என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 10 July 2014

என்னிலிருந்து.. காதல் வரிகள்.

** என்னிலிருந்து.. காதல் வரிகள்..** 

உன்னை விரும்பி,
உன்னை தொடர்கிறேன்,
தினம்..

இந்த வினாடியில்,
இந்த உலகில்,
உன்னை மட்டுமே,
விரும்புகிறேன்..

*
அவளுக்கு என்னை பிடிக்கும்,
என்பதை நானறிவேன்..

அவள்,
நடிக்கிறாள் என்பதையும்,
நானறிவேன்..

**
மழையில்,
நனைய பிடிக்கிறது,
உனக்கு குடை பிடித்தபடி..

**
குளிர் தென்றல்,
சாமரம் வீச,
விஸ்தாரமான பச்சை புல்வெளி,
காதல் உணர்வுகளால்,
திளைக்கிறது,
நம் காதல் கணங்களில்..

**
உனக்காக காத்திருக்கையில்,
இந்த விஸ்தாரமான,
பச்சை புல்வெளியின்,
நிசப்தம் கூட,
காதல் பேசுகிறது,
என்னில்..

**
தூர தெரிந்த,
இரு விண்மீன்களில்,
நான் ஒன்றாய்,
நீ ஒன்றாய்,
கண்சிமிட்டும்,
நம் காதல் கனவுகள்,
இதம்.. பெண்ணே.

**
என் இதயம்,
என்பது,
உன் பிம்பம்,
சுமப்பது..

**
எத்தனை தொலைவில்,
நீ இருந்தாலும்,
என் உணர்வுகளில்,
நீ வெகு அருகாமையில்தான்,
இருக்கிறாய்.. எந்நேரமும்..

**
உன்னை பார்த்ததும்,
படபடக்கும்,
என் உணர்வுகளை,
காதல் என்றுதான்,
உணர்கிறேன்..

**
மெல்ல நீ,
விடை பெறுகையில்,
என் கனவுகள்,
தீர்ந்து,
விடியலும் துவங்கி விடுகிறது.

**
உன் மீது விழுந்து,
சிதறும்,
மழை துளிகளோடு,
நானும்,
பரவசமாய் சிதறுகிறேன் .

கனவுகள் 2

** கனவுகள் **

ஆழ்ந்த உறக்கம், 
ஒன்று எதிர்பாரா பரிசாய், 
சிறிய இடைவேளைக்கு பின், 
கிடைத்தது..

சலனமற்ற அமைதியான,
உறக்கம்..

என்னை சுத்தமாய்,
மறந்த ஒரு உறக்கம்,
அது..

அன்று,
வீட்டில் அனைவரும்,
ஊருக்கு சென்று விட,
தனித்து இருந்தேன்..

மிக சிறிய வீடுதான்,
என் வீடு..

மொத்தமே,
சமையலறையும் சேர்த்து,
மூன்று சிறிய அறைகள்தான்..

ஆழ்ந்த நிசப்த,
உறக்கம் மெல்ல,
தடைபட்டது..

என் வீட்டு கதவு,
யாரோ திறக்க முயற்சிக்கும்,
சப்தம்.

இருவரின் பேச்சு குரல்,
கிசுகிசுப்பாய் கேட்டது.

கடிகாரம்,
அதிகாலை இரண்டரையை,
காட்டியது..

சிலீரென்று ஒரு அச்சம்,
உடலெங்கும் பரவ,
கண்களை இறுக மூடியபடி,
அந்த குரல்களை கவனித்தேன்..

ஒன்றும் புரிபடவில்லை..

என் படுக்கை அறை கதவை,
தாளிட முயற்சிக்கிறேன்,
படுக்கையை விட்டு,
எழவும் முடியவில்லை..

ஏதேதோ இறைவன் நாமம்,
சொல்லி கண்களை,
இறுக்கமாக மூடி கொண்ட பொழுதில்,
முன்னறை கதவு திறந்து,
கொண்டது..

இரண்டு உருவங்கள்,
என்னருகில் நின்றன..

பின், அந்த உருவங்கள்,
மெல்ல குளியலறை பக்கம் சென்று,
கை கால் அலம்பும் சப்தம்,
கேட்டது..

ஒரு உருவம்,
இன்னொன்றிடம் ஏதோ,
சொல்லி விடைபெற்று கொள்ள,
இன்னொரு உருவம்,
என் படுக்கையின் கால்மாட்டில்,
அமர்ந்தது..

வினாடிகள் அச்சத்தின்,
பிடியில் வெப்பமாய்,
நகர்ந்தது..

சில விநாடிகள்தான்,
கண்களை மெல்ல திறந்து,
பார்க்கிறேன்,
அந்த உருவம் ஒரு பெண் ஆவி..

ஆனால்,
யாரென்று தெரியவில்லை..

சட்டென்று,
என் கால் பிடித்து,
வாயிலும் வயிற்றிலும்
அடித்து கொண்டு
கதறி அழ ஆரம்பித்தது.

அவ்வளவுதான்,
வியர்த்து எழுந்து,
உடை மாற்றி,
பதட்டத்தோடு என் இருசக்கர,
வாகனம் எடுத்து,
அருகில் உள்ள பேருந்து,
நிலையம் விரைந்தேன்..

அந்த இருளான,
பின்னிரவில், பேருந்து நிலையத்தின்,
மக்கள் நடமாட்டம் கண்ட பின்னே,
என் படபடப்பு அடங்கி,
கண்டது கனவென்று உணர்ந்தேன்..

ஒரு தேநீர் பருகி,
என்னை நானே ஆசுவாசப்படுத்தி,
கொண்டேன்..

**
இரு வருடங்களுக்கு முன்,
நிகழ்ந்த கனவு இது.
கனவின் பின்னணி காட்சிகளும்,
நிஜத்தின் பின்னணி காட்சிகளும்,
ஒன்று போலவே இருந்ததுதான் பெரும் வியப்பு *

என்னிலிருந்து..

** ** என்னிலிருந்து.. ** 

பாரதியை , 
அவன் வாழ்கின்ற , 
காலத்தில் , 
புறக்கணித்த 
சுயநல சமூகம், 
இன்றும் தொடர்கிறது .. 

**
வாய் கிழிய,
வேதாந்தமும்,
எகத்தாளமும் பேசும்,
சமூகம்,
மெல்ல விலகி சென்றிடும்,
பாதக நிகழ்வுகளை,
கண்டால்..

**
வேதனை நிகழ்வுகள்,
இளமையின் பரிசு,
வெள்ளந்தி மனிதர்க்கு ..

**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.

**
ஒரு பறவையின்,
நட்பு வேண்டும்,
உற்சாகமாய்,
வான வெளியில் திறந்திட..

**
எதற்கோ,
எங்கோ ஓடி கொண்டே,
திரிகிறது,
சமூகம்..
.. ** 

பாரதியை , 
அவன் வாழ்கின்ற , 
காலத்தில் , 
புறக்கணித்த 
சுயநல சமூகம், 
இன்றும் தொடர்கிறது .. 

**
வாய் கிழிய,
வேதாந்தமும்,
எகத்தாளமும் பேசும்,
சமூகம்,
மெல்ல விலகி சென்றிடும்,
பாதக நிகழ்வுகளை,
கண்டால்..

**
வேதனை நிகழ்வுகள்,
இளமையின் பரிசு,
வெள்ளந்தி மனிதர்க்கு ..

**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.

**
ஒரு பறவையின்,
நட்பு வேண்டும்,
உற்சாகமாய்,
வான வெளியில் திறந்திட..

**
எதற்கோ,
எங்கோ ஓடி கொண்டே,
திரிகிறது,
சமூகம்..

கனவுகள் 1*

** கனவுகள்  1** 

சென்ற நூற்றாண்டின் துவக்க வருடங்களில், 
ஒரு வார இறுதி நாளை, 
கழிக்க, 
ஒரு பெரிய பொழுது போக்கு,
கட்டிடத்திற்கு,
சென்றிருந்தேன்..

வார இறுதி நாள்,
என்பதால் நிறைய,
மக்கள் கூட்டம்..

அது ஒரு ஐரோப்பிய,
தேசம்..

அந்தி நேரம் துவங்கி,
மெல்ல இருள துவங்கி,
இருந்தது...

உற்சாகமாய் இருந்த,
அந்த பொழுதில்,
சட்டென்று ஒரு இனம் புரியா,
அச்சம் மனதை கவ்வி கொள்ள,
சற்றே தூரமாய் பார்வையை,
செலுத்தினேன்..

தூரத்தில் தெரிந்த,
ஒரு உருவத்தை உற்று,
நோக்கினேன்..

சில வினாடிகளில்,
சுதாரித்து அந்த உருவத்தை,
உணர்ந்து கொண்டதும்,
சிலீரென்று அடிவயிற்றில்,
பெரும் அச்ச பிரளயம்,
ஒன்று உருவானது..

அந்த உருவம் என்னையே,
குறிவைப்பதை இருந்தது..

மெல்ல மெல்ல,
அங்கிருந்த வெள்ளை இன,
மக்களுக்கும் சூழல் புரிபட,
அச்சம் கொண்டனர்..

நானும்,
என்னோடிருந்த சிலரும்,
மெல்ல பின்வாங்கி,
மாடி படி வழியே ஏறி,
பின்வாசல் அடைந்து,
தப்பித்து விடலாம்,
என்று முயற்சித்து கொண்டிருந்தோம்..

அந்த உருவம்,
மெல்ல அந்த பிரமாண்ட கட்டிடத்தின்,
கலையம்சங்களை பார்வையிட்டவாறே,
எங்களை நோக்கி நகர்ந்து,
வந்து கொண்டிருந்தது..

ஒரு வித அச்சம்,
உடலெங்கும் ஆட்டி படைக்க,
வேகமாய்,
தப்பித்து பின்வாசல்,
வழியே வெளியேறினேன்..

என்னோடு சிலரும்,
பீதியில் வெளியே வந்தனர்..

அந்த கடை வீதி எங்கும்,
சாரட் குதிரை வண்டிகளும்,
வெள்ளை தோல் சீமான்களும்,
சீமாட்டிகளும் வருவதும்,
போவதுமாய் இருந்தனர்..

சற்றே அச்சம் விலகி,
திரும்பி பார்க்கையில்,
மீண்டும் அந்த உருவம்,
எங்களை குறிப்பாக,
என்னை குறிவைத்து,
நகர துவங்க,
அச்சத்தில் அருகிருந்த,
பழமையான தேவாலயத்தின்,
உள்ளே நுழைந்தேன்..

மிக பழமையான,
பதினான்காம் நூற்றாண்டு,
தேவாலயம் போல இருந்தது..

இறுகிய மண்,
மற்றும் கற்களால் ஆன,
பெஞ்சில் உட்கார்ந்தபடி,
பலர் பிரார்த்தனை செய்து,
கொண்டிருந்தனர்..

அந்த பிரார்த்தனை கூட்டத்தின்,
நடுவே நானும் புகுந்து,
கொண்டேன்..

தூரத்து மேடையில்,
பாதிரியார் பிரார்த்தனை
செய்திகளை வாசித்து கொண்டிருந்தார்..

சில நிமிடங்கள் கழிந்து,
நுழைவாயிலை எட்டி பார்த்தேன்...

அந்த உருவம்,
வெளியே நின்று கொண்டிருந்தது..

அந்த உருவம்,
ஒரு பேய்..

எதற்கோ என்னை விரட்டுகிறது..

அச்சம் பயங்கரமாய்,
தாக்க,
திடுக்கிட்டு விழித்தேன்..

வியர்த்து கொட்டியது,
உடலெங்கும்..

கனவு கலைந்தது..

Thursday 4 July 2013

மழை இரவொன்றில்....

ஒரு மழை காலத்து , 
இரவொன்றில், 
சன்னல் திறந்து, 
மழை சாரலை, 
மெல்ல முகத்தில், 
உள்வாங்கி,
உன் நினைவுகளோடு,
கரம்கோர்த்து,
சிலிர்த்தேன்..

மழை,
மலை வாசஸ்தலம்,
இரண்டும் சேர்ந்ததொரு,
வாழ்வியலில்,
அழகான இளமை பருவம்,
உன்னோடு,
காதலாகி பின்னி
பிணைந்திருந்தது ..

அற்றை நாளின்,
சூழல்,
அற்றை நாளின்,
உறவுகள்,
அற்றை நாட்களின்,
நண்பர்கள்,
என்று அற்றை நாட்கள்,
அழகாய் இருந்தது..

இதில் என்னோடு,
நீ,
மழலை காலத்தில்,
இருந்தே,
பேரன்பை பேசி,
இறுக்கமாய்,
நட்பை வளர்த்தாய் ..

உன் பெற்றோர்,
உன் உறவுகள்,
என் பெற்றோர்,
என் உறவுகளோடு,
அழகிய சிநேகம்,
அழகிய மனிதம்
வளர்த்து
அழகாய் வாழ்ந்தனர் .

பிறிதொரு அழகிய,
மழை நாளில்,
காதலை சொன்னேன்..

காத்திருந்தது போல,
ஏற்று கொண்டாய்..
என் வாழ்வியலில்,
அழகாய் இணைந்தும்,
கொண்டாய்..

நாட்கள்,
வருடங்களாக,
வேகமாக நகர்ந்ததை,
உணரவே இல்லை...

அத்தனை சிறப்பாய் ,
ஒரு வாழ்வினை ,
எனக்கு பரிசளித்தாய் ..

நாட்கள் நகர ,
அந்திமம் தொட்ட போது,
நம் பிள்ளைகளின்,
திருமண கடமைகளையும்,
அழகாய் முடித்தாய்..

பொருள் சேர்க்க ,
பிள்ளைகள் எங்கோ ,
தொலைவில் சென்றுவிட ,
மீண்டும் நீயும்,
நானும்,
அழகான அந்திம,
காதலில்,
வாழ்ந்திருந்தோம்..

ஒரு மழை நாளில்,
உறக்கத்திலேயே,
என்னை அணைத்தபடி ,
என்னை விட்டு பிரிந்தாய்..

ஓடோடி வந்த பிள்ளைகள்,
உனக்கான,
இறுதி பயணத்தில்,
கலந்து கொண்டு,
மீண்டும் தொலைவில்,
சென்று விட,

என் வாழ்வியலில்,
முதல் முறையாக,
அந்திம காலத்தில்
நான் தனித்து விடப்பட்டேன்...

உன் நினைவுகளோடு,
புதிதாய் தனிமையும்,
சேர,
நாட்கள் நகர்கிறது,
என் இறுதி பயணத்தை,
எதிர் நோக்கி..

Tuesday 18 June 2013

நீ உறங்கு.

தென்றலை வழிமறித்து, 
மெல்லிய குளிரை,
அழகிய நறுமணத்தை, 
அதனிடம் கொடுத்து, 
விழி மூடி, 
தேவதை போல உறங்கும்,
உன்னிடம் அனுப்புகிறேன்..

என் தென்றல்,
அங்கு வந்து சேர்ந்திருக்கும்,
இந்நேரம்..

அழகான உணர்வுகளில்,
இன்றைய நம்,
காதல் பொழுதுகளை,
எண்ணி,
சிலிர்த்தபடி கிடக்கிறேன்,
என் அறையில்..

இந்த இரவின்,
நிசப்தத்தில்,
நான் மட்டும்,
மிக மகிழ்வாக,
உன்னோடு உரையாடி,
கொண்டிருக்கிறேன்,
கற்பனையில்..

உனக்கும்,
எனக்குமான வாழ்வியல்,
வெகு அழகாக,
துவங்கி விட்டது,
என் கனவுகளில்..

நாளை நிஜம் பெரும்,
இந்த கனவுகளில்,
பேரழகை இடைவிடாது,
சேர்த்து கொண்டிருக்கிறேன்,
உனக்காக..

நீ ,
இந்நேரம் உறங்கி இருப்பாய்,
என் மீது கொண்ட,
நம்பிக்கையில்..

நான் இங்கே,
உனக்காக,
நம் வாழ்வியலை,
வடிவமைத்து கொண்டிருக்கிறேன்,
உறங்காமல்..

என் தேவதை பெண்ணே,
நீ உறங்கு,
நானிருக்கிறேன்...

என் ஆயுள் தீர்ந்த பின்னும்,
உனக்கான என் பாதுகாப்பு,
தொடரும்..

நீ உறங்கு..

துளிகள்.. ( காதல் சொட்டு சொட்டாய்.. )

யாருமற்ற மலர் வனம், 
ஒன்றில், 
நாம் கொண்டாடிய, 
காதல் பொழுதுகளின், 
நினைவினில், 
நான் தித்திப்பாக, 
இந்த வினாடியில்.. 

***
மழைத்துளியில், 
நனைந்திடும் பெண்ணே, 
உன் அழகிய தோற்றம்,
கண்டு, 
பெரிதாய் வியக்கிறேன்.. 

இறைவன் அழகிய,
ரசனை உணர்வில்,
இருந்த போது,
உன்னை படைத்திருக்க வேண்டும்..

நீ எனக்கானவள்,
என்ற என் கனவு,
குதிரை புறப்பட்டு விட்டது,
நிஜத்தோடு காதலை,
உயிர்ப்பிக்க.


**
உன்னை முதன் முதலில்,
கண்ட,
ஒரு மழை நாளின்,
ஈரமும், குளிரும்,
இன்னமும்,
என்னுள்ளே இருக்கிறது..


**
உச்சி முதல்,
உள்ளங்கால் வரை,
உன்னை ரசிப்பதும்,
ஒரு அழகிய ரசனை,
உணர்வுதான்.. பெண்ணே..


**
உன்னை பிரிந்து விட்டேன்,
என்றால்,
என் உயிர் பிரிந்து விட்டது,
என்றே பொருள்படும்..