என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 31 May 2012

சிரித்தார் கடவுள்

உதிரம் சிந்தாமலே..

வலிகள் மிகுந்து,,

வீழ்ந்தவன் நான்..

எழுவதற்கு துணிவின்றி,,

வலிகளின் உக்கிரத்தில்,

கிடந்தவனை பார்த்து ,,

சிரித்தார் கடவுள்..

அவனின் சிரிப்பை பார்த்ததும்,,

எனக்குள் வந்த கோபம்,,

என்னை வீறு கொண்டு எழ வைத்தது..

அவன் இப்போது இன்னும் அதிக சப்தத்தோடு,,

சிரிக்கிறான்,,

நான் வெறியோடு போராட ,,

தயாராகிவிட்டேன்,,
 
 

தலை கவிழ்ந்து,

தலை கவிழ்ந்து,,

தவிப்போடு நிற்கும்,,

மாதம் துவக்கம்,...

பெற்றவர்களுக்கு..

**
புதிய வகுப்பிற்கு செல்ல போகும்,

குழந்தைகளை நினைத்து மகிழ்வு,,

அதே சமயம்,,

கல்வி கட்டணங்கள்,

நினைத்து கலக்கம்..

சுமையோடு சுமையாக,,

அரசாங்கத்தின்,

பெட்ரோல் விலை உயர்வு பரிசு வேறு ..

**
ஆள்வோர்கள் எல்லாம் ,,

பெரும் வசதியாக இருந்தால்,,

பாமரனின் வலி எங்கே ,,

உறைக்க போகிறது.

**
அன்று சாமானியனாக இருந்ததால்தான்,,

காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார்,.

இன்று பெரும் தனவந்தர்களாக இருப்பதால்,,

கல்வி கட்டணங்கள்,,

சாமானியனுக்கு ,

எட்டாத உயரத்தில் இருக்கிறது..

**

கடல் பறவை

அலை பாய்ந்த மனது,

அமைதி கொண்ட ,,

ஒரு மழை நாளில்,,

மெல்ல உற்சாகம் கொண்டு,,

அழகிய வெண்மை நிற,,

கடல் பறவையாக மாறி,,

மெல்ல உயர்ந்து ,,

உயர்ந்து,,

வித்தியாசமான பூமியின்,,

தோற்றத்தை வியந்தபடி,,

பறக்க ஆரம்பித்தேன்...

**
அழகு எங்கும் குடி கொண்ட,,

நிலபரப்பில்,,

ஆங்காங்கே சாத்தானின்,,

கட்டிடங்கள் என்னை தொட்டுவிடும்,,

அளவுக்கு உயர்ந்து நின்றன,,

விந்தையிலும்,,

சிறு கோபத்திலும்,,

நிலபரப்பை கடந்து ,,

பறந்து கொண்டு இருந்தேன்..

**
இப்போது ,,

பூமி நீல வண்ணமாக,

மாறியது..

**
கடல் பரப்பு,,

கண்ணுக்கெட்டியவரை,,

பனிப்பாறைகளும் ,,

அழகிய தீவு கூட்டங்களும்,,

இறைவனின் ரசனையை உரக்க சொல்லியது..

**
நீண்ட நேரம் கடல் பரப்பில்,,

ஆனந்தமாக திரிந்து விட்டு,,

நிலபரப்பை வந்தடைந்த போது,,

ஏனோ,,

மனிதனின் செயற்கை செயல்கள்,,

வெறுப்பை தந்தது..


Saturday 26 May 2012

அதிகாலை வானம்

சற்றே சில்லிட்டிருந்த,,

உடலில்,,

மெலிதாக வெப்பம் ஏறியபோது,,

கதிரவனின் வருகையை,

உணர்ந்தேன்..

**
சோம்பலை உதறி,,

ஆகாயம் பார்த்தேன்,,

**
அதிகாலை வானம்,,

வண்ணமயமாக ,

கதிரவனின் உதவியால்,,

வெகு அழகாக,,

மின்னியது..

இறைவனின் ரசனை,,

என்றுமே வியப்பிற்குரியது,,,

**
மெல்ல ஒளியை ,

என் மீது படர விட்ட,,

கதிரவன்,,

எனக்குள் புத்துணர்ச்சி,,

பாய்ச்சினான்..

**
இறைவனின் ஆசிகளை,,

கதிரவன் பெற்று,,

எனக்கு வழங்குவது போன்ற ,,

அழகிய உணர்வு அது..

**
முழுதாக விடிந்த பொழுது,,

என் கடமைகளில்,

முழ்கி இருந்தேன்...

வாழ்வியல்.. வேகம்

எங்கோ விரைகிறது,,

அந்த நட்சத்திரம்..

பார்வை கொண்டு,,

அதை தொடர்ந்தேன்..

அதன் வேகத்திற்கு ,

தொடர இயலவில்லை..

**
என் கண்களை விட்டு,,

அந்த நட்சத்திரம்,

அகன்ற பின்,,

ஏனோ,,

இந்த வாழ்க்கையும்,,

வேகமாக கழிவது போல,,

உணர்வு...

**
விடியல்,, இரவு,,

தொடர்ந்து மாறி மாறி,,

வரும் வேகம்,,

சற்றே கவலை கொள்ள வைக்கிறது...

**
இதே வேகத்தில்,,

வாழ்க்கை சென்றால்,,

நான்,,

உங்களை விட்டு... ??

சற்று பயமாக,

சற்று வருத்தமாக ,,,

இருக்கிறது...


**
வாழ்வியல்.. வேகம்...பயம்.

**

ஜெய் ஹிந்த்..

சில தேசங்கள்,,

அமைதியோடு..

சில தேசங்கள்,

சண்டையோடு..

**
சில தேசங்கள்,

வறுமையோடு..

சில தேசங்கள்,,

செழிப்போடு..

**
சில தேசங்கள்,,

வளர்ச்சியோடு..

சில தேசங்கள்,,

வளர்ச்சியற்று..

**
நம் தேசம் மட்டும்,

மிக பெரும் பாரம்பரியத்தோடு,,

மிக பெரும் கலாச்சாரத்தோடு,

மிக பெரும் தீரத்தோடு,,

வாழ்ந்து,,

இன்று,,

கமிஷன் அரசியல்வாதிகளால்,

திண்டாடும் தேசமாகி விட்டது..

இருப்பினும்,

இது என் தேசம்,,

ஜெய் ஹிந்த்..

பார்வை..

செம்மண்ணில்,,

நண்பகலின் ,,

உக்கிரத்தில்,,

செங்கல் சூளையின்,,

தணலில்,,

வேலை செய்யும்,,

தொழிலாளிகளை,,

கவலை கொண்ட

முகத்தோடு,,

குளிரான,,

காருக்குள் இருந்து,,

பகட்டான மனிதர்,,

பார்த்து கொண்டு இருந்தார்..

***

இதுதான்,,

அரசியல்வாதிகளின் பார்வை..

இந்தியா.. வாழ்க ஜனநாயகம்..

ஜெய் ஹிந்த்..

அரசியல்வாதி

ஒரு பார்வை,

ஒரு கோணம்,

ஒரு சிந்தனை,,

பாமர மக்கள்..

**
ஒரு பார்வை,,

பல கோணம்,,

பல சிந்தனை,,

விஞ்ஞானி...

**
ஒரு பார்வை,

பல கோணம்,,

பல சிந்தனை,,

இதனுடன் சேர்ந்து,,

ஆதாய சிந்தனை,,

அரசியல்வாதி..

Friday 25 May 2012

அம்மா

அம்மா,.,,

நமக்கே நமக்காக,,

நம்மை மட்டுமே,, நினைத்து

வாழும் ஒரே ஜீவன்,,

அம்மா..

கோபம் கொண்டாலும்,,

அதட்டினாலும்,,

நம் வாடிய முகம் கண்டதும்,,

அழும் ஒரே ஜீவன்,,

அம்மா..

உலக பிரயாணத்தின்,,

முதல் நம்பிக்கை,,

அம்மா..

வாடி நின்ற போதெல்லாம்,,

ஆறுதல் தந்த அன்பு மனம் கொண்டவள்.

தந்தை என்ற வாழும் தெய்வத்திடம்,,

நமக்காக சண்டை போடும்போது,,

அவளுக்கென்று ஏதும் இல்லை,,

பிள்ளைகள் நலனே அவள் எண்ணம்,,

என்ற உயர்வான குணமே தெரியும்.

வாழும் வரை,,

அவள் அரவணைப்பில்,, வாழ்ந்துவிட்டு,,

காதல் என்ற பெயரில்,

அவளை உதாசீனபடுத்தி செல்பவர்களும்,

கடைசி காலத்தில்,,

தனிமை சிறையான,,

முதியோர் இல்லத்தில் விடுபவர்களும்,,

அரக்க குணம் உடையவர்களே..

என்னுள்ளே

என்னுள்ளே,,

ஓராயிரம் கனவுகள்,,

கனவுகள் உன்னை சுற்றியே,,

உன் நினைவுகளை மட்டும்,,

வசப்படுத்தி கொண்ட என் கனவுகள்,

வேறு நினைவுகளை ஏற்க மறுக்கிறது,,

காதல் பூத்த தருணத்தில் இருந்து,,

காதலை கொண்டாடிய தருணம் வரை,,

அழகிய கனவுகளோடு,,

உற்சாகமாக,,

உயர பறந்து கொண்டு இருந்தேன்,,

காதல் ,,

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த போது,,

திருமண கனவுகள் எட்டி பார்த்த நேரம்,,

அழகாக உனக்கு வலிக்காமல்,,

பிரிவை சொல்லி சென்று விட்டாய்,,

நான் விக்கித்து நின்றேன்..

பிறகு,,

பக்குவம் அடைந்தேன் மெல்ல..

இப்போதும் ,,

என் கனவுகள் உன்னை சுற்றிதான்..

உன் பிரிவு விநாடிகளை சுற்றி,,

தினமும்,,

உன்னோடு,, உயிர்ப்போடு,,

உன் நினைவுகளோடு ,,,

காதலை மறக்காத என் கனவுகள்,,

வலிகளோடு,,

தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன...

***
காதலின் பிரிவு,,,,

மென் சோக நினைவுகளின் சங்கமம்..

****
சற்று நிதானித்தேன்,,

என் வாழ்வியலில் இருந்து,,

என் சூழலில் இருந்து,,

என் எண்ணங்களில் இருந்து,,
என் கனவுகளில் இருந்து,,
என் மனிதங்களில் இருந்து,,
நிதானித்து,,
சிறிய முற்றுப்புள்ளி வைத்தேன்..
***
சில குழப்பங்கள்,,
ரணங்கள்,,
ஏமாற்றங்கள்..
ஏக்கங்களை ,,
கடந்து,,
இளமை தீர்த்து,,
இன்னும் சில வருடங்களில்,
நடுத்தர பருவத்தை எட்டி பிடிக்கும்,,
முன்,,
நினைவுகளை,, சிறிது,,
பின்னோக்கி அசை போட்டதில்..
தவறுகள் நிறைய புரிந்தது..
செல்லாக்காசாகி நின்ற கோலம் புரிந்தது...
**
சற்றே நேர்மையும்,,
சிறிது இரக்கமும்,,
சிறிது விட்டு கொடுத்தலும்,,,
சிறிய சோம்பலும்,
என்னை படு குழியில் தள்ளிவிட்ட,,
நிலையை எண்ணி பார்க்கிறேன்..
பதிலாக பெருமூச்சை தவிர,,
வேறு எதுவும் இல்லை..
என்னிடம்,,
இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை..
***
மீண்டும் நிதானத்திற்கு விடை கொடுத்த வினாடியில்..
சட்டென்று நிதானித்தேன்..
***
மனது சொல்கிறது மௌனமாக,,
எனக்குள்,,,
இனி வீழ்வதற்கு எதுவும் இல்லை..
இனி தெளிவோடு,,
உறுதியோடு,,
போராடி,,
வானம் வசப்படும் நாள்,,
வெகு தூரம் இல்லை ,,
என்றது....
.

அழகிய காதல்

மெல்லிய தென்றலில்,,

மெல்ல உயிர்பெற்று,,

பிறை நெற்றியின்,

முன்பக்கத்தில்,,

விழுந்த ஒற்றை கேசம்,

அழகிய நடனமிட்டு,,

காற்றில் அசைந்தாடும் அழகில்,,

என் மனதை பறிகொடுத்தேன்,,

உன் மனதிடம்..

***
அழகிய காதல்.. என்றென்றும்..

***

அம்மா

எனக்கென்று ஒரு கனவு உண்டு,,

எனக்கென்று ஒரு வாழ்வு உண்டு,

எனக்கென்று ஒரு உணர்வு உண்டு,,

எனக்கென்று சில ஆசைகள் உண்டு,,,

எனக்கென்று பெரும் கோபம் உண்டு,...

எனக்கென்று ஒரு வசந்தம் உண்டு,,

எனக்கென்று ஒரு துணை உண்டு,,

எனக்கென்று ஒரு வாழ்விடம் உண்டு..

எனக்கென்று ஒரு உலகம் உண்டு...

**
ஆனால்...

உனக்கென்று நான் மட்டுமே உண்டு,,,

உன் உணர்வுகளில்,,

என்னை பற்றிய நினைவுகள் மட்டுமே உண்டு...

உன் வாழ்விடம், என்னை சுற்றி மட்டுமே...

உன் அழகிய உணர்வுகள், எனக்காக மட்டுமே,...

எனக்கு வயதானாலும் ,,

என்றுமே உன் குழந்தை நான்..

**
கடவுள் கூட கை விடுவான் பல சமயங்களில்..

நீ மட்டுமே என்றுமே அரவணைப்பாய்..

அம்மா ....

அன்பென்ற சொல்லின் அழகிய வடிவம்,,

**
அம்மா.. அன்பு.. அரவணைப்பு...
**

.. சிறு துளிகள்..

******
வழிந்த வியர்வையை,,

கசங்கிய துண்டால் ,,

ஒற்றி எடுத்து,

மண்வெட்டியை ஓரமாய் வைத்து,,

நாள் முழுதும் உழைத்த,

களைப்பு நீங்க,,

தேநீர் கடையில்,

தேநீர் பருகுகிறான்,,

உள்ளம் மகிழ்வாக,,

அந்த தொழிலாளி ..
*****
என் கவிதைகளில்,,

அழகு மிளிர,,

அவளின் இதயம்,,

காண்கிறேன்,,
****
நான் மனதோடு,,

பேசிய பின்,,

தெளிவடைந்த உள்ளம்,,

சொல்லியது,,

காதலே நீ போ என்று..
***
கவனம் சிதறி,,

வீழ்ந்தேன் ,,

கல்லறையில்,,

உறக்கம் கெட்டு அலைகிறது ஆன்மா..
****
இறந்தேன்

அன்னை பூமியில்,,

நிம்மதி கொண்டேன்,,

அதனால் என் கல்லறையில் ,..
***
காமம் அதிகம் கொண்டு,

போதையில் மிதக்க துவங்கும் போது,,

பெரும் சாம்ராஜ்யத்தின் ,,

வீழ்ச்சி துவங்குகிறது...
**** 
நிசப்தம் நிறைந்த இரவுகளை,,

தினந்தோறும்,,

தேடி கொண்டிருக்கிறேன்...

தேடல் தொடர்கிறது,,

நகர காட்டில்..
 
 
 
 
 
 
 

வாழ்க்கை சூழல்..

தோள் கொடுத்த சிலர்,,

வாரி விட்ட சிலர்,,

அவமானப்படுத்திய சிலர்,,

உற்சாகம் தந்த சிலர்..

மற்றும்,,

சிலரை,,

மெல்ல,,

மறந்தபடி,,

கழிகிறது,,

வாழ்க்கை சூழல்..

களங்கம்

என் மீது களங்கம் ,,

கற்பித்து ,,

சந்தேக தணலில் சிக்கி ,,

இன்று வரை,,

உன் நிம்மதி தொலைத்த ,,

நண்பனே.!!!

இனி அடுத்து என்னை எரிக்க,,

என்ன செய்ய போகிறாய்..?

**
இன்னும் எத்தனை காலம்,,

என் அமைதியை கெடுத்து,,

மனதுக்குள் ஆவேசம் கொண்டு,,

உன் நிம்மதியை கெடுக்க போகிறாய்..?

**
நான் வேதனை படினும்,,

வழக்கமான அமைதியுடன்,,

என்றென்றும் கடவுளின் துணையோடு,,

வாழ்கிறேன்..

ஜெய் ஹிந்த்..

அதிக உழைப்பை கொட்டி,

நம் தேவைக்கும் அதிகமாகவே,,

விவசாயிகள் உற்பத்தி செய்த,,

தானியங்களை,

சேமித்து வைக்க,,

வசதி இல்லையாம் அரசுக்கு..

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி,,

செய்வதிலும் சிக்கல்களாம்..

**
ஆக,,

படித்த மேதாவிகள்,,

ஆட்சி செய்கிறார்கள்..

**
உழைப்பை கொட்ட மக்கள் தயாராக இருக்க,,

நிர்வாகம் செய்ய திறமை அற்றவர்கள்

இருந்தால்,,

இப்படித்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும்,,

தினசரி ஊழல் செய்திகள் வரும்..

**
பிறகு,,

அப்பாவி மக்கள் தலையில்,,

எரிபொருள் விலையிலிருந்து,,

எல்லா விலையையும் உயர்த்தி,,

திண்டாட வைப்பார்கள்..

**
இதில் ஊழல் செய்தவர்கள்,

ஏற்கனவே பத்து தலைமுறைக்கும்,,

சொத்து சேர்த்து குவித்தாயிற்று..

அவர்களுக்கு கவலை இல்லை,,..

ஆனால்..

நமக்கு.. ??

**
சுதந்திரம்..

வெள்ளையனின் பிடியில் இருந்து தப்பித்து,,

கொள்ளையர்களின் பிடியில் சிக்கி இருக்கிறோம்.

**
எப்படி இருப்பினும்,,

இது நம் தேசம்,,

நாம் விரும்பும் தேசம்..

ஜெய் ஹிந்த்..

மதம் பிடித்த ,....

கடவுளிடம்,

மனம் கொண்டு,,

பேசிய போது,,

தலை கவிழ்ந்து,,

அழுதார்,,

மதம் பிடித்த மனிதரை,,

எண்ணி..

பயணங்கள் முடிவதில்லை

எங்கோ போகிறோம்..

எங்கென்று தெரியவில்லை..

**
பகலும் இரவும்,,

தொடர்கின்றன..

எங்கோ இழுத்து ,,

செல்கின்றன,,

**
நிற்காத இந்த பயணத்தில்,

மரணம் மட்டுமே நிறுத்தம்,,

பிறகு,,

மீண்டும் எங்கோ தொடர்கிறது,,

பயணம்,,

**
ஆக,,

பயணங்கள் முடிவதில்லை

என் இறப்பு ,, ஊர்வலம்

என் இறப்பு ,,

ஊர்வலம் நகர்கிறது,,

நண்பர்கள் மட்டும்,,

என்னை சுமந்து,,

என்னை சுற்றி.

உறவுகள் கைவிட்ட நிலையில்..

தேடலில் துவங்கி

தேடலில் துவங்கி,,

கவிதையில் மலர்ந்து,,

பூக்களில் சிரித்து,,

நந்தவனங்களில் வளர்த்த காதல்,,

பட்டு போனது,,

காமம் தீர்ந்த பின்னே,..

இன்று..

காமம் தீர்ந்தபோது,

அன்பு வளர்ந்தது,,

அன்று,,

காமம் தீர்ந்தபோது,,

காதலும் தீர்ந்தது,,

இன்று..

வாரிசுகள்

பெரும் தொழில் செய்கிறார்கள்,,

பெரும் முதலீடு செய்கிறார்கள்,,

பெரும் பெரும் தொழில்களெல்லாம்,

குறுகிய காலத்தில் ஆரம்பிக்கிறார்கள்,

இருபத்தைந்து வயதிலேயே..,,

பெரும் தொழிலதிபர்கள்,,

என்ற பெயர்...

வாழ்க்கை அப்படி..

அவர்களுக்கு,,

**
இங்கே,,

படித்து முடித்து,,

வேலை செய்து,,

தொழில் கற்று,

தொழில் துவங்கி,

படாத பாடு பட்டு,,

சற்றே ஒரு நிமிர்ந்த நிலை,,

வருவதற்குள்,

நரை தட்டி,,

இளமை தீர்ந்துவிடுகிறது..

**
அவர்கள்.. வாரிசுகள்,,

அரசியல்வாதிகளுக்கு,

இவர்கள்.. வாரிசுகள்,,

பாமரர்களுக்கு..

தொடர்ந்த விடியல்

மெல்லிதாய் வெப்பம் பரவ,,

கண் விழித்தேன்.

விடிந்திருந்தது..

**
உடலை சுற்றிய குளிர் ,

விலகி,,

வெப்பம் பரவி கொண்டிருந்தது..

**
போர்வையை விலக்கி,,

வானம் பார்த்தேன்..

வெகு அழகான ,,

வண்ண தீற்றல்களில்,,

வானம்,,

கதிரவனின் உதவியோடு..

**
போர்வையோடு,,

சோர்வையும் உதறி,,,

காலை கடமைகள் முடித்து,,

அந்த அடர்ந்த வனாந்தரத்தில்,,

நடக்க துவங்கினேன்...

**
இது,,

தினசரி தொடரும் நிகழ்வு..

**
வாழ்க்கை.. தொடர்ந்த விடியல்..
**

தரிசனம்

நெருக்கியடித்து,

வரிசையில்,

நின்றேன்..

**
மெல்ல ஊர்ந்தது,,

வரிசை..

அதிகாலை வந்தது,,

நண்பகல் ஆகிவிட்டது.

**
சட்டென்று ஒரு பரபரப்பு,,

கோவில் அதிகாரிகள் எல்லாம்,,

ஓடோடி வந்தனர்..

அந்த பெரிய காரில்,,

இறங்கிய,

ஒரு பெரும் செல்வாக்கான ,

மனிதருக்கு,

அப்படி ஒரு வரவேற்ப்பு..

**
சில நிமிடங்களில்,,

அவர் தரிசனம் முடித்து,,

கிளம்பிவிட்டார்..

**
நான்,,

இன்னும் வரிசையில்..

இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமாம்..

கடவுளை தரிசிக்க..

பொலிவை தேடி

சற்றே சிரமப்பட்டு,

முட்களும், சிறு கற்களும்,

நிறைந்த பாதையில்,,

பயணித்தேன்..

சுட்டெரிக்கும் வெயில் வேறு..

**
காலணிகள் பிய்ந்து,,

வெற்று காலுடன்,

நடந்து கொண்டு இருந்தேன்..

**
குருதி வழியும் கால்களுடன்,,

வியர்வை வழியும் உடலுடன்,,

பயணித்தேன்,,

சரியான திசை நோக்கி..

**
வெகு நேரத்திற்கு,,

பின்,,

கண்ணுக்கு குளிர்ச்சியாக,,

அழகிய சிறு குன்றும்,

அதில்,,

அழகிய மலர்கள் நிறைந்த,

பச்சை புல்வெளி பாதையும்,

எனக்காக காத்து நின்றன..

**
வாழ்வியல்.. சற்றே சிரமத்துடன்,, பொலிவை தேடி..

**

Saturday 19 May 2012

வாழ்வியல்.. வெப்பம்..

எங்கும் காய்ந்து போன,,.

ஒரு வறண்ட  பிரதேசத்தில்,,

நண்பகல் அனலில்,,

மனித வாடையே இல்லாத,,

அந்த பகுதியில்,,

திக்கு தெரியாமல் மாட்டி கொண்டேன்..

எப்படி இங்கு வந்தேன் ,,

என தெரியவில்லை..

**
கடும் வெப்பம்,,

கடும் சூட்டில் அலறும் கால்கள்..

வியர்வை கூட ,,

ஆவியாக வெளியேறும்  பூமி அது,.,

மனமும்,,

உடலும்,,

சோர்ந்து ,,

ஆவேசம் கொண்டு,,

அமைதியாக இருந்தன வேறு வழியின்றி..

**
பாதை தேடி ,,

சிரமத்தோடு பயணித்ததில்,,

சற்றே வெகு நேரம் ஆனது..

மெல்ல இருட்டியபோது,,

பயம் மெல்ல மனதை கவ்வியது,,

சோர்வுற்ற உடல்,,

தள்ளாடி விழுந்தபோது,,

ஏதும் புரியவில்லை சில நேரம்..

**
கண் விழித்தபோது,,

இரவு தீர்ந்து,,

சூரியனின் வருகையால்,

அந்த வனாந்திரம் ,,

மீண்டும் சூடாகி கொண்டு இருந்தது..

**
மற்றுமொரு தேடலுக்கு,,

மெல்ல எழுந்தேன்,,,

**
சூழல்.. வாழ்வியல்.. வெப்பம்..

**



நிகழ்வுகள்

நிகழ்கால சூழல்கள்,,

நிகழ்வுகள்,,

தேசத்தை எங்கே கொண்டு செல்கின்றன..

தெரியவில்லை..

**
கவலை அற்ற மனிதர்கள்,,

அரசியல்வாதிகளாக..

கவலை கொண்ட மனிதர்கள்,,

குடி மக்களாக..

**
அச்சம் பாமரனுக்கு,

மகிழ்வு ஆள்வோருக்கு..

**
வாழ்க ஜனநாயகம்..

Friday 11 May 2012

மௌனம்

மௌனம் கூட,,

நீண்ட நாள்,,

என் ஆயுதமாக இருந்தது,,

என் இயலாமையினால்.....

அவ்வப்போது அந்த மௌனம்,

அந்த துன்பியல் சூழலை,,

அமைதி கொள்ளவும் வைத்தது..

**
இருப்பினும்,,

அந்த துர்நிகழ்வுகளை,,

சமாளிக்க இயலாமல்,,

தனித்து நின்று,,,,

மௌனம் என்ற ஆயுதத்தால்,,

எதிர்கொண்டபோது,,,

உண்டான ரணம்,,

இன்னமும் மனதோரம்,,

அழுந்துகிறது,,

மனதை பிசைகிறது..

**
மருந்தாக,,

கண்ணீரை தவிர ,,

ஏதுமில்லை என்னிடம்...

காற்றோடு காற்றாக

கனத்த மனதுடன்,

எதிர்பாரா அதிர்ச்சியுடன்,,

மௌனமாக நின்றிருந்தேன்,,

மின் மயானத்தின்,,

நண்பரின் உடல் அருகே,,

கொளுந்துவிட்ட எரிந்த தீ நாக்குகள்,,

நண்பரின் உடல் தின்ன,,

காத்திருந்தன..

**
சற்றே வினாடிகளில்,

உடல் சிதைக்குள் தள்ள பட்டது,,

வெளியில் வந்து நின்றேன்,,

மனம் வெறுமையோடு,,

அண்ணாந்து பார்த்தபோது,,

அந்த அடுப்பின் புகை போக்கி வழியே,,

காற்றோடு காற்றாக ,,

கலந்து கொண்டிருந்தான்,,

**
மிக இளம் வயதில்,,

மரணம்,,

கடவுளின் கையாலாகாத்தனம்..

**
நல்ல மனிதரையெல்லாம்,,

வெகு விரைவில் தன் பக்கம் ,,

இழுப்பதில்,,

என்ன சுகம் கண்டானோ இறைவன்.. ?

இறந்து கிடந்தேன்

ஒரு அழகிய இளமாலை பொழுதில்..

சூரிய கதிர்களை,.

தன் கிளைகலூடே விட்டு,,,

அந்த அழகிய பூங்காவை,

பேரழகாக உருவேற்றி கொண்டிருந்த மரங்களின்,, நடுவினில்,,

உதிர்ந்து சருகான இலைகளுடன்,,,

அழகிய தென்றலும்,

சூரிய கதிர்களும்,,,

என் மீது விழுந்து கொண்டு இருந்த,,

ஒரு அந்தி மாலை பொழுதின்,,

தனிமையில்.. ஓர்நாள்,,,

நான்,,

இறந்து கிடந்தேன்,,

இயற்கையோடு..

நேர்த்தியான சிறுகதை

அழகிய ,,

அழகியலோடு,,,

புத்தம் புதிய மணம் வீசும்,,

மனதை கலவை உணர்ச்சிகளால்...

நிரம்ப வைக்கும்,,

நேர்த்தியான சிறுகதை போன்ற,,,

நினைவுகளில் நீ,,,

என்றும் என் மனதோடு இருக்கிறாய்..

**
அன்று,,

இளமையிலும்,,

இதே உணர்வான சிறுகதைதான்,,

இன்று,,

அந்திம காலத்திலும்,,

அதே சிறுகதைதான்,,

**
காலங்கள் உருவங்களை மாற்றினாலும்,,

எனக்குள் இருக்கும் உன் நினைவுகள்..

என்றுமே

அதே அழகியல்,, ரசனை மிகுந்த ,,

சிறுகதை வடிவம்தான்...

தாகம் நிறைந்த வனத்திற்குள்

தாகம் நிறைந்த வனத்திற்குள்..

மெல்லிய நீர்த்துளி போல் உன் வரவு,,

மெல்லிய நீர்த்துளி,,

மெல்ல வலுபெற்று,,

அழகிய சாரலாய்,,

என் மீது தெறித்த போது,,

பறவையும் நானும் ஒன்று என்பதுபோல உணர்ந்தேன்..

**
மெல்ல உயர உயர செல்ல செல்ல,,

தன்னிலை மறந்து,,

உற்சாகம் பிறந்து,,

உன்னிலும் அழகிய வனப்பு மிகுந்த ,,

மேகங்களை ரசித்தபோது,,

எனக்குள் நீ விலக தொடங்கியதை,,

நான் அறிந்திருக்க வில்லை..

**
சட்டென்று,,

என் ஒற்றை சிறகு ,,

அறுந்து விழுந்த போதுதான்,,

புரிந்தது,, உன் பிரிவு,,

**
தன்னிலை மறந்த என்னை,,,

இன்று,,

தனிமை வாட்டுகிறதே..

**
எங்கிருக்கிறாய்,, என் தேவதையே,,

உன்னை மீண்டும் காண,, ஆவலோடு,,

திருந்திய உள்ளத்தோடு,,

தவிப்போடு,,

தனிமையில் நான்,,

நான் இறந்த பொழுது

நான் இறந்த பொழுது,,

பறவைகள் சட்டென்று பறக்காமல் நிற்கவில்லை..

ஓயாத அலைகள் சட்டென்று ஓயவில்லை..

உலகம் ஒரு நொடி அதிர்ந்து போகவில்லை..

போக்குவரத்து நிற்கவில்லை..

அருவிகள் நிற்கவில்லை..

எதுவும் மாறவில்லை..

அதனதன் அடிப்படையில்,,

அவை இயங்கி கொண்டுதான் இருந்தன,,

எதுவும் மாறாது,,

பூமிக்கு மட்டும் சிறு புன்னகை...

ஒரு சின்னஞ்சிறு பாரம் குறைந்ததே என்று,,

இயற்கை,, உலகம்,,

இவை எதற்கும்,,

யாருக்காகவும் நிற்பதில்லை..

சிதறிய குப்பைகளை

சிதறிய குப்பைகளை,,

கிளறி,,

சிகரங்களை தேடும் மானிடா.. !!

**
குப்பை மனதில்,,

குப்பைகள் பூட்டி ,

வெளியே,,

வேஷ குப்பைகள் அகற்றி,,

மாய வேடமிடும்,,

மானிடா.. !!

**
பொய்யுரை தரித்து,,

மெய்யுரை மறைத்து,,

வேகமாக எங்கே செல்கிறாய் ,,மானிடா.. !!

இறப்பதற்குதானே.. ?

அதற்கென்ன இத்தனை பரபரப்பு..

**
சூழல்... வாழ்வியல்.. இறப்பை நோக்கி..

**

பொன்னூஞ்சலில்,,

ஆகாயத்தில்,,

மேகங்களை தொட்டு தொட்டு,,

பரவசமாக,,

ஆடிய பொழுதுகளில்,,

காதல் வயப்பட்ட உற்சாகம்...

**
மெல்ல,,

கீழிறங்கி,,

பூமி தொட்டு,,

வறண்ட ஒரு கிளையை பற்றி,,

வீழ்ந்த பொழுது,,

என்னுள் முழுக்க,,

அவளின் நினைவுகள்..

**
பிரிவின் வலி உணர்ந்தபடி,,

நிதர்சனம் புரிந்தபடி..

மெல்ல,,

துயில் கொள்கிறேன்,,

நிரந்தரமாக..

அகம் மௌனமற்று

கனவுகளில் சங்கமிக்க,,

உறக்கம் ஒத்துழைக்க மறுக்கும்,,

முன்னிரவு நேரம்..

**
மனதோரம்,,

தெளிவற்ற என்ன அலைகள்,,

குறுக்கும் நெடுக்குமாய்,,

வரைமுறையற்று,,

அலைபாய்கின்றன...

**
அழகிய கனவுகளுக்கு,,

மனதளவில் தயாராகும் நேரம்,,

நிஜங்களின் அதிர்வுகளால்,,

அலைபாய்தல் தொடர்கிறது...

உறக்கம் என்னை தழுவ மறுக்கிறது..

**
சிரமப்பட்டு,, சிந்தனை செய்ததில்,,

மௌனம் ஒன்றே தீர்வு போல் ,,

தோன்றினாலும்,,

புறம் மட்டுமே மௌனமாய்,,

அகம் மௌனமற்று,,

செயலற்று,,

தனிமை சூழலில்.... தவிப்போடு..

ஊரெங்கும்,, விழாக்கோலம்

ஊரெங்கும்,,

விழாக்கோலம்..

சித்திரை மாதமெங்கும்,,

குழந்தைகளின் குதுகலத்தில்,,

பெரியோரின் கடமைகளில்,,

கடவுள் மனமகிழ்ந்து,,

வீதி எங்கும் ,,

அசைந்தாடும் தேரில்,,

பவனி வரும் அழகு...

**
மின் விளக்குகளாலும்,,

அழகிய மாலைகள் சூடி,,

அலங்காரமாக வரும் சாமி...

பார்ப்போர் மனதில் பரவசம்..

**
கோடை விடுமுறையில்,,

குளிர்ந்த இதயங்களோடு,,

அழகிய,.,

அன்பு மக்கள்,,

கடவுளின் அரவணைப்பில்..

நிகழ்வுகள்

எனக்குள் சில நிகழ்வுகள்,,

தரும் சிந்தனை நிறைய...

**
சில நிகழ்வுகள்,,

என்றோ முதலிலேயே நடந்ததை போல,,

ஒரு பிரம்மையை தரும்...

**
இன்னும் சில நிகழ்வுகள்,,

ஒரு பண்பட்ட சிந்தனையை ,,

எனக்குள் விதைக்கும்,,..

**
இன்னும் சில,,

எனக்குள் பெரும் புயலை ஏற்படுத்தும்,,

**
சில நிகழ்வுகள்,,

எனக்குள் நிறைய கேள்விகளை ஏற்படுத்தும்..

**
ஆனால்,,

சந்தேகம் என்னும் நிகழ்வில்,,

நான் ஆட்படும்போது,,

நீண்ட நாள் துயரத்தில்,,

மனது ஓலமிடுகிறது..

**
இருப்பினும்,,

இப்பொழுதெல்லாம்,,

பண்பட்ட மனிதனாக,,

என்னை மாற்றி கொள்ளும்,,

நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன..

நிகழ்வுகளுக்கு நன்றி..

கலைந்தது நித்திரை

கரை புரண்டோடும் ,,

நதி வெள்ளம்...

இருபுறமும்,

அழகிய நாட்டிய வனப்பில்,,

தென்னை மரங்கள்..

தென்னை மரங்களை தாண்டி,,

காணும் இடமெல்லாம்,

மலர் சோலைகள்..

**
நெஞ்சம் நிறைய மகிழ்வோடு,,

உடலில் ஒட்டி இருந்த,,

ஆற்றங்கரை மணலை தட்டி விட்டு,,

தென்னையை தாண்டி,,

மலர் வனத்தினுள் புகுந்தேன்..

காற்றில் கலந்த அந்த ,,

நறுமணங்கள்,,

மனதை மயக்கி,,

என்னை,,

வேறு எங்கோ கொண்டு சென்றன..

**
மலர்களை தாண்டிய போது,,

கண்கள் அகல விரிந்தன வியப்பில்,

பச்சை கம்பளம் விரித்தது போன்ற,,

அழகிய வயல்வெளிகள்..

**
எனை மறந்து,,,

சற்று இன்னும் முன்னோக்கி நகர்கையில்,,

அழகிய பாட்டு சப்தங்கள்.

வயல்வெளிகளிடையே,,

வேலை செய்யும் பெண்களின்,,

பாடல்கள் அவை.

சற்றே வித்தியாசமாக ஒலித்த,,

பழைய தமிழ் பாடல் வரிகளை,,

கேட்டு,,

வியப்பில் மேலும் சென்றபோது,,

மெல்லிய சிரிப்பு சப்தங்கள்..

**
நிதானித்து கண்டபோது,,

பரவசமடைந்தது உள்ளம்,,

அழகிய வயல்வேளியிடையே,,

அழகிய குளம்,,

குளக்கரையில்,,

அந்த காலை வேலையில்,,

ஆடவர் ஒரு புறம்,,

பெண்டிர் ஒரு புறம் என,,

நீராடி கொண்டு இருந்தனர்..

**
சற்றே நிதானித்து,,

யோசித்த பொது,,

முதலில்,,

வெள்ளம் புரண்டோடும் ஆறு,,

பிறகு அழகிய ஆற்றங்கரை,,

வனப்பு மிகு தென்னை மரங்கள்,,

பிறகு,,

மணம் வீசி மனம் பேசிய மலர் வனம்,,

பிறகு,

அழகிய வயல்வெளிகள்,,

அதில் வேலை செய்யும் பெண்டிரின் ,,

அழகிய பாடல்கள்..

பிறகு தெரிந்த குளம்,,

குளக்கரை...

**
ஒன்று நிதர்சனமாய் புரிந்தது,,

இறைவன் குடி கொண்ட இடம் ,,

இதுதான் என்று..

**
புரிந்த வினாடியில்,,

கலைந்தது நித்திரை.. ....

காதல்.. பிம்பங்கள்.

அழகென்ற பொழுதுகள்,,

அமைந்ததெல்லாம் உன்னாலே..

**
கனவென்ற பொழுதுகள்,,

அமைந்ததெல்லாம் உன் நினைவாலே..

**
மகிழ்வென்ற பொழுதுகள்,

அமைந்ததெல்லாம் உன் பேச்சாலே..

**
மனதோடு மணம் தெரிந்த பொழுதுகள் எல்லாம்,,

உன் அருகாமையாலே..

**
என் எல்லாவற்றுக்கும் காரணம்,,

உன் வரவாலே..

**
குழம்பிய பொழுதுகளில்,,

மனம் சிக்கி தவிப்பதும் உன்னாலே..

**
இன்று,,

வலி தின்னும் பொழுதுகள் கூட,,

உன் பிரிவாலே..

**
காதல்.. பிம்பங்கள்..அருகாமையில்..
**

அழகிய காதல்

மெல்லிய தென்றலில்,,

மெல்ல உயிர்பெற்று,,

பிறை நெற்றியின்,

முன்பக்கத்தில்,,

விழுந்த ஒற்றை கேசம்,

அழகிய நடனமிட்டு,,

காற்றில் அசைந்தாடும் அழகில்,,

என் மனதை பறிகொடுத்தேன்,,

உன் மனதிடம்..

***
அழகிய காதல்.. 
என்றென்றும்..
***

Saturday 5 May 2012

பழந்தமிழர் உறுதி

சிதிலமடைந்த ,,

அந்த பழங்கால கற்கோட்டையை,,

வேதனை பொங்க பார்த்தேன்..

**
அருகில் சென்று ,,

அதன் வலியை உணர முற்பட்டபோது,,

காலம் பல கடந்து,,

இயற்கை தடைகளை தாண்டி,,

மிச்சம் இருக்கிற அந்த கற்களில்,,

இன்னும் அந்த பழந்தமிழர்,,

வீரத்தின் உறுதி தெரிந்தது..

அவர்களின் கலாசாரம் தெரிந்தது..

**
மிச்சம் உள்ள அந்த உறுதியான,,

கோட்டையில் உள்ள கற்கள் ,,

சொன்ன சேதி இதுதான்,,

மனிதர்கள் சென்று விடுவார்கள்..

நாங்கள் இருப்போம் என்றென்றும்,,

**
ஏனென்றால்,,

நாங்கள்,,

வீரம் செறிந்த,,

உன்னத அறத்தை போற்றிய,,

நீதி தவறாமல்,,

உயர்ந்த நெறிகளோடு வாழ்ந்த,,

மகத்தான பழந்தமிழ் மன்னர்களால்,,

பழந்தமிழ் உழைப்பாளர்களால்,,

கட்டப்பட்டோம்,,

அதனால்தான் இன்றும் உயர்ந்து நிற்கிறோம் என்றது,,

************
(எனக்குள் ஏனோ இன்று,,

இந்த புதிதாய் கட்டும் அடுக்கு மாடிகள் சரிந்து விழும் செய்திகள்

நினைவிற்கு வந்தது,,)

பாய் மரக்கப்பல்

பண்டைய பலமிகு ,,

மனிதனின் ,,

துடிப்பு மிக்க வாகனம் ,,

இந்த பாய் மரக்கப்பல் ..

**
காற்றின் வேகம் அறிந்து,,

திசை அறிந்து ,,

துல்லியமாக இலக்கை அடைந்த ,,

அவன் தொழில்நுணுக்கம் ,,

என்றுமே வியப்பிற்குரியது ,..

**
உடல் வலுவும்,,

மன வலுவும்,,

அபாரமாக பெற்று வாழ்ந்தனர்,

அன்றைய மனிதர்கள்.

**
கடல் கடந்து படை எடுத்து சென்று,

கங்கை கொண்டான்,,

கடாரம் வென்றான் என்று,,

இன்றளவும் புகழோடு,,

விளங்கும் சோழ மன்னர்கள்,,

இதற்கு மிக பெரும் உதாரணம்..

**
நேர்மையும்,,

உழைப்பும்,,

நெறி தவறா வாழ்க்கை முறையும்,,

அன்றைய மனிதர்களின் வாழ்வியல்..

இன்று ??