என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 30 January 2012

தினசரி விடியல்..

விழித்தெழுந்த போது,,,

இனித்த,, கனவுகள் செத்துவிட்டன,,,

பயமுறுத்தும் நிஜங்கள்,,

மனதை பிசைகின்றன,,,,

இருப்பினும்,,

நிஜங்களை எதிர்நோக்கி,,

மனம் தளரா உழைக்கும்,,

சிந்தனையை மனதில் நிறுத்தி,

போர்வையை விலக்கி...

கடவுளை நினைத்து,,,

 
தினசரி விடியல்..

Saturday 28 January 2012

தீராத நினைவலைகள்...

பின்னிரவு தனிமை,,,

தீராத நினைவலைகள்...

கனவுகளாக உருமாறி,,,

என் வளி மண்டலத்தில்,,,

காட்சிகளாக உருப்பெற்று கொண்டு இருக்கும் நேரம்,,

இன்றாவது,,

இனிக்கும் கனவுகளை எதிர்நோக்கி,,,

ஆழ்ந்த உறக்கத்தில் ,,,

அமைதியாக,,

தவிப்போடு,, காத்திருக்கிறேன்,,,

ரௌத்ரம் பழகு..

ரௌத்ரம் பழகு..

நல்ல உபதேசம் அன்று,,

இன்று,,

அரசு உதவியுடன்,,,

ரௌத்ரம்,, முன்கோபம் எல்லாம் அழகாக பயில்கிறார்கள்..

அரசு மதுபான கடைகளில்.. தினசரி..

நல்ல வருமானத்தில் அரசாங்கம்,,

பெரும்குடியில் குடிமக்கள்..

வேதனையில் சில நல்ல உள்ளங்கள்..

எங்கே போகிறது தேசம்,, ?

ஆத்ம நட்போடு,,

ஒரு நாள்...

நான்,,,,

மௌனமாக இறந்து கிடப்பேன்,,

அதுவரை,,

ஆத்ம நட்போடு,,

உள்ளன்போடு,,,

நேர்மையோடு,,,

உன்னோடு,,

வாழ்ந்திருப்பேன்,,

வீழ்வேன்.. எழுவேன்,,

வீழ்தல் எனக்கு புதிதில்லை.,.

எழுதலும் எனக்கு புதிதில்லை..

வீழ்வேன் ,, பிறகு எழுவேன்,,

இப்படியேதான் இறுதிவரை ,,

தொடர போகிறேன்,,

அப்போதுதான்,,

நான் என்றும் சமநிலையில் இருப்பேன்,,

Wednesday 18 January 2012

காற்றில் தவழ்ந்து வந்தது,,

அந்த அழகிய சிரிப்பொலி..

அந்த சிரிப்பொலி வந்த திசை நோக்கினேன்,,

இன்னும் நிறைய சிரிப்பொலிகள் கலந்து,,

இன்னும் இனித்தது..

மெல்ல கண்களை சுருக்கி கொண்டே,,

கூர்ந்து நோக்கினேன்,,

தூரத்தில்,, உற்சாகத்தில்..

மழலை பட்டாளம்,,

இந்த முதியவனின்,, தனிமையை,,

கடந்து சென்றன அந்த சிரிப்பொலிகள்..

எனக்கும் மௌனமான ஒரு மகிழ்ச்சி கொடுத்தது,,

Friday 13 January 2012

அவளுக்கு ஒன்றும் இல்லை..

ஒன்றும் புரியவில்லை..

அளவற்ற சந்தோசத்தில் அவள்..

அது,

காதலனுடன் சேர்ந்த தருணம்,,

இங்கே அடக்கமுடிய சோகத்துடன்,,

பெற்றவர்கள்...

பெற்றவரை ஒதுக்கி,,

யாரோ ஒருவனை கை பிடித்த அவளுக்கு இளமை மயக்கத்தில்,,,

புரியவே இல்லை...

பெற்ற மனம் படும் பாடு..

ஆனாலும், புரியும் ஒரு நாள்,,

காலம் பல கடந்து...

அன்று,,

பெற்றவர் இருப்பார்களா என்றுதான் தெரியவில்லை,,

மன்னிப்பு கேட்க..
உழைப்பவன் மட்டுமே தலை நிமிர,,

இடைதரகர் எல்லாம் தலை குனிய ,,

சூளுரைப்போம் ,,

இந்த உழவரின் திருநாளில்..

உழவனின் தோற்றம் கண்டு நகைக்காதே,,

... படித்தவன் பகட்டை கண்டு மலைக்காதே,,

உழைத்தவன் உள்ளம் கண்டு வணங்கி செல்..

வெற்று பகட்டான மனிதரை கண்டு ஒதுங்கி செல்...

எந்நாளும் உழைப்பிற்கு மரியாதையை செய்,,,

இனி என்றும் நற்சிந்தனையுடன்,,,

** பொங்கல் நல்வாழ்த்துக்கள் **
விடிந்ததும் போகி பண்டிகை,,

எரிப்பதற்கு ,, என்னிடம் பொருட்கள் இல்லை..

ஆனால்..

எரிப்பதற்கு என்னுள் இன்னும் இருக்கிறது,,

 தீய எண்ணங்கள்..

Thursday 12 January 2012

அன்பு மனம்,,

தினம் தினம்,,

எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் அவர்,,

அவர் ..?

80   வயது பெரியவர்..

இன்று வரை,, தவறவில்லை,,

அதிகாலை எழுந்து,, 

தோட்ட வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்,,,

எதற்காகவும் அவர் வேலைகளை நிறுத்தியதில்லை..

மதியம் வரை கடும் உழைப்பு,.

பிறகு,, சிறு உறக்கம்,,

மீண்டும் உழைப்பு... மாலை வரை,..

அவருக்கென்று   சிறு நட்பு வட்டம்,,

அதில் சிறிது அரட்டை...

என்னிடமும் அளவற்ற பாசம்,,

நெற்றி நிறைய திருநீறு அணிந்து,,

தவறாமல் கோவில்களுக்கும் செல்வார்..

அளவற்ற பாசம்,,

அதிக உழைப்பு,,,

அன்பு மனம்,,

இன்று வரை ,, அவரை நோய் தாக்கியதாக எனக்கு நினைவில்லை..

இன்று வரை ஆரோக்கியமாய்..

இவர் இப்படி..

சற்றே சிந்தித்து பார்த்ததில்...

இன்று இளைஞர்கள்,,, 

ஏன் நானே கூட,,,

அவ்வப்போது வரும் காய்ச்சல்,, தலை வலிகளுடன் ,,,

ஒரு வாழ்க்கை,,, வாழ்கிறோம்,,

எங்கே போகிறோம் நாம்...?





Wednesday 11 January 2012

காதல் வசத்தில் சிக்குண்டு,, 


நட்பு வட்டத்தில் திளைத்து,, 


அழகிய சுகங்களை அனுபவித்து,, 


என் இளமை காலங்களை கழித்து,, 


நான் அந்திம காலத்திற்கு வரவில்லை...


ஏதுமறியா உழைப்பு.. 


அவமானம் கண்ட மனம்,, 


அதனால் உண்டான ரணம்,, 


இன்று வரை நீண்ட வடுக்களாய்.. 


மனதில்.. 


ஆனாலும், எனக்கு இன்றும்,,  


இன்றைய இளையோரை போல,,


சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வாழ , ஆசைதான்,, 


ஆனாலும் என் செய்ய ,, ?


கடந்து விட்ட காலங்கள்..


வயதின் சுருக்கங்களோடு,, உடலில்.. 


..ஏக்கங்களாய்.. மனதில்..

நேற்றைய கனவுலகில்..

சட்டென்று தலை குப்புற விழுந்தேன்,,

எப்படி என்று தெரியவில்லை..

லேசான மயக்கம் தெளிந்து ,, எழுந்தேன்,

கருகலான வாசனை என் நாசியை துளைத்தது,,

மெல்ல கண்விழித்தேன்,,

அழகிய வனம்,,

கோரமான தீயின் பிடியில்...

மரங்கள் பற்றி எரிந்து கொண்டு இருந்தன,,

வன உயிர்கள் எரிந்து சாம்பலாகின..

என்னை தவிர,,

அனைத்தும் அங்கே நெருப்பு குழம்பில்..

இது போதாதென்று,

விண்ணில் இருந்தும் நெருப்பு மழை..

எனக்கு ஒன்றும் ஆகவில்லை..

இருப்பினும்,,

சுடும் பூமியில்..

பெரும் தணலில்..

தனி ஒருவனாக நான்,,

திடுக்கிட்டு விழித்தேன் ....

மெல்ல சிந்தனை செய்ததில்..

கடந்த கால இழப்புகளின் வலி,,

என் ஆழ்மனதை இன்னும் அரித்து கொண்டு இருக்கிறது..

என்பதை மெல்ல புரிந்தேன்,,
நேற்றைய பின்னிரவு ,,


கடும் குளிரோடு,,,


பற்கள் தடதடக்க,,,,


நடுங்கும் உடலோடு,,,,


குளிர்ந்த தண்ணீர் பருகி..


மௌனமாக இந்த பின்னிரவின்,,


அமைதியான உலகை காண,, கிளம்பினேன்,,


உடல் தாண்டி ,, உள்ளம் தாண்டி ,,


குளிர் என்னை சில்லிட வைத்தாலும்,,


மௌனமான இந்த உலகம்,,,


என்னை மட்டும் பார்த்து,,


கண்சிமிட்டும் விண்மீன் கூட்டம்,,,


எனக்கே எனக்காக வெளிச்சத்தை பரவ விட்டு,,


நான் போகும் வழியெல்லாம் ,,,


எனக்கு காவலாய்,, பின் தொடர்ந்த,, அழகு நிலா,,


எல்லாம் மிகவும் பிடித்தது..


ஆழ்ந்து அனுபவித்ததில்


விடிந்ததும்,,


என்னை தேடி வந்தது,,,


குளிர் ஜுரம்,
விழி முழுதும் நிரம்பிய நீர் கொண்டு,,

என்னை வரவேற்றாள்.. அவள்..

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து,,

காலம் பல கடந்து,,

வருடம் பல தொலைத்து,,.. ,,

உறவு பல பிரிந்து,,,

வாழ்க்கை பல தொலைத்து,,

நேசித்த மனங்களை விட்டு,,

அழகிய ஊரை விட்டு,,

இன்று,,

பொருள் பணம் சேர்த்து வந்திருக்கிறேன்,,

என்னை வரவேற்ற அவள்..

தாய்,,

அவளின் அடுத்த வார்த்தை...

மீண்டும் கிளம்பத்தான் வேண்டுமா,,

இங்கேயே இருக்க மாட்டாயா ?

அவளின் பாசம் முன்னே,.,,

நான் சேர்த்த பொருள், பணம்,,

குப்பை போல தெரிந்தது,,

நினைத்தபடி பிரிவு,,

விழி திறந்து,,

மனம் திறந்து,,,

உயிர் கொண்ட நட்பை தேடிய ,,

பயணத்தில்..

உன் சிநேகம்,,,

காதலில் வந்து முடிந்தது...

இருப்பினும் ஏதோ ஒரு பாரமாய்,,,

மனதில் ஒரு ஓரமாய் உறுத்திக்கொண்டே இருந்தது,,

இந்த காதல்..

நினைத்தபடி பிரிவு,,

நினைத்தபடி பிரிவு உன்னால்தான்,,

இறுதியில்...

வேண்டாம் பெண்ணே இனியும் உன் சிநேகம்,,

நிராசையான கனவுகள்

இழந்து விட்ட ஆசைகள்...

நிராசையான கனவுகள்..

இன்னமும்,,

மனதின் ஒரு மூலையில்.. ஏக்கங்களாய்..

தாளமுடியாமல் ,, கடவுளிடம் சொன்னேன்,,

என் மீது இரக்கம் கொண்டு,,

இழந்தவைகளை திரும்ப தருகிறேன் என்றார்,,,

சரி நன்றி கடவுளே  என்று சொல்லிவிட்டு ,,

ஆனால் எனக்கு இன்னொரு வரமும் வேண்டும் என்றேன்,,

என்ன என்று கேட்டார்..

இழந்து போன என் வயதையும்  கொடுத்தால்..

மீண்டும் அனுபவிப்பேன் என்றேன்,,

அது மட்டும் முடியாது என்றார்..

அப்படியானால்,,

எனக்கு எதுவும் வேண்டாம்  ,,

என்று சொல்லிவிட்டேன் இந்த வயதான அந்திம காலத்தில்..

கடவுளும் மறைந்துவிட்டார்..

உறக்கத்தை தேடி ,,

பின்னிரவு முடிந்து,,

முன் அதிகாலை தனிமையில்,, நான்,,
இப்போது,,
உறக்கம் வரவில்லை..
எழுந்து வெளியே வந்தேன்,..
மார்கழி மாத கடும்குளிர்,,
என்னை நடுங்க வைத்து அன்போடு வரவேற்றது,,
தெளிவான வானம்,,
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்..
புதிதாய் எப்படி வர்ணிப்பது என்ற குழப்பத்தில் அழகிய நிலவு,,
எல்லாமே அழகுதான்,,
நடுங்க வைக்கும் குளிரில்..
மனம் வெறுமையாக மாடியில் நின்றேன்,,
தன்னந்தனியே,,
இரைச்சலற்ற பூமி பெண்ணும்,,
அழகிய உறக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு,,
குளிரை போக்க புகை பிடிக்க நினைத்தேன்..
சட்டென்று ஒரு சிந்தனை..
புகையை வெளியிட்டு,,
இந்த அழகிய இயற்கையை கெடுக்க,,
ஏனோ மனம் வரவில்லை..
அணைத்து விட்டேன்,,
நல்ல நிகழ்வை செய்த திருப்தியில் இருப்பது போன்ற ,,
ஒரு அதிசய உணர்வில்,,
என் மனம்,, இப்போது ,,
மெல்ல உறக்கம் எனை அழைத்தது,,
இயற்கைக்கு பாரமாய் நிற்க விரும்பவில்லை..
உறக்கத்தை தேடி ,,
மீண்டும் சென்று விட்டேன்,,
பெரியாரின் பயணம்,,

மனிதம் நோக்கியது,,

சமத்துவம் நோக்கியது...

சாதீயம் என்ற பெயரில்.

மனிதரில் ஏற்ற தாழ்வு கண்டு பொங்கி எழுந்தவர்.

அவரே கூட கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்தவர்...

மற்றவர் மனம் நோகா நடந்த பண்பாளர்..

நல்ல மனிதம் நிறைந்த சமுதாயம்,,

என்றும் வணங்கும் பெரியவர்.. எங்கள் பெரியார்..

ஆனால்,.,.

கருவறையில் காமலீலை நடத்தும்,, போலி பூசாரிகள்..

நடிகையுடன் சல்லாபிக்கும் ஆன்மீகவாதிகள்..

அரசியல் கனவுடன் திரியும் பகட்டு ஆன்மீகவாதிகள்..

கோடிகளில் சொத்து சேர்க்கும் பித்தலாட்ட சாமியார்கள்..

இவர்கள் எல்லாம்,,

மனிதன் என்ற பெயரில்..

தப்பி பிறந்த ஈன பிறவிகள்..

Tuesday 10 January 2012

கவனமின்றி ஒரு பயணம்,,

விபத்தில் முடியலாம்...

ஆர்வமின்றி ஒரு செயல்,,,

தோல்வியில் முடியலாம்...

மன உறுதியின்றி இருப்பது,,

அழுகையை தரலாம்,,

இலட்சியமின்றி இருப்பவனுக்கு,,,

வாழ்க்கையே சோகமாகலாம் ,,

ஆசைகள் அற்ற ஒருவன்,, ,

பிடிப்பின்றி இருக்கலாம்,,

எனவே..

உள்ள உறுதியோடு,,

மன தெளிவோடு,,,

துடிப்பான ஆற்றலோடு ,,

செயல் படுவதே,,

மகிழ்வான வாழ்விற்கு அழகு,,
என்றாவது ஒரு நாள்,,

அதிகாலை வழிபாடு என்பது எனது ஒரு ஆசை..

சற்றே முயற்சி செய்து,,

இன்று அதிகாலை எழுந்தேன்,,

குளிர் நீரில் நீராடி,,

ஆவல் நிறைந்த  மனதோடு,,

அழகிய மணம் வீசும் கோவிலை அடைந்தேன்,,,

சற்றே கஷ்டப்பட்டு ,,

மனதை சலனமற்று நிறுத்தினேன்,,

மெல்ல மனம் முழுதும்,, 

இறைவனின் நினைவுகளால் நிரப்பினேன்,,

சாந்தமும்,, பேரமைதியும்,,

மெல்ல எனக்குள் குடி புக உணர்ந்தேன்,,,

மெல்ல கண் திறந்தேன்,,,

எதிரில் நின்ற மனிதர் எல்லாம்,,,

கடவுள் போல தெரிந்தனர்,,

இனி தினசரி அதிகாலை வழிபாடு என்பது,,,

என் விருப்பம்,,
சாரல் சாரலாய்..

மெல்லிய நீர்த்திவலைகள்,,

என் முகத்தில் பட்டு தெறித்தன..
... ...
வசந்த கால மலர்கள்,,

எனக்கு மட்டுமே நறுமணம் அள்ளி வீச காத்திருந்தன..

அழகிய விஸ்தாரமான, பசுமை புல்வெளி,,

எனக்குள் அழகிய உறக்கத்தை தர,,

எனக்கே எனக்காக காத்திருந்தது..

மெல்லிய சில்லென்ற தென்றல்கூட,,

என் வருகைக்காக சற்று அமைதியுடன் காத்திருந்தது,,

நேரம்,, வெகு நேரமாய் மாறியதும்,,

சலித்து போன,,

புல்வெளியும்,, நறுமணமும்,,

அழகிய தென்றலும்,,

சென்று விட்டன,,

சாரல் மயக்கத்தில்..

எனக்கே எனக்காக காத்திருந்த,,,

வசந்தங்களை அறிந்தும் அறியாமல்,,

மயக்கத்தின் உச்சியில் இருந்தேன்..

வெகு நேரம் கழித்து,,

மயக்கம் தெளிந்து எழுந்த பின்,,

வசந்தங்கள் எல்லாம் மறைந்தது,,

மெல்ல தெரிய வந்தது..

ஆடும் வரை ஆடியாயிற்று...

இனி,, ?

மெல்ல பயம் கலந்த ஒரு சோகம்,,

அடிவயிற்றில்..
"..அப்பா.. "

இந்த பூமியில் நாம் தடுக்கி விழாமல் இருக்க,,

கடவுளால் படைக்க பட்டவர்...
...
உணர்சிகளை உள்வைத்து,,

நமக்கே நமக்காக ,,

ஒரு வாழ்க்கையை வாழ்பவர்..

நினைக்கும்போதெல்லாம்,,

விழியோரம்,, எட்டி பார்க்கும் ,, ஒரு துளி கண்ணீர் சொல்லும்,,

இவரின் அளவற்ற அன்பை,, பாசத்தை..

இருப்பினும்,, இப்போதெல்லாம்,, எனக்குள் ஒரு சுயநலம்,,

அப்பா செல்வதற்கு முன்,,

நான் சென்று விட வேண்டும் ,, இறைவனிடம்,,

இதுவே என் சுயநலம் மிக்க ஒரு ஆசை..
என் நினைவுகளில் இருந்து அவ்வபோது ,,

உதிர்வது,,, உதிரமும் கூட,...

