Google+ Badge

என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday, 29 June 2012

ஆனந்த நாட்டியம்

***கால சக்கரத்தில் சில மணித்துளிகள்***

பௌர்ணமி நேரம்,,

அழகிய நிலவு ஒளியில்,,

சலசலத்து மினுமினு வென்று,,

ஓடும் நதியோரம்,

அழகிய கோவில் மண்டபம்..

**
பௌர்ணமி நேர முன்னிரவில்,,

எல்லாம் சேர்ந்து,,

அழகிய ரம்மியமாக காட்சி தந்தது..

அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்த,,

அந்த மண்டபம் நடுவே,,

அழகிய விரிப்பில்,

மனிதர்கள் சிலர் இருக்க,,

பேரழகு கொண்ட பெண்ணொருத்தி,,

அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து,,

வெகு அழகாக அபிநயம்,,

செய்தபடி,,

அற்புத இசைக்கு,,

ஆனந்த நாட்டியம் ஆடி கொண்டிருந்தாள்..

**
தமிழ் மின்னியது அங்கே,,

இசை வடிவில்,,

நாட்டிய வடிவில்..

**
சிலிர்த்து போய்,,,

மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தேன்,,

அந்த அழகிய சோழர் காலத்தில் ,,

காவிரி கரை ஓரம் ,,

ஓர் நாள்,,

மிக சரியாக,,

ஆயிரம் வருடங்களுக்கு முன்...

அடர்ந்த கானகம்

***கால சக்கரத்தில் சில மணித்துளிகள்***

அடர்ந்த கானகம்,,

இருள் அப்பியிருந்த போதும்,,

இடையிடையே வெளிச்சம் பாய்ச்சின,,

கதிரவனின் ரேகைகள்..

**
அடர்ந்த புதரில்,,

வெகு எச்சரிக்கையாக,,

லாவகமாக அடி எடுத்து வைத்தும்,,

சட்டென்று சீரிய.

பெரும் சர்ப்பம் கண்டு,,

திடுக்கிட்டேன்,,

**
பின் சுதாரித்து,,

வெகு ஜாக்கிரதையாக,,

அதை லாவகமாக பிடித்து,,

தூர எறிந்தேன்,,

யாருமில்லை என்னுடன்,,

தனிமையை தவிர,,,

**
அந்தி சாய்வதற்குள்,,

இந்த வனத்தை விட்டு கிளம்பி விட வேண்டுமென்ற ,,

முனைப்பில்,,

தேடலை தொடர்ந்தேன்,,

**
ஆங்காங்கே விதவிதமான,,

சப்தங்கள் மட்டும் வந்து கொண்டு இருந்தது,...

ஏனோ,,

சரியாக திசை கணிக்க முடியவில்லை..

சற்று நிதானித்து,,

சலசலத்து ஓடிய ,,

நதிக்கரையில் ஓய்வெடுத்து,,

தேடலை தொடர்ந்தேன்,..

**
இந்த தேடல் வெகு விரைவில்,,

நினைத்தது போல ,,

முடிவுற்றால்தான்,,

நாளை எங்கள் ஊரில்,,

நடக்கும் விழாவிற்கு,,

அசைவ விருந்து தயார் செய்ய முடியும்.

**
வனத்தின்,,

பல்வேறு பகுதிகளில்,,

ஆளுக்கொரு திசையில் பிரிந்து,,

தேடி கொண்டிருக்கிறோம்,...

**
தேடல் தொடர்ந்த வினாடியில்,

அகப்பட்டது,,

நான் தேடிய விலங்கு..

மகிழ்வோடு,,

என் கூர் தீட்டிய,,

ஈட்டியை குறி பார்த்து,,

ஏறிய தயாரானேன்..

**
இது சரியாக,,

500 வருடங்களுக்கு முன்,,

குலதெய்வ திருவிழாவிற்காக,,

இந்த வேட்டையில் நான் (நாம் ) .,,

பங்கேற்றபோது...

புதிராய் நான்

நித்திரை பொழுதில்,,

விசித்திரம் பேசுகிறது,,

ஆன்மா,..

நீ நீ,, என்று ஏதோ,,

சொல்கிறது..

**
நான் யார்,,

இந்த உருவம் கொண்ட நான் யார்?

எங்கிருந்தோ வந்திருக்கிறேன்,,

அது நிச்சயம் தெரிகிறது,,

எங்கோ செல்வேன்,,

அதுவும் தெரிகிறது,,

**
ஆனால், எங்கே?,

நான் போகும் வேறிடம்,,

எவ்வாறு இருக்கும்?

**
புதிராய்,,

கேள்விகளுடன்,,

தனிமையில் நான்..

நான் இறந்திருந்தேன்,

ஊழி காற்றில்,,

வேரோடு விழுந்த,,

பெரும் மரத்தின்,,

பெரும் கிளைகளின் அடியே,

சிக்கிக்கொண்டு,,

குருதி வழிந்த நிலையில்,,

ஒற்றை கையால்,,

கிளையை வெட்டி,,

வெளியே வரும் முயற்சியில்,,

மூர்ச்சையடைந்தேன்,,

வெகு நேரம்..

**
வெகு நேரம்,,

நினைவில்லை..

மெல்ல கண் திறந்து பார்த்த போது,,

எனக்கு கீழே ,,

அந்த பெரிய மரம்,,

வீழ்ந்திருந்தது..

**
மெல்ல புரிந்தது,,,

நான் இறந்திருந்தேன்,, என்று,.

யதார்த்தமானவன்

அன்று நான் யதார்த்தமானவன்,

சற்றே குழந்தை போலதான்..

வளர்ந்த பின்னும்,

சூதும் வாதும் தெரியவில்லை..

**
கை கொட்டி பரிகசித்த,,

சமூகம் முன்,,

பரிதவித்து நின்றேன்..

**
ரணங்களை தின்ற மனதோடு,,

இளமை என்னும் வசந்த காலத்தை,,

அதற்குரிய வசந்தம் இல்லாமல்,,

கழித்த போதும்,

விடவில்லை இந்த சமூகம்,,

பரிகசிக்க...

**
அது என்னவோ,,

சூதும் வாதும் தெரிந்தால்தான்,,

பிழைக்க முடியுமாம்,

சமூகத்தின் அசைக்க முடியாத,,

நம்பிக்கை...

**
நேர்மையும்,, தூய்மையும்

பிழைக்க உதவாதாம்..

ஆனால்,,

அரசியலை மட்டும்,,

அலசுவார்களாம் தூய்மை பற்றி..

எங்கே போய் சொல்ல,,

இந்த கொடுமையை..?

**
அட்டகாசமான முகமூடி,,

அணிந்து,,

அழகாக காய்களை நகர்த்தி,,

வாழ்கையில் உச்சத்தை (அதாவது வசதிகளை)

அடைந்து விட்டு,,

ஏளன பார்வை ஒன்றை,,

அப்பாவிகள் மீது,

வீசுகிறது,

அதிபுத்திசாலி சமூகம்..

**
இங்கே பாவம் பாமரன் ..

நானும் கூட,,

ஏன் ,,

நாமும் கூட..

வெறுமை சூழ்ந்து,

சட்டென்று வெறுமை சூழ்ந்து,,

ஒரு வினாடி நேரத்தில்,,


திடுக்கிடலோடு விழித்தேன்..


**
ஏனோ கலைந்தது உறக்கம்,,

நேரம் பார்த்தேன்,,


முன்னிரவு முடிந்து,,


பின்னிரவு துளிர்க்கும் நேரம்..


**

தனிமை இரவு,,

என்னவென்று தெரியாமல்,,


நிலை கொள்ளாமல் தவிக்கும்,,


மனம்..


**

நிறைய தண்ணீர் குடித்தேன்,,

கடவுளின் படத்தை,


தலையணை அருகே வைத்தேன்,


ஆனாலும்,,


உறக்கம் வரவில்லை,,


**

குழப்படைந்த உள்ளம்..

இயற்கையை காணும்,,


குழந்தை மனதை போல,,


அலைபாய்கிறது..


**

சற்றே சிந்தனைக்கு பின்,,

வெளியே வந்தேன்..


அழகிய நிசப்தம் கொண்ட ,,


பின்னிரவு ஈர்த்தது..


**

முழு நிலவும்,,

கண்சிமிட்டும் விண்மீன்களும்,,


ஏதோ ஒரு வேலையில்,,


அமைதியாக ஈடுபட்டு கொண்டு,,


இருந்தன..


**

சிறிது நேரம் ,,

வானம் பார்த்தேன்,,


மெல்ல,,


அமைதி கொண்டது உள்ளம்..


உறங்க செல்கிறேன் மீண்டும்..
.

**** எழுபதுகளில் ஒரு நாள் ****

**** காலச்சக்கரத்தில் சில மணித்துளிகள் ****

சிலிர்த்தேன்,,

இடறி விழுந்தேன்,,

ஈரமான அழகிய குளக்கரையில்,,

ஈரமான அழகிய,,

ஒரு தாவணி பெண்ணை கண்டு..

**
சிறு புன்னகையை ,,

பரிசாக உதிர்த்தபடி,,

நகர்ந்தாள் வெகு வேகமாக..

**
சற்றே அசடு வழிய ,,

எழுந்தேன்,,

மறைந்து விட்டிருந்தாள்..

**
மனதை அவளிடம் விட்டுவிட்டு,,

உடலுக்கு குளிப்பாட்டி,,

வேகமாக கோவிலுக்கு வந்தேன்,,

**
அழகிய தீபம் ஒன்றை ஏற்றி,,

அழகாக வழிபட்டு,,

கோவில் பிரகாரம் சுற்றி,,

வந்து,

கோவில் மணியை அழகாக,,

ஒலிக்கவிட்டு,,

சிறு பூக்கூடையுடன்,,

தோழிகளோடு அமர்ந்தாள்..

**
சற்றே மறைவாக,,

நான் கவனித்ததை அறிந்து,,

வெட்கம் கலந்து,,

கால் பெருவிரலால்,,

பூமியில் கோலமிட்டு,,

சட்டென்று நகர்ந்தாள்..

**
இம்முறை,,

எனக்கு,,

என் கண்களை,,

வினாடி நேரத்தில் சந்தித்த,,

அவளின் படபடத்த,,

விழிகளை பரிசாக தந்தாள்..

**
மீண்டும்,,

மறு நாள் காலையை,,

எதிர்பார்த்தபடி,,

அங்கிருந்து நகர்ந்தேன்,,

எழுபதுகளில் ஒரு நாள்..

Wednesday, 27 June 2012

மனதின் சிதறல்கள் துளிகளாக..

 ***மனதின் சிதறல்கள் துளிகளாக.. ***
***
ஏதோ சலனத்திற்கு ஆட்பட்டு,,

குற்ற உணர்வில்,,

தவிக்கிறது மனம்,..

மனம் என்னும் மாயை ,,

செய்யும் லீலைகள்,,

சித்திரவதைகள்..

வெகு துயரம் கலந்த அழகு..

**

தேர்ந்த,

சிறந்த கவிதை எழுத,,

நான் கவிஞன் இல்லை..

என் மனதில் தொடரும்,,

ஆவேச அலைகளின் ,,

வடிகால்,,

மட்டுமே என் பதிவுகள்..


***

இனம் ,, மொழி கண்டு,

நட்பு தேடும்,,

அரசியல்வாதிகள் போல் அல்லாமல்,,

மனம் கண்டு,,

நட்பை தேடுவோம்,,

சுவாசிப்போம்,..
 
***
ரயில் பயணம் போல,,

விரைகிறது காலம்,,

ஓடி மறைகிறது,,

சூழலும்,,

நட்புகளும்,,

உறவுகளும்..
***
இதயத்தில் இருந்து,,

வெடித்து கிளம்பிய

வேதனை,,

மெளனமாக வெளிப்பட்டது..

கண்ணீர் மட்டுமே சிறு துளியாய்,,

வேதனையின் சாட்சியாய்..

வலி கொண்ட இதயம்,,

சற்றே நிதானித்து,,

நிலை கொண்டு.....

சற்றே பக்குவம் பெற்ற ,,

மனிதனாக,,

எல்லை தாண்டிய நிலையில்.
 
***
ஏதோ ஒன்று புரிகிறது,,

என்னை சுற்றி,, ( அல்லது நம்மை சுற்றி )

பெரும் மாயை இருக்கிறது..

இது ஒரு கனவு போல இருக்கிறது,,

ஆம் ,, நான் இங்கு இல்லை..

நான் எங்கோ இருக்கிறேன்,,

இது என் நீண்ட கனவாக இருக்கலாம்..

புரிந்தும்,,

புரியாமலும்,,

எங்கோ,

ஏதோ, என்னை ,,

வழி நடத்தி செல்கிறது..

 
 
 
 

சிறைபட்ட பொழுதுகள்,

சிறைபட்ட பொழுதுகள்,,

அற்புதமானவை,

ஆம்,,

உன் மனசிறையில்,,

நான் அகப்பட்ட பொழுதுகள்..

நட்பை தேடுவோம்

 
இனம் ,, மொழி கண்டு,

நட்பு தேடும்,,

அரசியல்வாதிகள் போல் அல்லாமல்,,

மனம் கண்டு,,

நட்பை தேடுவோம்,,

சுவாசிப்போம்,..

மன்னிப்பாயா ? • மன்னிப்பு கேட்க தூண்டுகிறது,,

  மனது,,

  மானசீகமாக என் மனதில் இருந்து,,

  மெல்லிய அதிர்வுகளாக,,

  மன்னிப்பை கோருகிறேன்..

  மன்னிப்பாயா ?

  ( நிஜம்.. தங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் )

வடகிழக்கு மக்கள்..

நேற்றைய ஒரு தொலைக்காட்சியில்,,

அழகிய மலைகிராமம் ஒன்றை கண்டேன்..

அழகிய இயற்கை சூழ,,

அழகாக மின்னிய அந்த கிராமம்,,

ஒரு வித ஈர்ப்பை கொடுத்தது,,

**
அந்த மக்களின்,,

வித்தியாசமான, சொற்களும்,,

மொழிகளும் அழகிய இசை போல,,

அத்தனை அழகு..

மொழி புரியாவிடினும்,,

அவர்களின் பேச்சு பிடித்திருந்தது..

**
அவர்கள் மிக அற்புதமானவர்கள் போலும்,,

ஆம்,,

தம்,, கலாசாரம் மறவாது,,

கடும் உழைப்பில் ஈடுபடும்,,

மக்கள் அவர்கள்..

நிரம்ப பிடித்திருந்தது அவர்களை..

**
அவ்வப்போது தொலைக்காட்சிகளில்,

அவர்களை காண்கிறேன்..

நியாயப்படி அவர்களுக்கும்,,

நமக்கும் இடைவெளி நிகழாதபடி,,

அரசியல்வாதிகள் பார்த்திருக்கவேண்டும்..

நமக்கு அந்த கொடுப்பினை இல்லை..

**
இருப்பினும்,,

மனதிற்குள் குறித்து வைத்து கொண்டேன்,,

என்றாவது ஒரு நாள்,,

நீண்ட பயணம் செய்து ,,

அந்த மலை கிராம மக்களோடு,,

சில காலம் கலந்திருக்க வேண்டும்...

**
அவர்கள்..

இந்தியாவின் வடகிழக்கு,,

மாநில மக்கள்..


கனவுகளுக்கு நன்றி

முதல் முறை..

எனக்குள்,,

சிதைந்திருந்த,,

எண்ணங்கள்,,

கனவுகளின்,,

நிகழ்வுகளாக மாறி,,

பரவசம் கொடுத்தது,,

வெகு வருடங்களுக்கு பின்,

***
பொதுவாக ,,

என் கனவுலகம்,,

ஆவேச தாக்குதல் நடக்கும்,

போர்க்களமாகதான் இருக்கும்,,

***
நேற்றிரவு மட்டும்தான்,,

எனக்குள் மிக ஆழமாக,,

புதைந்திருந்த,,

அழகிய சிதைவுகள்,,

அழகிய கனவுலகத்தை,

தந்தது..

**
கனவுகளுக்கு நன்றி..

என் ஆழ்மனதை பிரதிபலித்ததால்..

கடும் கோபம்,, கடவுளின் மீது

கடும் கோபம் கொண்டேன்,,

கடவுளின் மீது,,

நிறையவே சோதித்து விட்டான்,,

ரணங்கள்,,

வலிகள் உக்கிரம் பெற்று,,

கதறிய போதும் ,,

அவன் முகத்தை திருப்பி கொண்டேன்,,

**
காலம் வெகு வேகமாக ,,

கரைந்த ஒரு நாளில்,,

மெல்லிய உணர்வுகள்,,

சற்றே மகிழ்வோடு இருந்தன,,

**
சிந்தித்தேன்,,

என்னை ,,

என் நிலையறிந்து,,

என்னை அழகாக,,

பக்குவபடுத்தி இருக்கிறார்,,

இறைவன் என்று..

**
ஆம்,,

முதலிலேயே வசந்தம் கண்டிருந்தால்,,

நிச்சயம் பின்னொரு நாளில்,,

வீழ்ந்திருப்பேன்,..

**
பக்குவமற்ற மனதில்,,

அப்போது வாழ்ந்திருந்தேன் என்று,,

இப்போது புரிகிறது..

*******
ஜெய் ஷிர்டி சாய்ராம்..
*******


முதல் காதல்

முதல் காதல்,,

எப்போது உதித்தது என,,

நினைவில்லை..

உன்னை எப்போது பிடித்தது,,

என்றும் தெரியவில்லை..

**
ஆனாலும் தொடர்ந்த ,

தினசரி பேருந்து நிறுத்தத்தில்,

இருந்து,,

தொடர் பிரயாணத்தில்,,

மெல்ல என் மனம்,,

உன்னிடத்திற்கு அழகாக,,

தாவி கொண்டிருந்ததை நான் அறியவில்லை..

**
ஏதோ ஒரு அனிச்சை செயலால்,,

ஒரு முறை நீ திரும்பி,,,

சற்றே பின் தள்ளி நின்றிருந்த,,

என் கண்களை சில நொடி,,

உன் கண்கள்,,

சந்தித்த பொழுது,,

நமக்குள் முன்னமே உருவான,,

மெல்லிய காதல்,,

மெல்ல புரிந்தது நமக்கு...

**
நிறைய நிகழ்வுகள்,,

தினசரி சந்திக்க வாய்ப்பு இருந்தும்,,

பேசிக்கொள்ளவே இல்லை.

ஏனோ பெரும் தயக்கம்,

இருவரிடமும்..

ஆனால்,,

நமக்குள் மிக அழகான,,

காதல் பூத்திருந்தது...

**
என் உறவு பெண்ணும் கூட நீ,,

தொடர்ந்த பார்வை பரிமாற்றங்கள் ,,

நமக்குள் இருந்த காதலை,,

அழுத்தமாக சொல்லின..

தொடர்ந்த கனவுகளில்,, அன்று,,

நீ மட்டுமே வந்தாய்..

**
அது என் அழகான,,

இருபதுகளின் வயது..

சற்றே வாழ்வதற்ககான தேடலை ,,

நான் துவங்கியபோதும்,, கூட,,

எனக்கான தேடலாக இல்லாமல்,,

நமக்கான தேடலாக தேடினேன்...

கிடைத்தது ஒரு வாழ்க்கை ,,

வெளிநாட்டில்...

பிரித்தது சில காலம் நம்மை..

**
திரும்ப ஒரு நாள் வந்தபோது,,

உன் அழகான திருமண பத்திரிக்கை,,

என் வீட்டு வரவேற்பு அறையை ,,

அழகாக அலங்கரித்து..

சிலையானேன் சில நிமிடம்,,

சுதாரித்தேன்,,

என்றோ முடிந்திருந்தது,,

உன் திருமணம்..

**
காலம் கடந்த ஒரு நாளில்,,

என் உறவினருடன்,

உன் வீட்டிற்கு வந்தபோது,,

மெல்ல பேசினாய் ,,

நலமா என்று..

பிறகு,, என்ன நினைத்தாயோ,

தூளியில் உறங்கி கொண்டு இருந்த,

உன் குழந்தையை,,

என் மடியில் கிடத்தினாய்..

**
சற்றே பக்குவம் அடைந்திருந்த ,

என் மனதால்,

குழந்தைக்கு என் ஆசிகளை தெரிவித்தேன்,,

**
பிறிதொரு நாளில் என் திருமணமும் முடிந்தது...

ஏனோ அதன் பின்,,

இருவரும் சந்திக்கும் தருணம் கூட நிகழவில்லை..

வாழ்க்கை சூழல்,,

வெகு வேகமாக நம்மை நகர்த்தியது போலும்.

**
வாழ்க்கை தீர்ந்த ஒரு பொழுதில்,

ஒரு உறக்கம் வராத பின்னிரவில்,,

இந்த தள்ளாத அந்திம வயதில்,,

ஏனோ உன் நினைவு.

**
இந்த அந்திம வயதிலும்,,

அழகிய உன் இளமை தோற்றத்தின் நினைவுகளோடு..

மெல்லிய கண்ணீரை வெளிப்படுத்தியபடி,,

மரணம் நோக்கி காத்திருக்கிறேன்..

***
((நிஜத்தோடு சிறிதாக கற்பனை கலந்து.. ))

Saturday, 23 June 2012

மனசுமை குறைய

நான் கவிஞன் அல்ல,,

என்று உறுதியாக கூறுகிறேன் மீண்டும்,

காரணம்,,

கவிதைக்கு சொற்கள் அழகு,,

வாக்கியங்கள் அழகு,,

அடையாள குறிகள் அழகு..

தெள்ளு தமிழ் அழகு,,

இலக்கண தமிழ் அழகு..

பேச்சு தமிழும் அழகு..

**
அந்த அழகு சொற்களை,,

படைக்க வேண்டுமெனில்,,

காதலிக்க தெரிந்திருக்க வேண்டும்,,

அழகிய ரசனை உணர்வு வேண்டும்,,

வாழ்வியல் புதிய பார்வை வேண்டும்,

சில நேரங்களில் தீராத வருத்தம் வேண்டும்,,

**
எனக்குள் மேற்கூறிய அனைத்தும் இல்லை,,

ஒன்றை தவிர,,

வருத்தங்கள், வலிகள் மட்டுமே என்னுள்..

உள்ளிருந்து வலிகளை ,,

வலைப்பதிவின்  வழியே தெளிப்பதில்,

என் மனசுமைகள்,,

சற்றே குறைவது போன்ற,

ஒரு பிரமை எனக்குள்..

அவ்வளவே ...

**
நன்றி வணக்கம்..
**

நான் கவிஞன் அல்ல

நான் இதுவரை கவிதையே எழுதவில்லை...

எனக்குள் புதைந்து கிடக்கும்,,

ஆழமான வலிகள்,,

எண்ணங்கள்,

மகிழ்வுகளை..

அவ்வப்போது முகநூலில் ,,

தெளித்து விடுகிறேன் ,, அவ்வளவே..

**
கவிதை என்பதற்கு இலக்கணம் உண்டு,,

வார்த்தைகள்,, சொற்கள்,,

அழகுற இருத்தல் வேண்டும்..

**
ஆனால்,,

நான் அழகுற சொற்களும்,,

வாக்கியங்களும் வேண்டுமென,,

வர்ணித்து எழுதி,,

எழுதியவற்றை ரசித்து பார்ப்பதில்லை..

**
விநாடி நேரத்தில்,,

எனக்குள் புதைந்தவைகளை ,

தெளித்து விட்டு,,

மறைந்து விடுகிறேன்,,

என் மனத்திருப்திக்காக..

**
ஆக,, நான் கவிஞன் அல்ல..

Thursday, 21 June 2012

திசை தேடுகிறேன்

முடிவுரை நோக்கிய , ,

பயணத்தின் இடையே,,

நீண்டதொரு தேக்கம்,,

சோர்வு...

நடுவழியில்,,

பயணம் நின்ற தவிப்பு,.

**
இனி மீண்டும் எழ வேண்டும்,,

பயணம் தொடர வேண்டும்..

வெட்ட வெளியில்,,

திக்கு தெரியாமல்,,

திண்டாட்டமாக,,

திசை காணும் தவிப்பில்,,

நான்,.

**
ஓராயிரம் நம்பிக்கை மட்டும் ,,

என்னுள்ளே இருக்கிறது,,

நிச்சயம் முடிவுரை வரை,,

இனி எந்த தடங்கலும் இல்லை என்று,

**
இருப்பினும்,

திசை தேடுகிறேன் இப்போது.

ஏக்கங்களே வாழ்வியலாக

அன்று நிறைய விருப்பப்பட்டேன்,,

முயற்சித்தேன்,,

என்னுடன் சேர்ந்தவர்களையும்,

முயற்சிக்க சொன்னேன்,,

**
கிடைத்தது அவர்களுக்கு,

மகிழ்ந்தார்கள்..

பிறகு,,

எங்கோ எட்டா உயரத்திற்கு ,,

சென்று விட்டார்கள்..

**
அந்த வயது ,,

அந்த மகிழ்வு,,

வானம் வசப்பட்டது ,

அவர்களுக்கு..

எனக்கு எட்டாத கனியாகி விட்டது,,

வேடிக்கை பார்த்தபடி நின்றேன்,,

**
காலம் வெகு வேகமாக சுழன்றாலும்,

அடி மனதில்,,

அந்த ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது,,

வலித்தது அவ்வப்போது..

**
இளமை தொலைத்த ஒரு நாளில்,

மீண்டும்,

வலி தாங்க முடியாமல்,

முயற்சித்த போது,,

கிடைத்தது..

**
கிடைத்தென்ன பயன்,

என்ற மன நிலையில்,..

அந்த வாய்ப்பில்,

முழுதாக,,

ஒன்ற முடியாது,,

தவிக்கிறேன்..

**
ஏக்கங்களே வாழ்வியலாக.. இறுதிவரை தொடரும் ..

**

விலகுவதை தவிர

இயல்பை தொலைத்து,,

வேஷம் கட்ட விரும்பவில்லை..

மகிழ்வென்ற பொழுதுகள்,,

வேண்டாம் இப்போதைக்கு..

***
நான் மகிழ்வு வேடம் கொண்டபோதெல்லாம்..

என் மனது உறுத்துகிறது,,

என்னை மறந்துவிட்டாயா, என்று,,

என் ஏக்கங்களும்,,

ரணங்களும்,,

உள்ளிருந்து கதறுகின்றன..

என் செய்ய .. ? விலகுவதை தவிர

நான் நானாகி வருகிறேன்

என் உள்ளார்ந்த இயல்பை,,

தொலைத்து விட்டேன்..

நான் நானாக இல்லை,,

சில நாட்களாக..

ஆம் ஏனோ தெரியவில்லை,

நான் அல்லது என்னை சுற்றி,,

மகிழ்வாக இருப்பது போல உணர்வு,,

**
ஆனால்,,

நான் நிச்சயம் மகிழ்வானவன் இல்லை,,

அது எனக்கு தெரியும்..

சில சூழல்கள்,,

என் துக்கத்தை ,,

என் வேதனையை,,,

மறைத்து விட்டது போல உணர்வு..

**
சற்றே நிதானித்து,,

அந்த மகிழ்வுகளை விலக்கி விட்டு,,

பார்த்தேன்..

என் துக்கங்கள்,,

என் ரணங்கள்,,

என்னை பார்த்து கை கொட்டி சிரித்தன..

நாங்கள் இன்னும் உன்னோடுதான் என்று..

**
மீண்டும் ,,

மெல்ல,,

இப்போது,,

நான் நானாகி வருகிறேன்..

(இது முற்றிலும் உண்மையும் கூட )

Tuesday, 19 June 2012

மேய்ப்பன்..

மிக குளிர்ந்த ,,

இருளில்,,

தூக்கமின்றி புரண்டபோது,,

ஏனோ பட்டியில் ,,.

அடைக்கப்பட்ட ஆடுகளின்,

கதறல் உறுத்தியது..

***
வெளியில் வந்து பார்த்தபோது,,

அமைதியாக இருந்தன ஆடுகள்..

வீட்டினுள் மீண்டும் நுழைந்து,,

போர்வைகள் நிறைய சேர்த்து,,

முடிச்சு போட்டு,,

நீண்டதொரு போர்வையை,,

தயார் செய்து..

பட்டி முழுதும்,,

மேலே கூடாரம் போல்,,

கட்டி விட்டேன்..

**
இப்போது,,

குளிரிலிருந்து ஆடுகள்,

தப்பித்து கொள்ளும்,,

என்று மனம் ,,

மகிழ்வு கொண்டது..

**

இன்னும் ஒரு வாரத்தில்,,

எங்கோ சென்று,

மனிதனின் ருசிக்காக,,

தன் உயிரை இழக்கும்,,

இவைகள்,

வாழும் ஓவ்வொரு,,

வினாடியும் மகிழ்வோடு ,,

இருக்கவேண்டுமே என்ற,,

கவலை எனக்குள்..

***
நான்...

மேய்ப்பன்..

வாழ்வியல் பாடம்

விடிய,, விடிய,,

மெல்லிய தூறல்,,

இதமான குளிரை,,

தந்து,,

தகிக்க வைத்த,,

வெப்பத்திடம் இருந்து,,

காப்பாற்றியது..

**
இனி தூறல் பொழுதுகள்தான்,,

சில காலம்..

**
கோடை அனலை காட்டி,,

தகிக்க வைத்து,,

பின்,,

அழகிய குளிரையும்,

தூரலையும் தந்து,,

உதவும் இயற்கை,,

ஏதோ ஒரு வாழ்வியல் பாடம் ,,

சொல்வது போல இருக்கிறது,,

எனக்குள்..

வரலாறு..

மகேந்திரவர்ம பல்லவரையும்,,

ராஜராஜ சோழனையும்,,

சந்தித்து வந்த பிறகு,,

வரலாறு பற்றிய தெளிவு வந்தது,,

**
வரும் காலத்திற்கு,,

அழகிய வரலாற்றை படைக்க,,

அவர்கள் மேற்கொண்டு வரும்,

முயற்சிகள் மகிழ்வோடு,,

பிரமிப்பை கொடுத்தது..

**
அந்த வரலாற்றை,,

இன்றுள்ள ஆள்வோரிடம் ,,

கொண்டு செல்லலாம் என்றெண்ணி,

அவர்களிடம் தெரிந்து வந்ததை ,,

உரைத்தேன்,,.

ஏளன பார்வை,,

பரிசாக கிடைத்தது..

**
ஏதோ பன்னாட்டு நிறுவன,,

தொடக்க விழாவிற்கான,,

வரவேற்ப்பு கொடுக்க,,

பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்..

**
நான்

சலனமற்று நின்றிருந்தேன்,.

Saturday, 16 June 2012

வானம் பார்த்தேன்

வானம் பார்த்தேன்,,,

கடும் கோடைகாலத்தில்,,


நண்பகல் பொழுதில்..


ஓர் நாள் ..

**
கண்கள் வலித்தது,,

எரிச்சலோடு,,

நீர் வடிந்தது,.,

கதிரவனின் உக்கிரம்,,

தாளாமல்,,

உடல் வியர்த்தது,,.

இருப்பினும்,,

வானம் பார்த்தபடி இருந்தேன்,,.

**
மோசமானதொரு,,

அக்னி பார்வையில்,

சிக்கி கொண்டேன்...

**
இப்போது,,

உக்கிரம் தாளாமல்,,

சற்றே தலை குனிந்து,,

பூமி பார்த்தேன்,,

கதிரவனின் அக்னியை,

உள்வாங்கி,

என் கால்களை சுட்டெரித்தது..

**
இருப்பினும்,,

உறுதிகொண்டு நின்றேன் ,,

குளிரோடு சேர்ந்த,,

மழைகாலம் வரும் வரை..

**
நீண்ட காத்திருப்பிற்கு பின்,,

மழைகாலம் அழகாக வந்தது..

மேகங்கள் மெல்ல,,

கதிரவனை மறைத்து..

என்னை குளிர்வித்தது,,

மழை நீர் கொண்டு..


**
சூழல்.. வலிகளுக்கு பின்னே வாழ்க்கை ..

***

Thursday, 14 June 2012

தீரம்.. ஜெயம்

நிதர்சனங்களை,,

எதிர்கொள்ள தயங்கி,,

விலகி நின்றிருக்கிறேன்..

அவ்வப்போது,,

அந்தந்த சூழலின் பயம் கண்டு..

காலம் கடந்து,,

விலகி நின்ற தவறுகள்,,

உறைக்கும் போது,,

வலிகள் அதிகமாகின்றது..

**
காலம் கடந்து ,,

இன்று நான் பெற்ற ஞானம் இதுதான்,,

உனக்கென்ற பாதையில்,,

உறுதி கொண்டு,,

எதிர்படும் இடர்பாடுகளை,,

தீரத்தோடு எதிர்நோக்கினால்,

மட்டுமே,,

வாழ்வியல் அழகுற மிளிரும்..

**
இல்லையென்றால்,,

நல்லவன் என்ற பெயர் மட்டுமே,,

கிடைக்கும்,,

கூடவே இன்னொரு பெயரும்,,

பிழைக்க தெரியாதவன் என்று..

**
சூழல்.. தீரம்.. ஜெயம்

**

Monday, 11 June 2012

**தனிமை சிந்தனைகள்**

**தனிமை சிந்தனைகள்**

என்,,

மன புழுக்கம்,,

மனக்காயம்,,

மன சலனம்,,

இவற்றிற்கெல்லாம்,

என் தனிமை சிந்தனைகள்தான்,,

மருந்து..

**
என் தனிமை சிந்தனைகள்,,

எனக்குள் நல்ல மாற்றம் தரும்,

அதே சமயம்,,

சில நேரங்களில்,

துக்கங்களின் தாக்கத்தை,,

அதிகம் ஏற்படுத்தி,,

மீள முடியாமலும்,,

செய்து விடும்..

**
இருப்பினும்,

தனிமை சிந்தனைகளே,,

என் துணை..

என்றபடி நகர்கிறது,,

என் வாழ்வியல்...

