என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 2 June 2012

வெள்ளந்தி மனது

அன்றொரு நாள்...

மழை  இரவில்..

கிராமத்து சாலை வழியே..

நான்,,

மணி சப்தம் எழுப்பியபடி,

சென்ற,

மாட்டு வண்டியில் பயணித்தேன்..

**
தாமதமாக வந்த பேருந்தில்,,,

ஒற்றை ஆளாக வந்து,,

அந்த கிராமத்தில்,,

இறங்கியபோது,.,

நல்ல மழை பிடித்திருந்தது,,

**
இருளில்..

அருகில் இருந்த ஒற்றை,,

வீடும் பூட்டி இருந்தது..

**
சிரமத்தோடு,,

மழையை சபித்தபடி ,

நின்றிருந்தேன்,,

சிறிது நேரத்தில்,,

மாட்டு வண்டியில்,,

வண்டிக்காரன் ஒருவன் ,,

 வந்தான்..

**
தம்பி ஊருக்கு புதுசா,,

என்று கேட்டான்..

ஆம் என்று ,,

அவன் அழைப்பை ஏற்று ,,

வண்டியில் அமர்ந்தேன்,.,

அவனும் பேச்சு கொடுத்து கொண்டே ,,

வந்தான்,.

கள்ளமற்ற பேச்சு..

**
ஒரு பெரிய வீட்டின்,,

முன் நிறுத்தினான்..

மணியகாரர் வீடு தம்பி ,,

என்றான்..

**
அங்கிருந்த பெரியவர்கள்,,

நான் யாரென்று தெரியாத போதிலும்,,

முதலில் தலை துவட்டி கொள்ள ,,

துண்டு கொடுத்து,,

சுவை மிகுந்த தேநீர் கொடுத்து,,

பிறகு,,

என்னை சற்று ஓய்வெடுக்க வைத்து,,

கேட்டனர்,,

தம்பி என்ன வேலையாக

இந்த ஊருக்கு வந்தீர்கள் என்று..

**
நான் யார் என்று தெரியாமலே,,

அன்பு வார்த்தைகளோடு,,

உபசரித்த அந்த வெள்ளை ,,

உள்ளங்களை ,,

கடவுளாக பார்த்தேன்..

**
இந்த ஊருக்கு,,

புதிதாக மாற்றலாகி வந்த ,,

அரசு பணியாளர் என்று

கூறினேன்..

ஏதோ அவர்கள் வீட்டு பிள்ளை,,

போல என்னை நினைத்து,,

என்னை உபசரித்து,,.

விடிந்த பின்,,

எனக்கு அந்த கிராமத்தில்,,

தங்குவதற்கு,,

அனைத்து உதவியும் செய்தனர்..

**
அன்பு மழையில்,,

அன்றைய கிராமத்து மனிதர்களிடம்,,

தெரிந்த வெள்ளந்தி மனதை,

இன்றும்,,

இந்த அந்திம காலத்தில்,,

தன்னந்தனியே,,

உறவுகள் அற்ற நிலையில்,,

நினைத்து பார்க்கிறேன்..

கண்ணீரை தவிர,,

வேறு ஏதும் இல்லை.. என்னிடம்..

**
((அது ஒரு காலம்,,

ஐம்பது,, அறுபதுகளில்,,

நடந்த நிகழ்வுகளை,,

எப்போதோ யாரோ சொல்ல கேட்டதின்,,

நினைவு..

இந்த கற்பனை.. ))

**

இன்று ?? மனிதர்கள்.. ??

வெள்ளந்தி மனது ?? எங்கே ??

No comments: