய மனதில்,,

அழகிய வண்ணங்களில்,,

மெல்லிய அதிர்வுகளாக,,..

உன் நினைவலைகள்,, .

பிரிந்த போதும்,,

பிரியாத நினைவுகள்,,

என்றென்றும்,,

சிறந்த வண்ணங்களில்,,

மனதோரம் மெலிதாக..

மெல்லிய கீறல்களாக,,

வலித்தாலும்,,

ஒரு சுகமே,,

***
காதல்.. பிரியாத நினைவலைகள்..

****

பிரிவின் வலி

மெல்லிய ஈரத்தில்,,

மனம் அமிழ்ந்து,,

மென் சோக உணர்வுகளில்,,

இதயம் விம்மி,,

மெல்லிய கண்ணீர் துளி,,

உருவாகி,,

கண்ணோரம் கசிந்து,,

பேச இயலாமல் ,,

விக்கித்து,,

தலை கவிழ்த்து நிற்பதுதான்,,

பிரிவின் வலி என்றால்..

இப்போது ,,

நானே அவ்வாறே,,

தலை கவிழ்ந்து ,,

நிற்கிறேன்,,

***
பிரிவு,, துயரம். கண்ணீர்,,

***

Wednesday 18 April 2012

வலிகள் மறையும் காலம்

நீண்ட காலமாக,,

எனக்குள் உறைந்திருக்கும்,,

வலிகள்,,

மெல்ல உருகும் நேரம்..

**
மெல்ல மனது,,

பன்னீராக உருவெடுக்கிறது..

**
அழகிய ஒத்தடங்கள்,,

எங்கிருந்தோ வந்து,,

என் மனதிற்கும்,,

இதயத்திற்கும்,,

ஆறுதல் தருகின்றன..

**
இறுகி போன உதடுகளில் இருந்து,

மெல்ல புன்முறுவல் ,,

வலிக்காமல் வருகிறது..

**
மூளை செதில்களை சுற்றி,,

படர்ந்திருந்த,,

கசடு எண்ணங்கள்,,

அழிந்து கொண்டு இருக்கிறது..

**
ஆக மொத்தத்தில்,,

நான்,,,

நானாக உருவெடுத்து கொண்டு இருக்கிறேன்..

இந்த மாற்றம் எதனால்,,

என்று சிந்தனை செய்த போது,,

இங்கேதான் கடவுள் தெரிந்தார்...

**
இங்கே,,

கடவுளின் செயல்,

நல்ல நட்புகளை ,,

ஏற்படுத்தி கொடுத்ததுதான்..

**
சூழல்... வாழ்வியல்.. வலிகள் மறையும் காலம்..

**

Tuesday 17 April 2012

நட்பு... புனிதம்

காலை பனியில் கலந்து,,

பச்சை புல்வெளியில் மிதந்து,,

ஈரமான தண்ணீர் வடிய,,

அழகின் உச்சமாக,,

பூத்திருக்கும் ரோஜாவை போல,,

மென்மையான ,,

மேன்மையான,,

குணம் கொண்ட ,,

புனிதமான நட்பு நீ,,

களங்கமற்ற இந்த நட்பு,,

ஆயுள் வரை தொடரும்,,

என்ற நம்பிக்கை எனக்குள்,,

என்றென்றும்..

**
சூழல்... நட்பு... புனிதம்..

காதல் அழகு

கவிதை அழகு,,

மௌனம் அழகு,,

துடிப்பு அழகு,,

உயிர்ப்பு அழகு,,

துள்ளல் அழகு,,

அழகியல் அழகு,,

வண்ணம் அழகு,,

தென்றல் அழகு,,

மனது அழகு,,

இதயம் அழகு,,

இளமை அழகு,,

இவை அனைத்தும் சேர்ந்து,,

காதல் அழகு..

**
காதல்.. இளமை.. அழகு..

Monday 16 April 2012

மன அதிர்வுகள்

ஏனோ தடைபட்டது,,

உறக்கம்..

**
நேரம் பார்த்தேன்..

பின்னிரவுக்கும்,,

அதிகாலைக்கும்,,

இடைப்பட்ட ஒரு நேரம்..

**
மெல்ல வெளியே வந்தேன்..

பூரண நிசப்தம்,,

சில்லென்ற தென்றலுடன்..

மெல்ல சோர்வகன்று,,

புத்துணர்வு பிறந்தது..

**
வேலை முடிந்து,,

விடை பெரும் பரபரப்பில்,,

முழு நிலவு,

தன் கடைசி நேர ஒளியை,,

புவிக்கு வழங்கி கொண்டு இருந்தது...

**
அழகிய புத்துணர்வோடு,,

மெல்லிய மனதின் சப்தங்கள்,

ஏதோ எனக்குள் சொல்லியது..

**
அண்ணாந்து பார்த்தேன்..

நிசப்தமான பூமி,

தன்னந்தனியே நான்,,

மேலே இறைவன்,,

இருப்பது போல உணர்வு..

**
என் மனதிற்கும்,,

இறைவனுக்கும்,,,

அழகிய உரையாடல்கள்,,

நடப்பது போல பிரமை..

என் மன அதிர்வுகள்,,,

இறைவனிடம் சேர்வது போன்ற ,,

ஒரு நினைவு..

**
ஒரு விநாடி சிந்தித்து பின்,,

மெல்ல கண்மூடி,,

நல்ல எண்ணங்களை,,

மனதில் நிறுத்தி,,

மெல்லிய அதிர்வுகளாக,,

இறைவனிடம் அனுப்பினேன்,,

இறைவனும்,,

பதிலுக்கு நல்ல ஆசிகளை

எனக்குள் அதிர்வுகளாக

விதைத்தார்..

நேரம் போனதே தெரியவில்லை,,

கண் திறந்தபோது,,

விடிந்திருந்தது..

Wednesday 11 April 2012

அழகிய ரசனை

இந்த உலகம் அழகானது...

இயற்கை,,

அழகியலை உள்ளடக்கியது...

அழகிய ரசனை உணர்வு ,,

வாழ்வியலை அழகுணர மிளிரவைக்கும்,,

வெறும் பணம் சிந்தனை கொண்டு,,

ரசனை புதைத்து,,

வாழ்ந்து என்ன பயன்?...

குழந்தையின் பார்வையில்,,

எல்லாம் ஆச்சரியம்,,

அதனால் குழந்தையின்,,

மனநிலை என்றும் மகிழ்வில்..

புரிபவர்களுக்கு புரிந்தால் சரி..

காலை வணக்கம்

அழகிய வண்ணங்களில்,,

இயற்கையின் வனப்பில்,,

உள்ளம் தொலைத்து,,

குழந்தையின் மனதோடு,,

குதூகலிக்கும் மகிழ்வோடு,,

அழகிய காலை வணக்கம்.

Tuesday 10 April 2012

கதை சொல்லும் கனவுகள்.

ரசனை மிக்க பல்லவர் காலத்தில்,,

ஓர் நாள்...

***
சில்லென்று தென்றலை,,

அழகிய வேலைப்பாடமைந்த,,

சில நூறு சன்னல்கள் உள்வாங்கி,,

திரை சீலைகளை பறக்கவைத்து,,

தெளிந்த வெளிச்சம் பரப்பி,,

அந்த அழகிய,,

விரிந்த வசந்த மண்டபத்தை,,,

பேரழகோடு மின்ன செய்ததது,,

அழகிய நிலவு...

***
அந்த அழகிய நிலவோடு,,

ஓர் அழகிய பேரழகியும்.. ,,

அந்த வசந்த மண்டபத்தை,,

அழகு மிளிர செய்தாள்...

***
நடுநாயகமாய்,,

மன்னன்,,

சுற்றிலும் சபையோர்..

வெகு ஆவலோடு,,

அவளின் நடனம் காண..

***
அந்த பேரழகி,,

சலங்கையிட்ட கால்களுடன்,,

நடனமாட தயாராக ,,

தலை குனிந்து வணக்கம் ,,

சொன்னாள் சபையினருக்கு...

***
பேரழகின் ரசனையில்,,

நனைந்தபடி,,

அவளின் நடனம் ரசிக்க ,,

தயாரானேன்,,

அந்த மண்டபத்தின்,,

பாது காவலர்களில்,,

ஒருவனான நான்....

****
சூழல்.. கதை சொல்லும் கனவுகள்..

*******

என்றும் ஆச்சரியம்,,

என்றும் ஆச்சரியம்,,

பழங்கால கோவில்களை,,

பார்க்கும்போதெல்லாம்...

அதன் அழகிய வேலைப்பாடுகள்,,

மனதை ஈர்க்கும், அதே சமயம்,

பல நூறு ஆண்டுகளாக,,

பகைவர் தாக்குதலில் இருந்து,

தப்பி,, கம்பீரமாய் நிற்கும்,,

அதன் அழகு,,,

பரவசத்தை தருகிறது,,

*****
 இந்தியா ... ஆன்மீகம் ,, கம்பீரம்..

Monday 9 April 2012

சோழர் காலத்தில்

ஆலய மணி ஓசை கேட்டு,,

அழகிய சிட்டு குருவிகளின் கானம் கேட்டு,,

அதிகாலை சேவலின் குரல் கேட்டு,,

ஈரம் கலந்த தென்றல் காற்றை ,,

சுவாசித்து,,

ஜன்னலின் அருகே தெரிந்த,,

ஆலமரத்தில்..

பறவைகளின் உற்சாகம் கண்டு,,

மனம் மெல்ல பரவசம் கொண்டு,,

சற்றே தூரமாய்,, பனியோடு இருந்த,,

வயல்வெளிகளின் அழகை கண்டு,,

கடவளுக்கு நன்றி சொல்லி..

அழகிய அதிகாலை பொழுதில்,,

மெல்ல போர்வையை விலக்கி..

துள்ளி எழுந்தேன்,,

சோழர் காலத்தில்,, ஒரு கிராமத்தில்..

அழகிய கனவில்..

Sunday 8 April 2012

வாலிபம் முடிந்து,,

நடுத்தரம் தீர்ந்து,,

வயோதிகம் எட்டி,,

வயோதிகத்தின் உச்சம் தொட்டு,,

சீரிய சிந்தனையில்..

மென் சோகமாய் தெரியும்,, 

தளர்ந்த முக சுருக்கங்களுக்குள்,

தீரா நினைவுகள்..

***
சூழல்,, வாழ்வியல்.. முடியும் பருவம்..
 
****

Saturday 7 April 2012

சிட்டு குருவி

வீட்டு முற்றத்தில்,,

அல்லது,,

வீட்டு மாடியில்,,

சிறிது அரிசி பருக்கைகளை,,

தூவி,,

சிறு குச்சி ஒன்றால்,,

முறத்தை நிமிர்த்தி வைத்து,,

அரிசி பருக்கைகளை சாப்பிட வரும்,,

சிட்டு குருவிகளை பிடித்து,,

விளையாடி,,

சிட்டு சிட்டு குருவி சேதி தெரியுமா என்று பாடி திரிந்தது,,

ஒரு காலம்,,

இன்று,,

அதே ஆனந்தத்துடன்,,

விளையாட ,,

சிட்டு குருவிகள் எங்கே ???

*****
சூழல்... தொலைந்த வாழ்வியல்..

******

வாழ்வியல் வசந்தம்

காதல் பிறந்தபோது,,

கவிதைகள் பிறந்தது,,

கவிதைகள் பிறந்தபோது,,

உணர்வுகள் பிறந்தது,,
உறவுகள் பிறந்தது,,

உறவுகள் பிறந்தபோது,,

வாழ்க்கை இனிதானது....


****
காதல்....

வாழ்வியல் வசந்தம் ..

******

என் ஆன்மா

இன்னமும்,,

நான் வீழவில்லை..

உடல் வெந்து,,

உடல் தின்று,

மண்ணோடு மண்ணாக,,

மக்கி போய்,,

ஒரு பிடி,,சாம்பலிலும்,,

உயிர்த்தெழும்,,

என் ஆன்மா,,

மனிதனை தவிர

எதிர்காலத்தில் ஒரு நாள்,,

வெப்பம் தாளாமல்,,

வெடித்து சிதறியது,,

சூரியன்....

பூமி எங்கும் இருள் அப்பி,,

வெளிச்சத்திற்கு ஏங்கிய போது,,

மெல்லிய சாரல் வீசியது,,

பின் வேகம் எடுத்து,,

சுற்றி சுழன்று,,

பெரும் சுனாமியாய்,,

மெல்ல உலகை தனக்குள்..

விழுங்கியத...

கண்ணில் தெரிந்த கட்டிடமெல்லாம்,,

நீரில் முழ்கி..

ஒரு உயரமான மரத்தின் மீது,,

வேடிக்கை பார்க்கிறேன்,, ,,

என்னை சுற்றி ,,

என் கண்ணுக்கெட்டியவரை,,

தண்ணீர் தண்ணீர்..

ஒரு ராட்சஷ பசியோடு,,

உலகை விழுங்கி,,

என்னையும் தனக்குள்,,

இழுக்க ஆரம்பித்தது,,

சற்றே மயான,, மையமான அமைதி,.

வெறுமை சூழ்ந்த ஒரு கணத்தில்..

சட்டென்று உயிர் பெற்றது,,

பூமி..

இம்முறை புத்தம் புதிதாய்,,

பச்சை பசுமையாய்,..

அழகிய விலங்குகளோடு..

மனிதனை தவிர..