Google+ Badge

என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday, 4 July 2013

மழை இரவொன்றில்....

ஒரு மழை காலத்து , 
இரவொன்றில், 
சன்னல் திறந்து, 
மழை சாரலை, 
மெல்ல முகத்தில், 
உள்வாங்கி,
உன் நினைவுகளோடு,
கரம்கோர்த்து,
சிலிர்த்தேன்..

மழை,
மலை வாசஸ்தலம்,
இரண்டும் சேர்ந்ததொரு,
வாழ்வியலில்,
அழகான இளமை பருவம்,
உன்னோடு,
காதலாகி பின்னி
பிணைந்திருந்தது ..

அற்றை நாளின்,
சூழல்,
அற்றை நாளின்,
உறவுகள்,
அற்றை நாட்களின்,
நண்பர்கள்,
என்று அற்றை நாட்கள்,
அழகாய் இருந்தது..

இதில் என்னோடு,
நீ,
மழலை காலத்தில்,
இருந்தே,
பேரன்பை பேசி,
இறுக்கமாய்,
நட்பை வளர்த்தாய் ..

உன் பெற்றோர்,
உன் உறவுகள்,
என் பெற்றோர்,
என் உறவுகளோடு,
அழகிய சிநேகம்,
அழகிய மனிதம்
வளர்த்து
அழகாய் வாழ்ந்தனர் .

பிறிதொரு அழகிய,
மழை நாளில்,
காதலை சொன்னேன்..

காத்திருந்தது போல,
ஏற்று கொண்டாய்..
என் வாழ்வியலில்,
அழகாய் இணைந்தும்,
கொண்டாய்..

நாட்கள்,
வருடங்களாக,
வேகமாக நகர்ந்ததை,
உணரவே இல்லை...

அத்தனை சிறப்பாய் ,
ஒரு வாழ்வினை ,
எனக்கு பரிசளித்தாய் ..

நாட்கள் நகர ,
அந்திமம் தொட்ட போது,
நம் பிள்ளைகளின்,
திருமண கடமைகளையும்,
அழகாய் முடித்தாய்..

பொருள் சேர்க்க ,
பிள்ளைகள் எங்கோ ,
தொலைவில் சென்றுவிட ,
மீண்டும் நீயும்,
நானும்,
அழகான அந்திம,
காதலில்,
வாழ்ந்திருந்தோம்..

ஒரு மழை நாளில்,
உறக்கத்திலேயே,
என்னை அணைத்தபடி ,
என்னை விட்டு பிரிந்தாய்..

ஓடோடி வந்த பிள்ளைகள்,
உனக்கான,
இறுதி பயணத்தில்,
கலந்து கொண்டு,
மீண்டும் தொலைவில்,
சென்று விட,

என் வாழ்வியலில்,
முதல் முறையாக,
அந்திம காலத்தில்
நான் தனித்து விடப்பட்டேன்...

உன் நினைவுகளோடு,
புதிதாய் தனிமையும்,
சேர,
நாட்கள் நகர்கிறது,
என் இறுதி பயணத்தை,
எதிர் நோக்கி..

Tuesday, 18 June 2013

நீ உறங்கு.

தென்றலை வழிமறித்து, 
மெல்லிய குளிரை,
அழகிய நறுமணத்தை, 
அதனிடம் கொடுத்து, 
விழி மூடி, 
தேவதை போல உறங்கும்,
உன்னிடம் அனுப்புகிறேன்..

என் தென்றல்,
அங்கு வந்து சேர்ந்திருக்கும்,
இந்நேரம்..

அழகான உணர்வுகளில்,
இன்றைய நம்,
காதல் பொழுதுகளை,
எண்ணி,
சிலிர்த்தபடி கிடக்கிறேன்,
என் அறையில்..

இந்த இரவின்,
நிசப்தத்தில்,
நான் மட்டும்,
மிக மகிழ்வாக,
உன்னோடு உரையாடி,
கொண்டிருக்கிறேன்,
கற்பனையில்..

உனக்கும்,
எனக்குமான வாழ்வியல்,
வெகு அழகாக,
துவங்கி விட்டது,
என் கனவுகளில்..

நாளை நிஜம் பெரும்,
இந்த கனவுகளில்,
பேரழகை இடைவிடாது,
சேர்த்து கொண்டிருக்கிறேன்,
உனக்காக..

நீ ,
இந்நேரம் உறங்கி இருப்பாய்,
என் மீது கொண்ட,
நம்பிக்கையில்..

நான் இங்கே,
உனக்காக,
நம் வாழ்வியலை,
வடிவமைத்து கொண்டிருக்கிறேன்,
உறங்காமல்..

என் தேவதை பெண்ணே,
நீ உறங்கு,
நானிருக்கிறேன்...

என் ஆயுள் தீர்ந்த பின்னும்,
உனக்கான என் பாதுகாப்பு,
தொடரும்..

நீ உறங்கு..

துளிகள்.. ( காதல் சொட்டு சொட்டாய்.. )

யாருமற்ற மலர் வனம், 
ஒன்றில், 
நாம் கொண்டாடிய, 
காதல் பொழுதுகளின், 
நினைவினில், 
நான் தித்திப்பாக, 
இந்த வினாடியில்.. 

***
மழைத்துளியில், 
நனைந்திடும் பெண்ணே, 
உன் அழகிய தோற்றம்,
கண்டு, 
பெரிதாய் வியக்கிறேன்.. 

இறைவன் அழகிய,
ரசனை உணர்வில்,
இருந்த போது,
உன்னை படைத்திருக்க வேண்டும்..

நீ எனக்கானவள்,
என்ற என் கனவு,
குதிரை புறப்பட்டு விட்டது,
நிஜத்தோடு காதலை,
உயிர்ப்பிக்க.


**
உன்னை முதன் முதலில்,
கண்ட,
ஒரு மழை நாளின்,
ஈரமும், குளிரும்,
இன்னமும்,
என்னுள்ளே இருக்கிறது..


**
உச்சி முதல்,
உள்ளங்கால் வரை,
உன்னை ரசிப்பதும்,
ஒரு அழகிய ரசனை,
உணர்வுதான்.. பெண்ணே..


**
உன்னை பிரிந்து விட்டேன்,
என்றால்,
என் உயிர் பிரிந்து விட்டது,
என்றே பொருள்படும்..

Sunday, 16 June 2013

** கனவு **

** கனவு ** 

அற்றை நாளின், 
ஏக்க கனவு, 
நிறைவேறி, 
விமானம் ஏறி, 
அயல் தேசத்தில், 
இறங்கிய இரு தினங்களுக்குள், 
என்னை துரத்துகிறார்கள், 
இருவர், 
என்னை கொல்வதற்கு.. 

உயிர் காக்க, 
வியர்த்து  நெடுந்தூரம், 
ஓடி களைத்தபோது, 
சுற்றி வளைக்கிறார்கள், 
என்னை.. 

நான் திடுக்கிட்டு, 
விழித்தேன்.. 

அதிகாலை 4.30 மணி
என்று கடிகாரம் காட்டியது, 
நேரத்தை.. 

குளிர்ந்த இரவொன்றில்...(( துளிகள்.. ))

குளிர்ந்த இரவின், 
அணைப்பு, 
அதிகாலை வரை, 
தொடர்ந்தது, 
பெரும் காதலோடு..


**
குளிர்ந்த இரவொன்றில், 
விஸ்தாரமான புல்வெளியில், 
ஒரு போர்வையும், 
ஒரு மெத்தையும், 
ஒரு தலையணையும்,
கொண்டு,
உன் நினைவுகளில்,
என் உறக்கம்,
எனக்கு, அழகாய்,
வசப்படுகிறது..


**
குளிர்ந்த முன்னிரவு,
தீர்ந்து,
மெல்லிய சாரல்,
எட்டி பார்த்த,
பின்னிரவு வேளையில்,
உன்னுடனான என் ,
காதல் கனவுகள்,
கலைந்து,
சன்னல் வழியே,
தெறித்த சாரலை,
முகத்தில் உள்வாங்கி,
போர்வைக்குள்,
உன் நினைவை,
பத்திரப்படுத்துகிறேன்..


**
குளிரும் இரவில்,
கதகதப்பாய்,
உன் நினைவுகள்..


**
உன்னை போர்த்தியபடி,
குளிர்ந்த இரவின்,
குளிரை தவிர்க்கிறேன்..


**

இரவுகளின் காமம்... (துளிகள்.. )

காதலின் சங்கமத்தில், 
வெகு சீக்கிரம், 
தீர்ந்தது, 
நேற்றைய இரவு..


**
அவள் என்னை பற்றிகொண்டாள், 
இறுக.. 
அந்த பிடியில், 
நான் உணர்ந்தேன், 
அவளின் காதலும், 
காதலோடு சேர்ந்த பேரன்பும்..


**
இரவுகளின் காமம், 
பரபரவென்று, 
உடலெங்கும் பற்றி, 
எரிய, 

பின்னிரவு முடிகையில், 
வெப்பம் வடிந்து,
பேரன்பு பேச,
துவங்குகிறது,
காதலோடு..


**
பின்னிரவில் துவங்கிய,
அதீத அன்பு,
அதிகாலையில் பேரழகாய்,
முடிந்தது..


**
இரவின் நீள்சியில்,
காமம்,
தொடர,
பின்னி பிணைத்திருக்கிறது,
பெரு மரத்தின்,
கிளைகள்.


**


காலை பொழுதின் மழை...

விடியலில் துவங்கிய, 
காலை பொழுதின், 
மழை, 
இதயம் நனைத்து, 
செல்கிறது.. 

பரபரவென்று விரையும், 
மழலை கூட்டம், 
மனதை ஈர்க்கிறது.. 

காலை நேர பரபரப்பில், 
பால்காரரின் சைக்கிள் 
மணி ஒலி,  
அதிர்கிறது... 

கடமையே கண்ணாக, 
பேப்பர்க்காரன் வீசி, 
சென்ற, 
பேப்பர் மலையில், 
நனைந்து சிரிக்கிறது..

மற்றுமொரு காலை, 
பொழுதில், 
என் வாழ்வியல் கழிகிறது.. 

நானும் விரைகிறேன், 
இனி, 
நேரமாகி விட்டது, 
வழக்கம் போல, 
ஒரு இயந்திர சூழலுக்கு.. 

Friday, 14 June 2013

துளி.. துளி.. காதல் துளி..

அலங்கரித்த தேரில் 
தேவதை போல, 
வருகிறாள், 
என்னவள், 
என் முன்னிரவு, 
கனவுகளில்.. 

**
ரசனையற்ற வாழ்வு, 
அபத்தம்.. 

உன்னை ரசித்திராமல், 
வாழ்ந்து விட்டால், 
என் வாழ்வும்,
அபத்தமே..


**
வீணான வாழ்வியல், 
நிமிடங்களில், 
உன் நினைவு சுமந்த, 
நிமிடங்களை மட்டும், 
வீண் என்று கருதாமல், 
பொக்கிஷமாய், 
பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்..


**
அற்றை நாட்களின், 
அதிகாலை ஆலய, 
மண்டபங்களில், 
பரத கலை மிளிர, 
நடனமிடும், 
அழகிய பேரழகான,
பெண்ணாய்,
என் கனவுகளில்,
வந்து செல்கிறாய்..


**
இதுவரை,
பார்த்திராத உன்னை,
எனக்குள்,
ஒரு பேரழகு பெண்ணாய்,
உருவகம்,
செய்து வைத்திருக்கிறேன்..

தேவதைகளுள்,
மிக அழகானவள் நீ..

Tuesday, 4 June 2013

துளிகள்.. (( வெப்பம் ))

என் விழிகளை நிரப்பி, 
கொண்டிருக்கிறாய்.. 

உன்னை தவிர, 
வேறு எதுவும், 
எனக்கு, 
தெரியவில்லை..


***
தினம் உன் மூச்சு, 
காற்றை, 
மிக நெருக்கமாய்
பற்றி உணர்ந்து, 
சுவாசிக்கிறேன், 
மிக வெப்பமாக,
என் கனவுகளில்,
நெகிழ்ந்திடும்,
காதலோடு,
சற்றே காமம்,
சேர்த்து..

மழை தூவும், மாலை பொழுதில்..

மழை நீர், 
கேரளம் கடந்து, 
கொங்கு மண்டலம், 
வந்த மழை தூவும்,
மாலை பொழுதில், 
சில்லென்று துளிர்த்த, 
சிறு சாரலில், 
நனைந்தபடி, 
பேருந்து நிறுத்தம், 
ஓடி வரும், 
உன்னை கண்டு, 
மெய் மறந்தவனாய், 
மழை சாரலில், 
நனைகிறேன்.. 

Sunday, 2 June 2013

** கனவு **

** கனவு **

எனக்குள் உறங்கும், 
உண்மைகள், 

எனக்குள் உறங்கும், 
எண்ணங்கள், 

எனக்குள் உறங்கும், 
ஏக்கங்கள், 

எனக்குள் உறங்கும், 
ஆசைகள்.

எனக்குள் உறங்கும், 
காதல், 

இவை எல்லாமே, 
என் கனவு பெருவெளியில், 
தினம் சுழல்கின்றன, 
நிஜம் போல, 
உயிர்பெற்று...

துளிகள் ( காதலோடு...)

துளிகள் ( காதலோடு...) 

அந்திமம் வரை
மறக்க இயலா
அழகான நினைவுகளை
தினம் கொடுத்து
செல்கிறாள், என்னவள்
என் காதல் பொழுதுகளில்..


****
பித்தன் இவன் 
என்ற பெயரை 
சுமந்து உலவுகிறேன் 
இந்த சமூகத்தில்.

உன் மீது, 
பித்தானவன் என்று,
உனக்கு மட்டும்தான்,
தெரியும்.


****
தொடர் பார்வை, 
அம்புகளை, 
என் மீது வீசி, 
என்னை சிதைக்கிறாய், 
தினம்.. 

மௌனம் மட்டும், 
கலைப்பதில்லை, 
என்றொரு விரதமும்,
பூண்டிருக்கிறாய்..

நீ என்னை,
சிதைப்பது,
பிடித்திருக்கிறது,
ஆனால், ,
உன் மௌனம் கசக்கிறது..


****
விடுமுறை நாளில்,
கூட பரபரக்கிறது மனது..

அவளை காண,
அவள் இல்லம் இருக்கும்,
வீதியில்,
என் பயணம் தொடர்கிறது,
நாள் முழுக்க..காதல் கணங்கள்..


நீண்டதொரு காலத்திற்கு
பின் உடல் அழகாய்
சிலிர்த்து குளிர்ந்தது..

நான் கூட
முதன் முதலாய்
பேரானந்தம் கொண்டவனாய்
இருக்கிறேன்..

எனக்குள் அலையடிக்கும்
உணர்வுகள் அனைத்திலும்
மகிழ்ச்சி தவிர
வேறு எதுவும் இல்லை..

புத்தம் புதிதாய்
என்னை உணர்ந்தேன்...

இந்த நிமிடத்தில்
உலகில் நான் மட்டுமே
பெரும் மகிழ்வானவன்..

எனக்குள் பெருமையும்
சந்தோசமும் மாறி மாறி
அணைத்து கொண்டிருந்தன..

பிறந்த நாளில் இருந்து
அன்னையின் கதகதப்பில்
மழலை தீர்த்து,
பின் தந்தையின் அன்பில்
இளமை தொட்டு
தங்கையின் குறும்பில்
மகிழ்ச்சி கொண்டு
திரிந்ததை விட
மிக புதிதாய் ஒரு
மகிழ்வான உணர்வில்
இப்போது நான்..

எனக்கே என்னை
மிக பிடித்திருக்கிறது..

என்னுள் இருந்த
சோர்வு சோம்பல்
தீய பழக்கங்கள்
யாவும்,
மெல்ல அகன்று
நல்ல மனிதனாய்
உருபெற்று இருப்பதை
நினைக்கையில்
பெரு மகிழ்வு
கொண்டேன்..

இந்த வானம்,
இயற்கை யாவும்
முழுதாய் உணர்ந்து
ரசிக்கிறேன் முதன் முதலாய்..

நானும்,
என் மனதும் மிக
அழகாய் இருப்பதாய்
உணர்கிறேன்.

ஆம்,
நான் காதல் வயப்பட்டு இருக்கிறேன்..

அவளை முதன் முதலில்
கண்ட நாளில் இருந்து
அவள் கவனம் பெற
தொடர்ந்து
பின்,
அவள் காதல் சம்மதம்
பெற்ற நாளில் இருந்து
நான் இப்படிதான் இருக்கிறேன்..

இன்று இன்னும் மகிழ்வாய்
என்னவளோடு காதலை
கொண்டாடிட
முதன் முதலாய்
இந்த மலை பிரதேசத்தில்
சங்கமித்திருக்கிறோம்..

சந்தோஷ தருணங்களை
பரிசாய் கொடுத்து கொண்டிருக்கிறது
இந்த அழகான காதல்
இப்போது..

அவளை பிடித்திருக்கிறது..

அவளை பிடித்திருக்கிறது..

ஏதோ ஒரு ஆவல், 
அவளுடன் பேச தோன்றுகிறது..

ஆனால்,
நெருங்கினால் ஒரு படபடப்பு..

பரபரப்பான நகர தீவில்,
அவள் மட்டும்,
தனித்திருப்பதை போல,
உணர்கிறேன்.

ஏனோ,
சில நாட்களாய்,
மௌனம் கலந்த,
அவளின் குணம்,
நிரம்ப பிடித்திருக்கிறது.

என்னை ,
எப்படியோ வசீகரிக்கிறாள்.

காரணம்,
தேடவில்லை நான்.

காரணம் தேடினால்,
அவளை தொலைத்துவிடுவேனோ
என்ற பயமும் கூட..

அமைதியாய் இருக்கிறாள்,
சுற்றிலும் அவள் தோழியரின்,
சலசலப்பு இருந்தும்..

எனக்குள்ளே,
அவள் மிக உயர்ந்த இடத்தில,
சிம்மாசனமிட்டு,
அமர்ந்திருக்கிறாள்,
அமைதியாக..

மெல்ல அவள் வசம்,
நான் முழுதாய்,
சென்றுவிட்டேன்,
என்று மட்டும்,
நன்றாக புரிகிறது..

அவள்,
புனிதமானவள்.
அன்னையின் கரிசனமும்,
சகோதரியின் பாசமும்,
நிரம்ப பெற்றவள்,
என்ற என் கற்பனைகளில்,
நிச்சயம்,
உண்மை இருக்கிறது,
என்றே நினைக்கிறேன்..

உண்மை இருக்கும்..
ஏனென்றால்,
அவளின் பேரமைதியில்,
புனிதம் தனித்து,
தெரிகிறது..

காதல் இனி பேசும்..

தீராத யோசனையில், 
அவள் இருந்தாள்.. 

புதிராய் அவளை,
பார்த்தபடி இருந்தான், இவன்.

புதிராய் மெல்ல சிரித்தாள்,
அவள்..

இவன் எதுவும் புரியாது,
திகைத்து நின்றான்..

அவள் மெல்ல,
இவன் தலை கோதி,
காதலை இறுக,
பற்றி கொள்கிறாள்..

அவன்,முதன் முறை,
நெகிழ்ந்து போனான்..

அங்கே அழகான,
காதல் பேச துவங்கிற்று..

காதல் பொழுதுகள்.காதல் பொழுதுகள்.

பின்னிரவு தீரும்,
வேளையில்தான்,
சற்றே அசதியில்,
உறங்கி போனேன்..

முன்னிரவு துவங்கி,
பின்னிரவு வரையில்,
கடற்கரை மணலில்,
தனியே,
வானம் வெறித்து,
படுத்திருந்தேன்..

என்னுள் வேறு,
எந்த நினைவுகளும்,
இல்லை.

உன்னை பற்றி,
உன் மீதான,
என் ஆழ்ந்த காதல் பற்றி,
மட்டுமே நினைத்து,
கொண்டிருந்தேன்.

உணர்வுகளே இன்றி,
பட்டென்று மறுத்து,
சொல்ல எப்படி,
உனக்கு மனது,
வந்தது என்றுதான்,
புரியவில்லை..

பெண்கள் சில கணங்களில்,
இப்படிதான்,
அருகிலிருப்போர் மனம் ,
வலிப்பதை உணராது,
சென்று விடுவர்..

ஆனால்,
காலம் என்ற ஒன்று,
இருக்கிறதே,
அது மகா பெரிய,
ஞானி..

நிச்சயம் உன்னை,
மாற்றி விடும்.

என் மீது பிரியம்,
கொள்ளும்படி,
அந்த காலம்,
உனக்கு கட்டளையிடும்.

காதல்,
திருமணத்தில் முடியும்.

எனக்கு நம்பிக்கை,
நிறைய இருக்கிறது..

இன்று நீ,
என்னை வெறுத்து,
அல்லது ஒதுக்கி,
சென்று விடலாம்.

ஆனால்,
தொடரும் என் தொடர்தல்,
கண்டு,
காலம் உன்னை,
என் பக்கம் வீழ்த்தி விடும்..

இது நடக்கும்..
ஏனென்றால்,
இதுதான் இயற்கை..
இதுதான் காதல்..

காதலில் விழுந்து..

ஒவ்வொரு முறையும், 
பதட்டத்தில் 
அலைபாயும், 
உன் விழிகளை,
வெகுவாக ரசிக்கிறேன்.

மெல்லிய தென்றலுக்கு,
முன் நெற்றியில் புரண்டு,
விழும் கூந்தலையும்,
ரசிக்கிறேன்..

நீ சற்றே பதட்டம்,
சுமந்து,
அதில் காதலும் சுமந்து,
பேசுகிறபோது,
அசையும் உன் இதழ்களை,
ரசிக்கிறேன்..

பதட்டத்தில் சிவக்கும்,
உன் ஈர ரோஜா,
கன்னங்களை,
முத்தமிட்டு விடலாம்,
என்றும் தோன்றுகிறது..

விழிகளின் மீது,
படர்ந்திருக்கும்,
கண்ணிமை முடிகளை,
மெலிதாய் வருட,
வேண்டும் போல,
இருக்கிறது..

உன் பதட்டம்,
கூட கூட,
நான் உன்னை,
மிக மிக,
ரசிக்கிறேன்..

நம் காதலை,
வெகு அழகாய்,
காதல் பொழுதுகளில்,
சற்றே பதட்டம்,
கொண்டு,
வளர்க்கிறாய்..

உன் பதட்டம்,
சுமந்த
காதலை,
நான் வெகுவாய்,
ரசிப்பினும்,
உன் மீது சிறு,
குறை இருக்கிறது..

உன்னை காத்திட,
நானிருக்கையில்,
வேறு யாரேனும்,
பார்த்துவிடுவரோ,
நம் காதல் பொழுதுகளை,
என்ற பதட்டம்,
உனக்கெதற்கு..

நான் இருக்கிறேன்,
உன்னை அழகாய்,
ரசித்திட,
உன்னை அழகாய்,
என் வாழ்வில்,
சுமந்திட.. 

திகட்ட திகட்ட காதல் துளிகள்.

திகட்ட திகட்ட காதல் துளிகள். ..

உன்னை விரும்புவதை விட, 
வேறென்ன, 
எனக்கு பிடித்தமானதாய், 
இருக்கமுடியும்..


****
நினைக்க நினைக்க, 
உன்னை பற்றி, 
உன் பேரழகை பற்றி, 
வர்ணித்திட , 
ஆயிரமாயிரம் அழகிய, 
சொற்கள், 
பிறப்பெடுத்து கொண்டே, 
இருக்கின்றன..


****
நான் உயிர்த்திருப்பேன் , 
என் கல்லறையில், 
உன் நினைவுகளோடு.


****
என் சிநேகிதியே, 
உன் மீது, 
ஒரு அழகிய சிநேகம், 
கொண்டு,
காத்திருக்கிறேன்,
உன் காதலுக்காக..


****
கடலலைகள் கால்,
நனைக்க,
முன்னை விட,
மிக நெருக்கமாய்,
நம் மீது,
ஈரம் படர்ந்திருக்க,
வளர்கிறது,
அழகிய காதல்..


****
உன் நினைவுகளை,
சுமந்து,
திரியும்,
என் கனவுகள்,
என்றுமே,
இதம்..துளிகள் ( காதலுடன் )

துளிகள் ( காதலுடன்  ) ..

இனி ஒரு பிறவி, 
வேண்டாம்.. 


இந்த பிறவியில், 
முழுமையாய், 
ஆழ்ந்த காதலோடு, 
உன்னோடு வாழ்ந்து, 
முடித்தாலே போதும்..


நான் நிம்மதி, 
கொள்வேன்..


****
உன்னை விரும்பி, 
உன் மீது, 
காதல் கொண்டதால், 
மட்டுமே, 
நான் புதிதாய், 
பேரழகு மனம், 
கொண்டவனாய்,
பிறந்திருப்பதை போல,
உணர்கிறேன்..


****
இப்போதைக்கு,
உன்னை மேலும்,
மேலும்,
ஆழமாய் நேசித்திட,
சிந்திப்பதை தவிர,
வேறு எதையும்,
நான் சிந்திப்பதில்லை..


***
பேரழகான உன்னை,
மலர் தூவி,
வரவேற்க,
அழகிய பச்சை,
புல்வெளியை,
தேடி கொண்டிருக்கிறேன்..


****
இந்த காதலில்,
கிடைத்திருக்கும்,
அளவற்ற பேரன்பு,
அழகிய ரசனை உணர்வு,
என்னை,
எனக்கே மிக,
பிடித்திருக்க செய்கிறது..


துளிகள் ( சற்று காதல் சேர்த்து ) 1.