**
தனிமை.. சூழல்.. இதம்..

**

Saturday, 9 June 2012

ரௌத்ரம்

நான் கவனம்,,

பிசகிய போது,,

பொருள் இழப்பு,,

அமைதி இழப்பு,,

என் இழந்தவை பல..

ஆனால்,

இழப்புகள் எல்லாம்,,

பெரிதாக தெரியவில்லை.

இழந்ததை மீட்டெடுத்துவிடலாம்,

என்ற நம்பிக்கை இருந்தது,.

**
இருப்பினும்,

அந்த நிலையில்,

என் நிலை கண்டு,,

பரிகாசம் செய்து,,

ஆனந்த பட்டவர்களை,,

நினைக்கும்போதெல்லாம்,,

ஏனோ,,

மனம்,,

ரௌத்ரம் பழகுகிறது..

இறந்து கிடந்தேன்

ஒரு அழகிய இளமாலை பொழுதில்..

சூரிய கதிர்களை,.

தன் கிளைகலூடே விட்டு,,,

அந்த அழகிய பூங்காவை,

பேரழகாக உருவேற்றி கொண்டிருந்த மரங்களின்,, நடுவினில்,,

உதிர்ந்து சருகான இலைகளுடன்,,,

அழகிய தென்றலும்,

சூரிய கதிர்களும்,,,

என் மீது விழுந்து கொண்டு இருந்த,,

ஒரு அந்தி மாலை பொழுதின்,,

தனிமையில்.. ஓர்நாள்,,,

நான்,,

இறந்து கிடந்தேன்,,

இயற்கையோடு..

எண்ணங்கள்

என் எண்ணங்கள் ,,

மெல்லிய இருளில்,,


நிசப்தம் கொண்ட நேரத்தில்,,


காற்றில் கலந்து,,

இருளில் மறைந்து,,

உன்னை தேடி,,

அலைந்து கொண்டு இருக்கிறது..

**
ஓய்வற்ற கண்களோடு,,

பின்னிரவின் தனிமையில்.,

எண்ணங்கள்,,

உன்னை சுற்றியே,,,

அல்லாடுகின்றன..

**
அங்கே,,

நீயும்,,

என்னைபோலவே,,

உறக்கம் வராமல்,,

தவித்து கொண்டிருப்பாய் ,,

என்ற நம்பிக்கை,,

சிறிதளவு எனக்குள்,,

உண்டு...

அம்மாவிற்கு ஒரு கடிதம்

***அன்புள்ள அம்மாவிற்கு ஒரு கடிதம் ***

அன்புள்ள அம்மா..

உனக்கு கடிதம் என்று இதுவரை,,

எழுதியதில்லை...

ஆனாலும்,,

ஏனோ இப்போது ,,

எழுத தோன்றியது,,

எழுதுகிறேன்..

**
என்னை ஈன்ற பொழுதில்,

பெரும் கனவு கண்டிருப்பாய்..

நான் தவழ்கின்ற பொழுதில்,,

மனம் நிறைய மகிழ்ந்திருப்பாய்..

என் பால்ய பருவத்தில்,,

என் குறும்புகளை ரசித்திருப்பாய்..

என் குறும்புகளை ,, பிறர்,,

ரசித்து சொல்ல,,

அக மகிழ்ந்து போயிருப்பாய்..

**
நான் வளர வளர,,

படிப்பில் சற்று முன் பின் இருந்தபோதெல்லாம்,,

தந்தையின் கண்டிப்பில் இருந்து,,

என்னை காத்து நின்றிருக்கிறாய்..

உன் அழகிய வாழ்கையை,,

எனக்காகவே செதுக்கினாய்..

எனக்கு உடல்நிலை,,

சரி இல்லாத பொழுதெல்லாம்,,

துடித்து போய்,,

மருத்தவமனைக்கு விரைந்திருக்கிறாய்  .. ..

**
பிற்காலத்தில் ஒரு நாள்,,

அதே மருத்தவரிடம் நான் ஒரு முறை,,

என்னை அறிமுகபடுத்தியபோது,,

அந்த மருத்துவர் அப்போது  கூட,

சின்ன வயதில்,

உனக்கு சிறு உடல் நிலை சரி இல்லை என்றாலும்,,

உன் அம்மா பதறி போய் வருவாங்க,,

அம்மா இப்போ நல்லா இருக்காங்களா என்று கேட்டார்..

**
அப்படி எல்லாம் பாசம் கொட்டி வளர்த்து,,

பிறிதொரு நாளில்,,

மதிப்பெண்  குறைவாக வாங்கியதால்,, 

ஏதோ ஒரு சுமாரான கல்லூரியில்,,

தந்தை திட்டியபடியே சேர்த்துவிட்டபோது  கூட,,

உன் ஏமாற்றத்தை விழுங்கி கொண்டே,,

புன்னகைத்தாய்..

**
எனக்கு அடுத்து வந்தவர்கள் எல்லாரும்,

முன்னேறி செல்ல செல்ல..

ஏனோ என்னை மட்டும்,,

கடவுள் தொடர்ந்து சோதித்து போல உணர்வில்,,

என் இயலாமையும் சேர,,

வீழ்ந்தேன்..
 
**
தொடர்ந்த மனவேதனையில்,,

நான் சோர்ந்துகொள்ள,,

வாழ்கையின் சற்றே பின் பகுதியில்,,

நான் நுழைந்து விட்டாலும்,,

இன்னமும்,,

நான் வீட்டிற்க்குள் ,,

என்றாவது  நுழையும்போதெல்லாம்,,

இன்னமும் பரவசம்  கொண்டு ,,

என்னை கவனித்து  கொள்கிறாயே,,

இந்த  தள்ளாத  வயதிலும்..

**
எப்படி அம்மா,,

உன்னால் இப்படி  மனம் நிறைய அன்பு  காட்டமுடிகிறது ..

இத்தனை வருட,,

என் இயலாமை வாழ்கையில்,,

ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன்,,

வேஷம் அற்ற,,

தூய அன்பு கொண்ட,,

ஒரே ஜீவன் ,,

நீதான் அம்மா..

**
இன்னமும் நிறைய எழுத வேண்டும் போல,,

இருப்பினும்,,

கண்களை மறைத்த கண்ணீரால்,,

என்னால் வெள்ளைத்தாளை பார்த்து,,

எழுத முடியவில்லை..

மீண்டும் ஒரு கடிதத்தில்.. சந்திக்கிறேன்..

**
அன்புடன்,,

அன்பு மகன்..

Friday, 8 June 2012

தெய்வம்

தெய்வம்...

என் வாழ்வில்,,

அவ்வப்போது,,

வந்து,

என்னை,,

எச்சரித்து செல்லும்..

**
பல சமயம்,,

நான்,,

அந்த எச்சரிக்கையை,,

பொருட்படுத்தியது இல்லை..

**
இருப்பினும்,,

அந்த தெய்வம்,,

இன்னமும்,,

அவ்வபோது,,

என்னை ,

எச்சரிக்கை

செய்தபடிதான்,,

இருக்கிறது,,

என் மனம் வழியே,,

மனசாட்சி என்ற,,

குரலோடு..

**

இருப்பினும்,,

நான்,,

இன்னமும்,,

சில நேரங்களில்,,

கண்டு கொள்வதில்லை..

**
எனக்குள் சற்றே ,,

தலைக்கனம் கூட..

எனக்கு தெரியாதா,,

நீ என்ன சொல்வதென்று...

**
இருப்பினும்,,

அவ்வப்போது என்னை மீறிய,,

சில கடின சூழலில்,,

எச்சரிக்கை கண்டு,,

நிதானிக்கும்போதேல்லாம்,,

மனதில்,

ஏதோ ஒரு குறுக்கீடு...

**
சாத்தானின் வேலையாக இருக்குமோ,,

என்ற சந்தேகம் வேறு நெடு நாளாய்..


***
வாழ்வியல்.. கடவுள்.. மனசாட்சியாக..

***

Thursday, 7 June 2012

அன்பு மனைவிக்கு ஒரு கடிதம்

***அன்பு மனைவிக்கு ஒரு கடிதம்***

ஓயாமல் துடிக்கும்,,

இதயம்,,

ஒரு நாள் நின்று போகும்..

நான் இறந்து போவேன்..

உடல் மக்கி போகும்..

அல்லது,,

தீ நாக்குகளுக்கு,,

இரையாகிவிடும்..

**
உடலற்று போன நான்,

என் ஆன்மாவோடு ,,

மட்டுமே,,

இவ்வுலகை விட்டு,,

வெளியேறுவேன்..

**
ஆன்மா அடுத்து,,

எங்கோ செல்லும்..

அது எனக்கு தெரியாது,,

**
ஆனால்,,

ஆன்மாவுக்குள்,,

அழியாத பொக்கிஷமாய்,,

என் வாழ்வின் நினைவுகள் இருக்கும்...

அந்த நினைவுகளில்,,

பெரும் பகுதி,,

உன்னை சுற்றியே இருக்கும்..

**
இறந்தும்,,

இறவாது,,

உன் மீது,,

நான் கொண்ட,,

காதல் இருக்கும்,,

என்றென்றும் ...

**
வணக்கத்துடன்,,

உடலற்ற கணவன்..

***
காதல்.. அழகிய காதல்..
**

Wednesday, 6 June 2012

இறந்திருந்தேன் ஒரு நாள்

பரபரப்பான வாழ்வில்,

சட்டென்று ஒரு நாள்,

மௌனம் கண்டேன்..

உள்ளம் அமைதி கொண்டேன்..

மனம் நிசப்தம் கொண்டேன்..

உடல் ஓய்வு எடுத்தேன் ,,..

**
இறுதியில்,,

பரவசம் அடைந்தேன்..

**
இப்போது,,

கடவுளை கண்டேன்,,

விண்ணுலகில்..

***
புரிந்தது இப்போது,,

நான் அங்கே புவியில்.. ,,

இறந்திருந்தேன்..Tuesday, 5 June 2012

பிறப்பு.


கடவுளின் ஆசி பெற்று,

கடவுளிடம் இருந்து,,

விடை பெற்று,,

கடவுளின் தூதுவரான,,

ஒரு தேவதையின் ,,

கை பிடித்து,,

அழகாக ,,

தாயின் கருவறைக்குள் ,,

நுழைந்து ,,

தேவதையை பிரிந்த ,,

வருத்தத்தில்,

அழுதுகொண்டே,,

ஜனிக்கிறது,, ,,

ஒவ்வொரு அழகான,,

குழந்தையும்,..

*** பிறப்பு... கடவுளிடம் இருந்து..***

மண் தின்றவன்

மண் தின்றவன்,,

மழலையில்..

மனம் விட்டு சிரித்தவன்,,

பள்ளியில்..

**
பொய் பேச தெரிந்தவன்,,

வீட்டில்,, ..

நட்பு கொள்ள தெரிந்தவன்,,

கல்லூரியில்.,,

**
பிடிப்போடு நின்றவன்,,

திருமணத்தில்...

புரிதலோடு இருந்தவன்,,

மனைவியிடத்தில்..

**
ஆழமான அன்போடு இருந்தவன்,,

பிள்ளைகளிடத்தில்..

மென் மேலும் உழைத்தவன்,,

நடுத்தர பருவத்தில்..

**
உண்மையே பேசியவன்,,

முதிர்ந்த வயதில்..

**
இறுதியில் செல்லாக்காசாகி,

தனிமையில் நின்றவன்,,

அந்திம பொழுதில்..

***
நான் ,,,

சராசரி மனிதன்,,,

***