Google+ Badge

என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday, 25 July 2012

விடைபெறும் தருணம்

கோபத்தோடு மௌனித்தேன் சில நேரம்,,

என் தந்தை என்னை அடித்த போது..

**
சற்றே எதிர்த்து பேசினேன்,,

என் தாய் என்னை கண்டித்தபோது..

**
கோபத்தோடு கடிந்தேன்,,

என் தங்கை என்னை திட்டியபோது,

**
இப்போது,,

மௌனம் மட்டுமே,,

என் துணை..

**
என்னை திட்ட கூட,,

கண்டிக்க கூட ,,

ஆளில்லாத தனிமையில்,,

அந்திம காலத்தில்..

முதியோர் இல்லத்தில்,,

தன்னந்தனியே,,

உறவுகள் இருந்த பொழுதும்,,

அனாதையாக...

**
வாழ்வியல்..

விடைபெறும் தருணம் ...

பிறந்தபோது வந்தது போல் ,, தனியாக,,

***

நான்.. தந்தை

அன்று ,,

ஆவலோடு பேசுவான்,,

என் மீது மட்டுமே,,

பிரியம் காட்டுவான்..

நிறைய கேள்விகள் கேப்பான்..

நானும் அழகாக பதில் சொல்வேன்,..

அழகாக ரசிப்பான்..

**
இன்று,..

நான் ஒரு கேள்வி கேட்டேன்.

எரிந்து விழுகிறான்..

என் அருகாமை ,,

அவனுக்கு பிடிப்பதில்லை..

**
நான்.. அவன் தந்தை..

**
அன்று,,

அவன் குழந்தை..

இன்று,,

அவன் இளைஞன்..

Monday, 23 July 2012

நல்ல மனிதர்கள்

அன்பின் உருவமான,,

அன்னையை தரிசித்து,,

வரும் வழியில்,,

சீர்காழி கோவிந்தராஜனை,,

கண்டு,,

முருகன் பாடல்களை,,

அவர் பாட கேட்டு மகிழ்ந்து,,

புறப்பட்ட பொழுது,,

அங்கே வந்த ,,

திருமுருக கிருபானந்தவாரியாரை,,

சந்தித்து,,

சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்து,,

கிளம்பினேன்..

**
வரும் வழியில்,,

ஓரிடத்தில்,,

சினிமா படபிடிப்பு,,

நடந்து கொண்டு இருக்க,,

எட்டி பார்த்ததில்,,

சிம்ம குரலோன்,, சிவாஜி,,

கர்ஜித்து கொண்டு இருந்தார்...

**
மீண்டும் தொலை தூர,,

பிரயாணத்திற்கு தயாராகி,

சென்று கொண்டிருந்த போது,,

ஒரு பொட்டல் காட்டில்,,

ஆடு மேய்க்கும் சிறார்களுடன்,,

கல்வி பற்றி பேசி கொண்டு இருந்த,,

கர்மவீரரை கண்டு,,

மனமகிழ்ந்து,, சந்தித்து,,

ஆசி பெற்று புறப்பட்டேன்..

**
வெகு தூரம் சென்ற பிறகு,,

ஒரு அரசியல் கூட்டம்,,

எட்டி பார்த்ததில்,,

எம்,ஆர். ராதா , அட்டகாசமாக,,

கைதட்டல் ஒலிகளோடு ,,

பேசிக்கொண்டு இருந்தார்,..

ரசித்தபடி,,

சிறிது நேரம் கழித்து,,

கிளம்பினேன்,..

**
சேரும் இடம் வந்ததும்,,

இறங்கி ,,

அருகில் இருந்த கோவிலுக்குள்,,

நுழைந்தேன்,,

எளியோரோடு எளியோராக,,

நின்றபடி,,

சுவாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தார்,,

கருணை கொண்ட எம்,ஜி,ஆர்..

**
அவரை சந்தித்து மகிழ்வோடு,,

திரும்பினேன்..

சிறிது நேர ஓய்வில்,,

சட்டென்ற ஒரு பரபரப்பு,,

வீதி எங்கும்,,

ஆம்,,

சமூக நீதி போராளி,,

பெரியார் சென்று கொண்டு இருந்தார்..

**
காலங்கள்.. அன்று,,

பார்த்தோர் அனைவரும்,,

நல்ல மனிதர்கள்..

**
பெருமூச்சொன்றை விட்டபடி,,

அந்திம காலத்தில்,,

இன்றைய நிலையை ,,

நினைத்து பார்க்கிறேன்..

நல்ல மனிதர்,, என்ற,,

ஆன்மீகவாதியை,

தலைவரை,,

நடிகரை,,

இனம் காண முடியவில்லை..

**

பொக்கிஷங்கள்

அன்று ஒரு அந்தி நேரம்,,

மாடியில் உள்ள,,


அறையில்,,


நீண்ட நாட்களாய் திறக்க படாமல் இருந்த,,

மரப்பெட்டியை திறந்த போது,


வைரங்களும் வைடூரியங்களும் ,,


கிடைக்கவில்லை..


**

மாறாக,,

அதை விட,,


அறிய பொக்கிஷங்கள் கிடைத்தன..


**

என் தந்தை,,

நான் பிறவாத காலத்திற்கு,,


முன்னே வந்த,,


ஆனந்த விகடன்,,


மற்றும் பழைய வார இதழ்களில் இருந்து,,


தொகுக்கப்பட்டு,,


பைண்டிங் செய்த ,,


கதைகளை வைத்திருந்தார்..


**

ஆவலோடு பார்த்தேன்,,

பெரும்பாலும்,


மணியன் அவர்களின்,,


பயண கதைகள்,,


தொகுக்க பட்டு இருந்தன,,


அதில் ரஸ்ய பயண கதை,,


எனக்கு பிடித்திருந்தது..


**

அதுபோக,,

அழகிய வண்ண ஓவியங்கள்,


நிறைந்த,,


கல்கியின் சிவகாமியின் சபதம்,,


தொடரும் தொகுக்கப்பட்டு இருந்தது..


**

அவ்வபோது ,,

அதை எடுத்து படித்து ,,


பத்திரபடுத்தி வைத்து கொள்வேன்..


சிவகாமியின் சபதம்,,


நாவலில் வந்த ,,


சித்திரங்களை வரைந்து பார்ப்பேன்,


பெரும்பாலும்,,


கிறுக்கல்கலாகதான் முடியும்,..


**

அதை விட,,

அந்த தொகுக்கப்பட்ட தொடர்களில்,,


அடுத்த பக்கங்களில்,,


ஆங்காங்கே தென்பட்ட,,


அந்த நாட்களில் வந்த,,


சினிமா விளம்பரங்கள்,,


குறிப்பாக வாணி ராணி,,


வசந்த மாளிகை ,,


போன்ற படங்களின் விளம்பரங்கள்,


விமர்சனங்கள்,,


மற்ற விளம்பரங்கள்,,


என்னை வெகுவாக கவர்ந்தன,.


**

நான் புவியில் இல்லாத பொழுது,,

நடந்த நிகழ்வுகளின்,,


சினிமாக்களின் விளம்பரங்கள்,,


எனக்குள் பரவசத்தை கொடுத்தன..


காலப்போக்கில்,,


இந்த அறிய பொக்கிஷங்களை ,,


தவற விட்டுவிட்டேன்...


**

இந்த அறிய பொக்கிஷங்களை,,

கண்டெடுத்து ,,


நான் ரசித்த அந்த நாட்களில்,,


என் வயது,,


மூன்றாவது,,


அல்லது,


நான்காவது படித்து கொண்டிருந்த,,


வயது..


**

தவற விட்ட பொக்கிஷங்களை,,

திடீர் நினைவில்,,


காலம் பல கடந்து,,


இப்பொழுது தேடுகிறேன்..


**

Sunday, 22 July 2012

பயங்கரம்..

அந்தி நேரம் நெருங்க,

சற்று விரைவாக ,,

வாகனம் செலுத்தி கொண்டு இருந்தேன்..

**
முன்னிரவும் வந்துவிட்டது,,

இன்னும் சில மணி நேர ,,

பயணத்தில்,,

வீடு சென்று விடலாம்..

**
இப்போது,,

சற்றே வாகனங்கள் குறைந்திருந்தது,,

இருளான,,

வனம் சூழ்ந்த,,

சாலையில் நுழைந்த போது,,

முற்றிலும் வாகன போக்குவரத்து,,

குறைந்து,,

என் வாகனம் மட்டுமே விரைந்து,,

கொண்டு இருந்தது...

**
என் தூக்கம் விரட்டியபடி,,

என்னை பின்தொடர்ந்த வினாடியில்,,

பாதையின் நடுவே,,

அழகிய சிறுமி,,

ஒரு ஐந்து வயது இருக்கும்,,

அபாய குரலோடு என் வாகனம் மறித்தாள்..

**
சற்றே யோசனையோடு,,

வாகனம் நிறுத்தி இறங்கியபோது,,

அவள் சற்று புன்னகைத்தபடி,,

என்னை நெருங்கினாள்,,,

வினாடி நேரத்தில்,,

எனக்குள் குழப்பங்கள்,,

கேள்விகளோடு,, அவளை நெருங்கியபோது,,

சட்டென்று அவளை காணவில்லை..

**
திடுக்கிடலோடு,,

பயம் கவ்வி கொள்ள,,

சுற்றும் முற்றும் பார்த்தபடி,,

பதட்டத்தோடு,,

வாகனத்தை நெருங்கி,,

கதவு திறக்க முயன்றபோது,,

திறக்கவில்லை...

ஒரு மரண ஓலம்,,

சற்றே புன்னகையோடு ,,

வித்தியாசமாக கேட்டது..

**
நடுங்கியபடி,,

சற்றே அருகில் ,,

சாலையை விட்டு இறங்கி,,

மரத்தின் பின்னால் பதுங்கியபோது,,

ஸ்ஸ்ஸ் என்ற சீறலோடு,,

சர்ப்பம் ஒன்று என்னை வரவேற்றது,,

**
உயிர் பயம்,,

மூச்சையடைக்க ,,

விலகி ஓட எத்தனித்தபோது,,

எண்ணற்ற சர்ப்பங்கள்,,

என்னை நோக்கி சீறியபடி ,,

விரைந்தன,..

**
பயத்தின் உச்சியில்,,

என் கதறல் துவங்கியபோது,,

என் உறக்கம் தடைபட்டு,,

விழித்தேன்..


மறக்கடிக்கப்பட்ட நிகழ்வுகள்

நீண்டதொரு வலி நிரம்பிய,,

தியாகங்கள்,,

நிகழ்வுகள்,,

போராட்டங்கள்,,

இன்னும் எத்தனையோ,,

மறக்கடிக்கபட்டன கால சூழலில்..

**
எல்லா காலங்களிலும்,,

செல்வாக்கு ( நன்றோ அல்லது தீயதோ) ஒன்றே,,

எளியோரின் புகழை மங்க செய்கிறது,,

தற்காலிகமாக..

**
காலம் பல கடந்த பின்,,

மறக்கடிக்கப்பட்டவை,, சில,,

வெளிவருகிறது.

மற்றவை அப்படியே தொடர்கிறது..

**
வரலாறு,,

நிறைய மறக்கடிக்கப்பட்டு,

மிச்சம் மட்டுமே தருகிறது,,

நமக்கு..

**
இருப்பினும்,,

என்னவென்று,,

யாரென்று ,,

தெரியாத போதும்,,

நல்லவைகள்,,

நல்லவர்கள்,,

என்று பொதுவாக நினைத்து,,

மறக்கடிக்கப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு,,

நிகழ்வுகளுக்கு ,,

ஒட்டு மொத்தமாக,,

நன்றி கூறுவோம்,, தினம்...

**
ஏன் என்றால்,,

மறக்கடிக்கப்பட்ட தியாகங்கள்,,

நிகழ்வுகள் எல்லாமே சேர்ந்ததுதான்,,

இன்றைய நம் வாழ்வியலின்,,

வரலாறு.. ..

Saturday, 21 July 2012

***ஓம் நம சிவாய***

சில நூறு மைல்,,

பயணம் செய்து,,


நீண்ட களைப்பு தீர ,,


சற்று ஓய்வெடுத்து,,

மீண்டும்,,,


மலை மீது,,


சற்றே சிரம மகிழ்வோடு,


நடை பயணம் செய்து,,


சந்தோஷ களைப்புடன்,,


மலை மீதிருக்கும்,,


இறைவனை,,


காத்திருந்து தரிசனம்,,


செய்து,,


பெரு மகிழ்ச்சி பெரும்,


மனதை நோக்கி,,


இறைவன் உணர்த்துகிறான்,,


வாழ்வியலை.. அழகாக..


***ஓம் நம சிவாய***

கற்பித்தல்..

கற்பித்தல்..

அன்று குருகுலம்..

**
ஆழ்ந்த ஒழுக்க நெறிகளுடன்,,

குருவிற்கு பணிவிடைகள் செய்து,

வாழ்வியலின்,,

தேவைகளை,,

கடமைகளை,,

சரிவர கற்றுணர்ந்து,,

வீரம்,, செல்வம்,, கல்வி,,

பற்றி தெளிவுற கற்று,

வரலாற்றின் உண்மை பதிவுகளை,

தெளிவுற கற்று,

வீரத்தில்,,

ஒழுக்கத்தில்,,

தேச பற்றில்,

கல்வியில்,,

சிறந்து விளங்கினர்,,

அன்றைய ,,

நம் முன்னோர் மாணவர்கள் ..

**
இன்று?

கல்வி,,

பணம் படைத்த மனிதர்களின் ,,

சொந்தமாகி ,,

சேர்த்து வைத்த பணத்தை கொட்டி ,,

வீரம்,, ஒழுக்கம்,,

வரலாறு,, ஏதுமின்றி ,,

பிழைக்க மட்டும் ஒரு தொழிலை ,,

கற்று வெளியேறுகிறோம்..

பின் எங்கிருந்து,,

சமூக ஒழுக்கம் வரும்.?

சமூக குற்றங்கள் குறையும் ?

கிராமத்து மகளிர்..

அதிகாலை கண்விழித்து,,

வீட்டின் கடமைகளை,

முடித்து,,

அந்த காலை வேளையில்,,

உற்சாகமாக,,

தங்கள் நட்புகளோடு ,

விரைந்து,,

தயாராக இருக்கும்,,

நிலத்தில்,,

அழகிய துள்ளலுடன்,,

அழகிய பாடல்களை பாடியபடி,

நாற்று நாடும்,

நம் கிராமத்து

அன்பான மகளிர்,

இவர்கள்...

**
இவர்களின்,,

சலியாத உழைப்பில்,

சோர்வற்ற உழைப்பில்,,

நாம் பசியாறுகிறோம், தினமும்..  

Friday, 20 July 2012

.....புதிய பயணம் ........

அழகிய வாழ்க்கையை,,

வாழ்ந்து முடித்த,,

களைப்பு,,

முகத்தில் சுருக்கங்களாய் தெரிய,,

புன்னகைக்கும்  உதடுகளும்,,

பல  நூறு  கதைகள்  சொல்லும்,

அழகிய கண்களும்,,

சொல்லும் சேதி என்னவோ,,

தெரியவில்லை..

**
புவியை விட்டு,,

விடை பெற தயாராக,,

புதிய பயணத்திற்கு,,

மலர்ச்சியோடு ,

குழந்தை  உள்ளத்தோடு  ,,

புறப்பட்டு நிற்பது போன்ற,,

உணர்வு ,,

இந்த அழகிய புகைப்படத்தில்..

**
வாழ்வியல்..

அர்த்தம் பொதிந்தது..

நமக்கு ஏனோ அதன் உள்ளர்த்தம்,,

புரிபடுவதில்லை..

**

Thursday, 19 July 2012

அதீத உற்சாகம்,,, பேராபத்து..

தீரா நினைவலைகளின்,

ஆக்ரோஷத்தால்,,

உறக்கம் தடை பட்டு,

மெல்ல விழித்தபோது,,

அழகிய ,,

தனிமை போர்த்திய இரவு,,

சற்றே அமைதியை கொடுத்தது..

**
மெல்ல எழுந்து,,

தனிமை இரவில்,,

நிசப்தம் துணையில்,,

மெல்ல,,

தொலைவில் இருந்த ,,

வனம் நோக்கி ,,

நடந்தேன்..

**
வனத்தின் முன்னே,,

இருந்த,,

அழகிய மலர்சோலையில்,,

நுழைந்தேன்,,

அந்த மலர்களின் நறுமணம்,,

மனதை அள்ளியது..

**
நிலவு வெளிச்சத்தில்,,

அழகிய மலர்கள்,,

மெல்லிய தென்றலுக்கு,,

நடனமாடி கொண்டு இருந்தன..

**
நிசப்தமும்,,

தனிமையும்,,

மெல்லிய குளிரும்,,

இயற்க்கை வனப்பும்,,

மனதை அமைதி படுத்தி,,

சாந்த படுத்தியதில்..

மெல்ல உற்சாகம் கொண்டேன்..

**
மெல்லிய உற்சாகம்,,

அழகிய உற்சாகமாக மாறி,,

வேகம் பெற்றபோது,,

தன்னிலை மறந்தேன்,,

எத்தனை நேரம்,,

தெரியவில்லை..

**
என் உடல் புவியில்,,

மனம் வானில் பறந்த,,

அற்புத இரவில் ,,

வெகு நேரம் உற்சாகம் கொண்டபோது,,

சட்டென்று ஒரு சீறல் சப்தம்,

கேட்டு,, திடுக்கிட்டு,,

மனமும் ,, உடலும்,,

ஒன்றிணைந்த வினாடியில்,,

என் முன்னே ,,

மிக அருகாமையில் தெரிந்த,,

கரு நிற சர்ப்பம் கண்டு,,

உறைந்தேன்..

**
இயற்கைக்கு வலிக்காமல்,,

மெல்ல,,

அங்கிருந்து அகன்றேன்,,

சற்றே படபடப்புடன்..

**
சூழல்.. அதீத உற்சாகம்,,, பேராபத்து..

**

**** தீரா நினைவலைகள்****

**** தீரா நினைவலைகள்****


மழை விட்ட,,

ஒரு மதிய நேரத்தில்,,

புத்தகம் சுமந்தபடி,,

வீட்டிற்கு திரும்ப,,

பேருந்து நிலையம் நோக்கி,,

மெல்லிய மிச்சம் இருந்த,,

மழை துளிகளால்,,

நண்பர்களோடு,,

அழகாக நனைந்து நடந்த படி,,

பேருந்து நிறுத்தம் வந்தோம்..

**
அன்று ஏனோ,,

பேருந்து வெகு நேரம்,,

வர வில்லை..

அன்று வார இறுதி நாள் ..

**
முடிவெடுத்தோம்,..

ஒரு மணி நேர ,,

பேருந்து பயணத்தை,,

புறக்கணித்து,,

நடப்பதென்று..

அது சமவெளி பகுதி அல்ல,,

மலைவாசஸ்தலங்களில் ஒன்று..

**
அது எங்களுக்கு,,

பள்ளி இறுதி பருவத்தை ,

எட்டி இருந்த காலம்,..

மெலிதாக முளைத்த மீசையை,,

பெருமையாக நினைத்தபடி,,

பெரிய மனிதர்கள் என்ற,,

கர்வத்தோடு,

குழந்தை பருவம் எங்களை விட்டு ,,

விலகி சென்று கொண்டிருந்த காலம்.

**
நடக்க ஆரம்பித்தோம்..

அழகிய நட்பில்,

நான்கைந்து பேர்..

**
வழியெங்கும்,,

அழகிய மலைகளும்,

ஈரம் நிரம்பிய,,

தார்சாலைகளும்,

ஓங்கி உயர்ந்த ,,

யுகலிப்டஸ் மரங்களும்,

பச்சை போர்த்திய தேயிலை தோட்டங்களும் ..

எங்களை உவகை கொள்ள செய்து,

எங்களுக்குள் களைப்பு தெரியாது,,

பார்த்து கொண்டன..

(அன்றைய இயற்கைக்கு இப்போது நன்றி கூறுகிறேன்.)

**
மூன்று அல்லது நான்கு மணி நேர பயணத்தில்,,

எங்கள் வீடு இருந்த நகருக்கு

ஆனந்தம் பெருக,,

வந்து சேர்ந்தோம்..

**
வீடு வரும் வரையில்,,

ஆட்டம் ,,

அரட்டை,,

வெள்ளந்தி பேச்சு,,

சிதறல் மழை துளிகள்,,

என இயற்கையின் அரவணைப்பில்,

கொண்டாட்டமாக இருந்தது..

**
இன்று அந்த நினைவலைகள்,,

மீண்டும் சிதறல் துளிகளாக,,

விழியோரம் கசிகிறது..

**
அந்த அழகிய நண்பர்களில் சிலரோடு,

அலைபேசி தொடர்பு மட்டுமே,,

இப்பொழுது,,

இளமை விடை பெரும் சமயத்தில்.. ,


****

((என் பள்ளி இறுதி பருவத்து நினைவலைகள்..))

Wednesday, 18 July 2012

தனித்திருப்பது..

தனித்திருப்பது..

எனக்கு பிடிக்கும்..

**
நிசப்தமான பின்னிரவுகளில்,,

விஸ்தாரமான,,

பச்சை புல்வெளிகளில்..

முழு நிலவின் வெளிச்சத்தில்,,

மிளிரும் ,,

அழகிய வனம் சூழ்ந்த,,

அந்த பள்ளத்தாக்கில்,,

இறைவனை,

தரிசிக்க அல்லது,,

இறைவனுடன் பேச,,

ஆசை எனக்கு..

**
அந்த,, அழகிய,,

வனம் சூழ்ந்த,,

பள்ளத்தாக்கை தேடுகிறேன்.. தினம் ..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

ஆயிற்று,, நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு மேல்..

ஒரு தலைமுறையினர் ,,

செய்த தவறுக்கு,,

இன்று வரை தவிக்கிறோம்..

**
குற்ற உணர்ச்சி அழுத்துகிறது..

நாங்கள் நிம்மதியாக இல்லை ,,

மேலிருந்து அமைதியாக பார்த்து கொண்டு இருக்கிறீரே,,

மீண்டும்,,

பிறந்து வரமாட்டீர்களா,, ?

என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்,,

ஒவ்வொரு தமிழனும்..

**
உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும்,,

சாதாரண பாமரர்கள் நாங்கள்..

எங்கள் முன்னோர் செய்தது தவறுதான்,,

வெற்று அலங்கார பேச்சுக்கும்,,

சினிமா கவர்ச்சிக்கும் மயங்கி,,

உங்களை தோற்கடித்தது தவறுதான்..

**
இன்று அவர்கள் சார்பில்,,

நாங்க மன்னிப்பு கோருகிறோம் உங்களிடம்..

இன்று உங்கள் பிறந்த நாள்..

**
எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா...

நாங்கள்...

என்றும் உங்களை மறவா,,

எளிய தமிழர்கள் ...

அதிகாலை நகரம்..

இருள் பிரியா,,

அதிகாலை,,

வழக்கத்தை விட,,

குளிர்ந்திருந்தது..

**
மெல்லிய பனி ,,

போர்த்தி இருந்த,,

நகரம்,,

வெகு நாட்களுக்கு பின்,,

நரகம் என்ற சாபத்தில்,,

இருந்து விடுபட்டது..

**
நேற்றைய மழையின்,,

மிச்சம்.,

நகரை மினுமினுப்பாக ,,

மாற்றி இருந்தது..

மகிழ்ந்தேன்..

**
காலை பத்திரிக்கை பணியாளர்கள்,,

குளிரிலும்,,

பரபரப்பாக ,,

பத்திரிக்கைகளை,,

சரி பார்த்து கட்டி கொண்டு இருந்தனர்..

**
காலை நேர காய்கறி சந்தை,,

மிகுந்த பரபரப்போடு இருந்தது,.

தினசரி நான் கண்டுகொள்ளாத ,,

இந்த காட்சிகள்,,

இன்று ஏனோ மனதை கவர்ந்தது..

**
நிதானித்து ரசித்து,,

பின்,,

சற்றே நகரை விட்டு,,

ஒதுக்கு புறத்தில் வண்டியை நிறுத்தினேன்..

**
தூர தெரிந்த,,

பச்சை புல்வெளியை ரசித்தபடி,,

பின்னணியில்,,

பனி போர்த்திய,,

அழகிய மலையின் வனப்பை ,

கண்டு உள்ளம் குளிர்ந்தபடி,,

சூடான தேநீர்,,

பருகினேன்..

**
இயற்கை வழக்கம்போல,,
'
என்னை அழைக்க,,

நிதானித்து,,

சற்றே திரும்பி பார்த்தேன்..

**
பனி போர்த்திய ,,

குளிரான நகரம்,

வெகு நாட்களுக்கு பின்,,

என்னை ஈர்க்க,,

இன்று,

இயற்கைக்கு விடுமுறை விட்டு,,

மீண்டும்,,

நகரக்குள் கலந்தேன்,,

அழகிய மனதோடு..

இயற்கையின் மத்தியில்

மனம் மகிழ்ந்து,,

இயற்கையின் மத்தியில்,,


அதிகாலை பரவசத்தில்,,


மனிதன் இயற்கையை கிழித்து,,

அமைத்த ,,

சாலை கோட்டில் நின்றபடி,,

எனக்குள்ளே,,

துயில் கொண்டு இருக்கும்,,

ஆன்மாவை ,,

இறைவனோடு,,

இயற்கையோடு கலக்க,,

எழுப்பி கொண்டு இருக்கிறேன்.

குழப்ப கணிதம்

இனம் புரியா பயம்,,

கலக்கம்,,

மெல்ல,,

மனதில்..

ஏதோ ஒரு புள்ளியை ,,

போல உணர்கிறேன்..

**
இந்த பிரமாண்ட பூமியில்.,

ஏதோ நடக்கிறது,,

அல்லது,,

எதுவோ என்னை ஆட்கொள்கிறது,,

**
அவ்வப்போது,

என் நிலையில் இருந்து,,

சற்று தள்ளி..

ஆழ்மனத்தின் அடி ஆழத்தில் இருந்து,

என்ன ஓட்டங்கள்,,

விஸ்வரூபம் எடுக்கின்றன,.

**
குழப்ப கணிதம் போல,,

நான் யார்,,

அல்லது,,

நாம் யார் என்பது போன்ற,,

சிந்தனைகள், எனக்குள்,

படர்கின்றன.

**
இன்னும் சற்று நேரம் ஆகும்,

இந்த புவியில்,

சாதாரண மனிதனாக இறங்கி வர..

கடும் பாசி போல...

படர்ந்திருந்த ,,

மெல்லிய பனியை,


விலக்கி,


அழகிய பச்சை புல்வெளி மீது,,

வெற்றுடலோடு,,


அதிகாலை குளிரில்,,


படுத்து கிடந்தேன்,..


**

சில்லிட்ட உடலோடு,

ஒரு வாக்குவாதம்,,


இறைவனிடம்..


**

ஏனோ,,

நான் கூறியது,,


அவருக்கு,,


புரிபடவில்லை..


அவர் உரைத்ததும்,,


எனக்கு புரிபடவில்லை..


**

இறுதியாக ,,

இறைவன் கூறினார்,,


'கடும் பாசி போல,,


சிலந்தி வலை போல,,


உன் மனமெங்கும்,,


ஏதோ படர்ந்திருக்கிறது,,


விலக்கி விட்டு வந்து,,


வாதம் புரி ..


ஆனால்,


ஒரே நாளில்,,


விலக்க இயலாது,,


அத்தனை சூழல்கள்,,


மனதுக்குள்,,


பாசியாய் படர்ந்திருக்கின்றன'..


என்றார்..


**

சுத்தம் செய்ய,,

புறப்பட்டேன்..


தீர்மானமின்றி.

Thursday, 12 July 2012

உருத்தெரியாமல்

உருத்தெரியாமல்,,

நான் அழிந்த பிறகு..

சாம்பலான உடலை..

பார்த்தவாறே,,

பெரும் ஆலமரத்தின் மீது,,

அமர்ந்திருந்தேன்,, துக்கத்தோடு.

அடுத்து எங்கோ.

தெரியவில்லை..

அழைப்பிற்காக காத்திருக்கிறேன்.

அன்புள்ள

அன்புள்ள ,,

என்று ஆரம்பித்தேன்,.

அடுத்து நட்பே என்றுதான் எழுத தோன்றியது,,

அதன் பிறகு,,

இந்த கடிதம் நட்பிற்கு மட்டுமே,,

என முடிவு செய்தேன்,,

**
ஏளனங்களுக்கும்,,

ஏயப்புகளுக்கும்,,

வெற்று புகழ்ச்சிகளுக்கும்,,

துரோகங்களுக்கும்,,

நடுவே,,

அழகிய உள்ளத்தோடு,,

அழகிய பண்போடு,

அழகிய ஆதரவோடு ,,

அழகிய உதவியோடு,,

அழகிய உற்சாகம் கொடுத்து,,

அழகிய வாழ்கையை,,

மென்மேலும் அழகாக்க

உதவி செய்த,

செய்து கொண்டு இருக்கிற,,

அழகிய நட்புகளே ,,

வாழ்க வளமுடன் என்றென்றும்..

**
இப்படிக்கு,,

நட்புடன்,,

நான்.. உங்கள் நண்பன்..

விடியலை தேடி

வழக்கம்போல,,

ஆழ்ந்த உறக்கத்தில்,,


பின்னிரவு துவங்கும் நேரம்,,


என் மனது,

தன் வேலையே காண்பிக்க ஆரம்பித்தது..

**
தன் உள்ளிருந்த,

என்ன அலைகளை,,

அந்த கரிய இருளின் ,,

நிசப்தத்தில் வெளியே தள்ளியது..

**
வெளியேறிய எண்ண அலைகள்,

ஆவேசமிட்டு,,

ஓலமிட்டதில்,,

உறக்கம் தடை பட்டது...

விழித்தேன் அந்த நடு ஜாமத்தில்..

வியர்த்தது..

**
அமைதி கொண்டு உறங்கும்போதேல்லாம்,,

உள்ளிருக்கும் வேதனைகளை,,

வெளியே தள்ளுவதே,,

தன் வேலையாக கொண்டிருக்கிறது மனம்,,

**
மெல்ல வெளியேறினேன்..

நடந்தேன்,,

வெகு தூரம்..

தனிமையும்,,

கரிய இருளும் மட்டுமே துணை..

**
வெகு தூரம் நடந்தேன்,,

வேறு வழியின்றி,

உடலின் சோர்விற்கு,,

கட்டுப்பட்ட மனம்,,

மெல்ல என்னை உறக்கத்தில் ஆழ்த்தியது..

அங்கேயே உறங்கினேன்,,,

**
மெல்ல வெப்பம் பரவியபோது,,

உணர்ந்தேன்,, விழித்தேன்,,

அழகிய வண்ணங்களோடு கூடிய,,

இயற்கைக்கு மத்தியில்,,

படுத்து கிடந்தேன்..

**
பரவசம் கொண்டு எழுந்தேன் ,,

இரவின் மனதின் தாக்குதலுக்கு ,,

கடவுள் அளித்த,,

காலை பரிசு,,

இந்த அழகிய இயற்கை,

என்று எண்ண தோன்றியது..

**
அமைதி கொண்டு,,

விடியலை தேடி பயணம் தொடர்ந்தேன் மீண்டும்..

ஜீவனோடு கலந்து....காதல்.

மெல்லிய இலையை,,

பன்னீர் கொண்டு,,


நனைத்து,


அழகிய வண்ண மலர்கள் சூழ,

தெளிந்த சிற்றோடையில்,,

அழகிய தீபம் ஒன்றை ,,

பன்னீர் நனைத்த இலையில் ,,

ஏற்றி,,

தூது விடுகிறேன்,,,

**
மறு கரையில்,,

காத்திருப்பாள் உடலற்று,,

உள்ளத்தோடு,,

உயிர்ப்போடு,,

உணர்வோடு...

**
இந்த காதல் தூது,,

புதிதாக விண்ணுலகில் உயிர்த்து கொண்டு,,

இருக்கும் என்னவளுக்காக,, மீண்டும்..

**
இப்புவியில் உடலோடு ,,

உணர்வோடு இருந்தபொழுது,,

முதல் தூது விட்டேன்,,

சம்மதம் கூறி,,

என் கரம் பற்றி,,

என் அந்திம காலம் வரை,,

அழகாக வந்தாள்.

**
இப்போது உடலை மட்டும்,,

இப்புவிக்கு சாம்பலாக கொடுத்துவிட்டு,,

விண்ணுலகம் சென்று விட்டாள்.

**
நானும் விரைவில் வந்துவிடுவேன் அங்கு,,

அப்போதும் அவள் துணை வேண்டும்,,

அதற்கான மறு தூது இது..

**
காதல்.. அழகிய காதல்.. ஜீவனோடு கலந்து
**

Saturday, 7 July 2012

அழகிய கனவில்

அழகிய தமிழ் உரையாடலோடு,,

அழகிய சிரிப்பை உதிர்த்தபடி,,

கையில்,,

அழகிய தூக்கு சட்டியை தூக்கியபடி,,

வெற்று காலில்,,

வயல்வெளிகளின் நடுவே,

வரப்பில்,,

அழகாக நடந்து ,,

விவசாய வேலைகள் செய்ய,,

நடந்து சென்ற,,

அழகிய தமிழ் பெண்களின்,,

சப்தம் கேட்டு விழித்தேன்,,

விடிந்தும்,, இருள் பிரியாத,

அதிகாலையில்..

அழகிய கனவில்..

காதல் கவிதைகள்

எனக்குள்,,

புதைந்த எண்ணங்கள்,,

வலிகளை மட்டுமே,.,

வெள்ளை தாளில் வடிக்கிறேன்,..

அவை யாவுமே உண்மை..

**
நான் அனுபவித்த ரணங்கள்..

வாழ்வியல் சூழல்களே..

என் எழுத்துக்கள் ..

ஆனாலும் ஒன்று மட்டும் விதிவிலக்கு..

**
நான் அறிந்திராத,,

புரிந்திராத ஒன்றை,,

அவ்வப்போது எழுதுகிறேன் ,,

அது,,

அழகிய காதல் என்று முடியும் ,,

காதல் கவிதைகள்..

தந்தை..

தாயை பாராட்டும் எல்லாரும்,

ஏனோ தந்தையை ,,

பாராட்ட மறந்து விடுகிறார்கள்..

**
தன் உழைப்பை ,,

தன் பிள்ளைகளுக்காக மட்டுமே,,

செலுத்துபவர்..

**
அழகிய எண்ணங்களை..

ரசனைகளை..

நல்வழிகளை..

காட்டும் தந்தையை மறந்து,

தாயை பற்றி மட்டுமே,,

கவிதை எழுதுவது சரியா ?

**
தந்தை..

வாழும் தெய்வம்..

அவருக்கென்று ஒன்றும் இல்லை ஆசைகள்.

பிள்ளைகளை மகிழ்வுற செய்வதே,,

அவரின் பேராசை..

**
தாயை புகழும் அதே நேரம்,,

தந்தையை புகழ்ந்தும்,,

கவிதைகள் படைக்கலாமே.