துளிகள் ( சற்று காதல் சேர்த்து ) .. 

உன்னை தொடர்கிறேன்,
பொய் கோபம் காட்டி, 
சட்டென்று நின்று, 
என்னை முறைக்கிறாய். 

பிறகு மீண்டும்,
நடக்கிறாய்,
எனக்கு தெரியாமல்,
மெல்லிய புன்னகை,
பூத்தபடி..

உன் கள்ளம் அறியாமலா,
நான் உன்னை,
தொடர்வேன், அடி கள்ளி..


*******


நீ அப்படிதான்..
உன்னை பற்றி,
உன்னை விட,
எனக்கு தெரியும்..

உன் மௌனத்தின்,
பின்னால் ஒளிந்திருக்கும்,
உணர்வுகளை,
உன்னை விட,
எனக்கு நன்றாய்,
தெரியும்..

ஏனெனில்,
உன் மீது பட்டு,
தெறிக்கும்,
என் சுவாச காற்றை,
மீண்டும் ஆழமாய்,
சுவாசிப்பவன் நான்..

அத்தனை பிரியம்,
உன் மீது..

துளிகள் ( சற்று காதல் சேர்த்து )

துளிகள் ( சற்று காதல் சேர்த்து ) 

இன்னும், 
இன்னும், 
என்னை ஈர்த்துக்கொண்டுதான் , 
இருக்கிறாயே தவிர, 
என்னை சலிப்படைய, 
வைப்பதே இல்லை. நீ..


**
நான் கூட, 
அழகாய், 
இருக்கிறேன், 
என்று பொய், 
சொல்ல உன்னால்தான், 
முடியும் பெண்ணே.. 

இந்த பொய்கள்தான், 
உன்னிடம், 
எனக்கு பிடித்தது..


**
உன் பார்வையில், 
என்னை வெகு, 
அழகாய் வீழ்த்திவிட்டு, 
மௌனம் சுமப்பது, 
ஏனோ பெண்ணே ?


**உன் சுக, 
துக்கங்களில், 
பங்கு பெறுவது, 
நானாக மட்டுமே, 
இருக்க வேண்டும்.. 

அதற்காகத்தானே, 
இத்தனை காதல், 
போராட்டம், 
உன் பின்னே..


**
உன்னை தொடர்வதை, 
தவிர, 
மிக முக்கியமான, 
வேலைகள் பல இருந்தாலும், 
உன்னை, 
தொடர்வது மட்டுமே, 
பிடித்திருக்கிறது..
சில சுமைகள், 
வெறுப்புகள், 
நிதர்சன சூழல்கள், 
காரணமாக, 
வலைப்பதிவில்,
எழுதுவது, 
விட்டு போயிற்று.. 

இனி தொடரும், 
என்று, 
நம்பிக்கையுடன், 
இன்று முதல், 
பயணிக்கிறேன் மீண்டும் ஒரு முறை..

Tuesday, 22 January 2013

* காதலை நாடி *

** காதலை நாடி * *
என் காதல் தேசத்தில்,

வித விதமாய்,

தினம்,

பூத்து குலுங்குகிறாய்...

உன்னை தொடாமலே,

அழகாய் ரசிக்கிறேன்,

இதயம் கொண்டு..
**
உனக்கான,

என் கவிதைகள்,

இன்னமும் நிறைய,

காத்திருக்கிறது..

உன் மௌனம் கலைத்த,

பின்னே,

வரிசையாக தொடரும்,

என், உனக்கான கவிதைகள்..
 
**
எனக்கென்று ஒரு கனவு,

அதில் என்றும்,

நீ தேவதையாக..

நான் உன் ,

சேவகனாக..

கனவுகள் தினம் தொடர,

ஆசை எனக்கு..
 
**
விருப்பம் ஒளித்து,

என்னை மறந்திட,

முயற்சிக்கிறாய்.

ஆனாலும்,

முடியாது நீ,

போராடுவதை அறிவேன்..

சுலபத்தில் மறந்திடுமா என்ன...

ஆனாலும்,

உன் மீது கோபம் இல்லை.
**
அதிகாலை,

வெண் பனியில்,

ஒற்றி எடுத்த ,

ரோஜா இதழை போல,

உன் நினைவுகள்,

என்றும் இதமாய்,

எனக்குள்..