என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 21 September 2012

தவமாய் தவம்

செயல்பட மறுக்கிறது,

மனது..

அரைமணி நேரத்தில்,

நான்கைந்து சிகரட் பிடித்தாயிற்று.

**
ஒரு படபடப்பு,

தவிப்பு,

இனம் புரியா மகிழ்வு ,,

எனை சுற்றி.

**
எனை கண்டதும்,

அழகாய் தலைகுனிந்து,

மர்ம புன்னகை புரிந்ததை கண்டு,

மனம் தட்டு தடுமாறி,

செயலற்று கொண்டு இருக்கிறது..

**
தவமாய் தவம் இருக்கிறேன்,

அந்தி சாயும் நேரம் வரை,

காத்திருந்து உன்னை மீண்டும்,

தரிசிக்க..

**
காதல்.. அழகிய காதல்..

**

பிரபஞ்சம் ரசிக்கிறேன்

ஏதுமற்று,,

வெற்று சதை பிண்டங்கள்,


ஒன்றிணைந்த உடல்,



என்னும் விந்தை பெயரில்,

வானம் பார்த்தபடி,,


பிரபஞ்சம் ரசிக்கிறேன் ..


**

'நான்' ஏதுமில்லை.

இந்த பிரபஞ்சம் நிரந்தரம்,,


நான்(ம்) பிரபஞ்சத்தின்,,


அழிவு பொருட்களில் ஒருவன்(ர்) ..


**

வானம்,,

கருமை நிறமாக,


முழு நிலவின் உதவியோடு,


மர்ம புன்னகை வீசியபடி,,


எக்காளமாய்,,


எனை பார்த்து சிரிப்பதை போல,


உணர்வு..


**

ஆம்,

பிரபஞ்சம் சிரிக்கிறது,


நம்மை அல்லது என்னை பார்த்து..

நானற்று

நானற்று,

நாமாக இயங்கிய நாட்களின்,

மகிழ்வுகள்,

சற்றே சுயநலம் கண்டு,

நானாக மாறியபோது ,

தொலைந்தனவே..

**
'நான்' என்ற ஆணவம்,

என்னை சிறுமை படுத்தியதென்ன..

வீழ வைத்ததென்ன.

**
'நாம்' என்ற வலிமையின்,

அர்த்தம் புரிந்ததே இன்று.

மீண்டும்,,

'நாம்' ஆக மாறும் கனவில்,

'நான்' இயங்குகிறேன், தற்போது..

சமூகம்..

நான் சீரற்று,,

இயங்குவதை போல,,

ஒருவித வெறுமை, குழப்பம் சேர்ந்து,

கழிகிறது ,

சமீப காலங்கள்..


**

என்னை பற்றிய தவறான ,

எண்ணங்கள் பரவுவதை போலவும்,


ஒரு பிரமை..


**

தேவையின்றி அளவுக்கதிகமாக,,

பிறரால் கவனிக்கப்படுவதை போன்று,,


உணர்கிறேன்..


*

இங்கு பிறர் என்பது சமூகம்..

காதல்.. அழகிய காதல்....

மலர் வனத்தில் ,,

அழகிய நறுமணம் வீசும்,


மலராக நீ..


உனக்கு தெரியாது,,

உன் பின்னே ஒளிந்தபடி,


தென்றலாய் நான்..


**

காதல். அழகிய காதல்.
 
*****************
இனியும்

கடக்கிறது ,,


தொடர்கிறது,,


வாழ்க்கை..

காதலெனும் அன்பு பிடியில்,,


ஆயுள் முடிந்த பிறகும்..


**

காதல்.. அழகிய காதல்..

**
 
***********************
அழகிய சிறுகதையாய் நீ,

அதன் சின்னஞ்சிறு,,


ஓவியமாய் உன் அழகு..


ரசித்து படிப்பவனாய் நான்..

**

காதல்.. அழகிய காதல்..
**
 
**************************
 
மெல்லிய கோட்டின்,

இருபுறமும்,,

தவிப்பாக,,

காத்திருக்கிறோம்,,

காதல் என்னும்,,

அந்த மெல்லிய கோட்டை,,

தாண்டிட..

**
தவிப்பான, தயக்கங்கள்,,

தடை கற்களாய்,,

தொடர்கின்றன..

**
காதல்.. அழகிய காதல்.
**
 
 
 

காதல்..

காதல்,.

கருகிய கனவுகளோடு,,


பாலையில் வீழ்ந்து,


வலிக்கும் நினைவுகளோடு ,

இறுதிவரை தொடரும்,


நிசப்த தனிமை..


**

காதல்.. நினைவின் பிடியில்.
**
**************************************
காதல்..

அர்த்தம் பொதிந்த,,


துயர பார்வைகளில்,


நீண்ட நாள் கழித்து,

எதிர்பாரா சந்திப்புகள்,


பிரிவின் வலிகளோடு..


** காதல்.. தீரா காதல்.. நினைவுகளோடு.. **
 
*********************************************
 
நீ ..

நான்..


அன்பு..


இளமை..

காதல்..


உறவு..


புனிதம்..


வாழ்க்கை..


அந்திமம்..


பிரிவு..


தனிமை..


பிரிவு..


தீரா துயரம்..


தீரா நினைவலை..


**

காதல்.. அழகிய காதல்..
 
**
காதல்..

அனல் தெறிக்கும்,,


மதியத்தின்,


ஆலமரத்தின் நிழல்..

**

காதல்.. அழகிய காதல்..

**
 ************************************************
மனதும் மனதும்,,

ஒட்டி கொண்டு,,

அன்பின் பிடியில்,,

காதல் இறுக சேர்ந்தபோது,

அன்பை தவிர,,

சிதறி ஓடின,,

மதங்களும்,

மொழிகளும்,,

இன்னபிற அடையாளங்களும்..

** காதல்.. அழகிய காதல் **
 
 

Tuesday 11 September 2012

மனது என்றொரு மாய சக்தி,,

மனது என்றொரு,,

மாய சக்தி,,

தீரா நினைவலைகளை ,,

கொண்டு ,,

பின்னிரவின் ஆழ்ந்த உறக்கத்தை ,,

தடை செய்வதே,,

வேலையாக கொண்டிருக்கிறது.

***
மீண்டும், பின்னிரவின் ,,

நித்திரை கலைந்த தனிமையில்,,

வானம் பார்த்தபடி,

தனிமை தவம் இருக்கிறேன்,,

இல்லாத இறைவனை நினைத்து..

நான்..

எனக்கான விருப்பத்தை,,

சற்றே தியாகம் செய்து,,


சூழலின் நிர்பந்தத்திற்காக,,

வேறு விதமாக வாழும்,, பல மனிதரை போல,,

வாழ்ந்து கொண்டிருக்கும்,,

எளிய மானிடன்..

நான் அவ்வளவே..
**************************************************8
 நான்,,

சூழலின்,, சமூகத்தின் ,,

பார்வையில் அற்பமாக நினைக்கபட்டவன்,

வீழ்ந்த ஒரு நாளில்..

**
இந்த சமூகம்,, அத்தனை எளிதில்,

என்னை வாழ விடாது என்று,,

நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும்,,

ஒரு எளிய மானிடன்.. நான்

ஞானி..

ஞானி,

என்பவன், முற்றும் துறந்தவன் அல்ல..

வாழ்வியல்,, தத்துவம் அறிந்தவன்..

**
ஞானி..

பற்றற்றவன்.

உள்ளது உள்ளபடி,,

உண்மைகளை புரிந்து வைத்திருப்பவன்..

**
ஞானி..

அடக்கம் என்றொரு ஆயுதம் கொண்டவன்..

வெற்று ஜம்பம் பேசாதவன்.

**
ஞானி.

பகைவனுக்கும் உதவி செய்பவன்.

**
ஞானி.

கடவுள் அல்ல..

மனிதன்..

உணர்ந்த மனிதன்..

தெளிந்த மனிதன்..

மனிதம் கொண்ட மனிதன்..

**
பகட்டான போலி வாழ்வு வாழும்,,

இன்றைய போலி ஞானிகள் உலகில்,,

இந்த எளிய ஞானிகளை காண்பது சிரமமாக இருக்கிறது...

**
எளிய ஞானிகளை இனம் கண்டு,,

வணங்குவோம்.. என்றும்..

** வாழ்க வளமுடன் **.