உதிரம்,, ,, ??!!
...
வேதனை தந்த ரணங்களால் வந்தது,,,

ஆனாலும்,,

மகிழ்வான பொழுதுகளும் உண்டு,, நினைவுகளில்..

அதெல்லாம் பால்ய காலங்கள்..

பிறகு,,

கடவுளின் பாராமுகத்தால் வந்த,,

ரணங்களே,, உதிரமாய்,,

வாழ்க்கையாய்,,

சில சமயம் நினைப்பதுண்டு,,

என்ன தவம் செய்தேனோ ,
இந்த வாழ்க்கை கிடைக்க.. என்று மகிழ்வோடு..

பல சமயம்,,

என்ன தவம் செய்தேனோ , இந்த வாழ்க்கை கிடைக்க.. என்று சோகத்தோடு..

புதிரோடு புதிராய் நகர்ந்து,, போய் கொண்டே இருக்கிறது,,

காலம்,,
ஒரு பரபரப்பான மாலை நேர,,

கடைதெருவில்....

வாங்கிய பொருட்களை,
... ...
சுமக்க முடியாமல்,,

நடை தள்ளாடி சுமந்து வந்தபோது...

ஏனோ அளவுக்கதிகமாக வியர்த்து கொட்டியது,..

தள்ளாத வயது வேறு ,, பாடாய் படுத்துகிறது,,,

கூட்ட நெரிசலில்...

மெல்ல கலந்து ,,, சிரமத்துடன்,,

நடந்த போது,,,

விநாடி நேரத்திற்கு குறைவான நேரத்தில்,,

ஒரு திடுக்கிடலோடு ஒரு வசந்தம்,,

ஆம்,,

என்னை கடந்து சென்ற அவள்...

என்னவளேதான்,,

வயதின் சுருக்கங்கள் இருப்பினும்,,

என்னவளை கண்டுகொண்டேன்,,,

கை நிறைய பொருட்களோடு..

அவளும் சென்று கொண்டு இருந்தாள்..

ஒரு வேளை,,

அவளும் அந்திம காலத்தில்..

என்னைபோலவே...

ஒரு வேலையாளோ அவளின் சொந்த வீட்டிற்க்கு..?

இளமையில் இழந்த அவளை..

இப்போது கண்டேன்..

என்னைபோலவே..

ஏனோ சுருக்கென்று வலித்தது மனதிலே..
என்றைக்குமில்லாமல்..

இன்றைய முன்னிரவு,,,

என்னோடு சேர்ந்து ஆர்ப்பாட்டமாய்.. உற்சாகத்துடன்,,

அழகிய பாடல்களுடன் நான் கிறக்கத்துடன்,,

தனியே ...

தூர தெரியும் விண்மீன்களை ரசித்து,,,

தென்றலுடன் சேர்ந்து,,

சலசலப்புடன் நடனமாடும்,,

அழகிய தென்னங்கீற்றை ரசித்துக்கொண்டே,,

அவளின் சுகமான நினைவுகளில்..

உறக்கம் தொலைந்து போனது.. 

கனவுகளில் மிதந்து கொண்டே..

முன்னிரவும் என்னோடு சேர்ந்து விழித்து கொண்டது..

என்னவென்று தெரியாத,,

ஒரு உற்சாகத்தில்..

தூக்கமின்றி மலர்ச்சியுடன்,,

நான் இப்போது..
நான் மௌனமானவன்,,

அரக்க குணம் உண்டு சில நேரம்,,

இரக்க குணமும் உண்டு சில நேரம்,,

உதவும் குணமும் உண்டு..

உதாசீனப்படுத்தும் குணமும் உண்டு..

நல்ல எண்ணங்களும் உண்டு,,

தீய எண்ணங்களும் உண்டு,,,

கடவுள் நம்பிக்கை உண்டு கஷ்ட காலங்களில்..

கடவுள் நம்பிக்கையற்ற வசந்த காலமும் உண்டு..

ஆக மொத்தத்தில்..

நானொரு மகானாக முயற்சிக்கும் சராசரி மனிதன்,,