என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 5 June 2012

சான் பிரான்சிஸ்கோ

சான் பிரான்சிஸ்கோ..

என் கனவு நகரத்தில்..

ஒரு அந்தி சாயும் நேரத்தில்,

காலடி வைத்தேன்,,.

**
நேர்த்தியான,,

அந்த சாலைகள்,,

அழகிய கட்டிடங்கள்,,

மனதை ஈர்த்தன,,

சற்று நேரத்தில்,,

என் அறை கண்டு பிடித்து,,

உள்ளே நுழைந்தேன்,,

இருட்டியது..

**
வண்ண விளக்குகளால்,,

களை கட்டியது நகரம்,,

வியப்பு மேலிட,,

ரசித்தேன்,,

பூலோக சொர்க்கம் போல ..

இருந்தது அந்த நகரம்,,

**
நான்..

முதல் விமான பயணம் கண்டு,,

இங்கே வந்திறங்கிய,,

மென் பொருள் வல்லுநர்..

படித்ததும்,

இங்கே பெரும் நிறுவனம் ஒன்றில்,,

பெரும் சம்பளத்தில் வேலை..

**
எங்கெங்கும்,,

வண்ண விளக்குகள்,

கலவையான மனிதர்கள்...

ஒவ்வொரு கட்டிடமும் ,,

பிரமிப்பை ஏற்படுத்தின..

**
விடிந்தது,,

முதல் நாள்..

என் அலுவலகம் சென்றேன்,

எனக்குரிய வசதிகள் ,,

தரப்பட்டன ,,

**
முதல் நாள் வேலை முடிந்து ,,

திரும்பும்போது ,,

சொந்த உபயோகத்திற்காக,,

கொடுக்கப்பட்ட காரில் ,, ,

பிரயாணம் செய்து ,,

என் இருப்பிடம் வந்து,,

சேர்ந்தேன்,,

**
பிரமிப்பு இன்னமும் அகலாமல்,,

இருந்தபோது,,

யாரோ என் மீது,,

தண்ணீர் தெளித்ததை போல ,,

இருந்தது..

அம்மா..

**
இன்னும் என்ன தூக்கம்,..

இந்தா காபி தண்ணி குடிச்சுட்டு,,

காட்டுக்கு போயி,

அப்பாக்கு சாப்பாடு,,

கொடுத்துட்டு,,

அப்பாக்கு ஒத்தாசையா இருந்துட்டு,,

சீக்கிரம் வந்து புறப்பட்டு,,

பள்ளிக்கூடம் போ என்றாள்..

**
கனவு கலைந்தது,,

எனக்கு,,.

நான் விழித்தேன் சில வினாடி ,,

கனவு புரிந்தது..

அம்மா சொன்ன வேலைகளை ,,

முடித்து விட்டு ,,

என் மிதிவண்டியை மிதித்தேன்,,

**
வேகமாக மிதித்தால்,, .

அரை மணி நேரம் ஆகும்,,

எங்கள் கிராமத்திலிருந்து,,

பள்ளிக்கூடம் சென்று சேர..

**
பள்ளியை நோக்கி..

கனவுகள் நிஜமாக்க ,,

வேகமாக மிதித்து கொண்டு இருந்தேன்,,

என் மிதிவண்டியை..

**
நான்..

அரசு பள்ளியில்,,

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ..

No comments: