என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 19 July 2012

**** தீரா நினைவலைகள்****

**** தீரா நினைவலைகள்****


மழை விட்ட,,

ஒரு மதிய நேரத்தில்,,

புத்தகம் சுமந்தபடி,,

வீட்டிற்கு திரும்ப,,

பேருந்து நிலையம் நோக்கி,,

மெல்லிய மிச்சம் இருந்த,,

மழை துளிகளால்,,

நண்பர்களோடு,,

அழகாக நனைந்து நடந்த படி,,

பேருந்து நிறுத்தம் வந்தோம்..

**
அன்று ஏனோ,,

பேருந்து வெகு நேரம்,,

வர வில்லை..

அன்று வார இறுதி நாள் ..

**
முடிவெடுத்தோம்,..

ஒரு மணி நேர ,,

பேருந்து பயணத்தை,,

புறக்கணித்து,,

நடப்பதென்று..

அது சமவெளி பகுதி அல்ல,,

மலைவாசஸ்தலங்களில் ஒன்று..

**
அது எங்களுக்கு,,

பள்ளி இறுதி பருவத்தை ,

எட்டி இருந்த காலம்,..

மெலிதாக முளைத்த மீசையை,,

பெருமையாக நினைத்தபடி,,

பெரிய மனிதர்கள் என்ற,,

கர்வத்தோடு,

குழந்தை பருவம் எங்களை விட்டு ,,

விலகி சென்று கொண்டிருந்த காலம்.

**
நடக்க ஆரம்பித்தோம்..

அழகிய நட்பில்,

நான்கைந்து பேர்..

**
வழியெங்கும்,,

அழகிய மலைகளும்,

ஈரம் நிரம்பிய,,

தார்சாலைகளும்,

ஓங்கி உயர்ந்த ,,

யுகலிப்டஸ் மரங்களும்,

பச்சை போர்த்திய தேயிலை தோட்டங்களும் ..

எங்களை உவகை கொள்ள செய்து,

எங்களுக்குள் களைப்பு தெரியாது,,

பார்த்து கொண்டன..

(அன்றைய இயற்கைக்கு இப்போது நன்றி கூறுகிறேன்.)

**
மூன்று அல்லது நான்கு மணி நேர பயணத்தில்,,

எங்கள் வீடு இருந்த நகருக்கு

ஆனந்தம் பெருக,,

வந்து சேர்ந்தோம்..

**
வீடு வரும் வரையில்,,

ஆட்டம் ,,

அரட்டை,,

வெள்ளந்தி பேச்சு,,

சிதறல் மழை துளிகள்,,

என இயற்கையின் அரவணைப்பில்,

கொண்டாட்டமாக இருந்தது..

**
இன்று அந்த நினைவலைகள்,,

மீண்டும் சிதறல் துளிகளாக,,

விழியோரம் கசிகிறது..

**
அந்த அழகிய நண்பர்களில் சிலரோடு,

அலைபேசி தொடர்பு மட்டுமே,,

இப்பொழுது,,

இளமை விடை பெரும் சமயத்தில்.. ,


****

((என் பள்ளி இறுதி பருவத்து நினைவலைகள்..))

No comments: