என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Saturday 9 June 2012

அம்மாவிற்கு ஒரு கடிதம்

***அன்புள்ள அம்மாவிற்கு ஒரு கடிதம் ***

அன்புள்ள அம்மா..

உனக்கு கடிதம் என்று இதுவரை,,

எழுதியதில்லை...

ஆனாலும்,,

ஏனோ இப்போது ,,

எழுத தோன்றியது,,

எழுதுகிறேன்..

**
என்னை ஈன்ற பொழுதில்,

பெரும் கனவு கண்டிருப்பாய்..

நான் தவழ்கின்ற பொழுதில்,,

மனம் நிறைய மகிழ்ந்திருப்பாய்..

என் பால்ய பருவத்தில்,,

என் குறும்புகளை ரசித்திருப்பாய்..

என் குறும்புகளை ,, பிறர்,,

ரசித்து சொல்ல,,

அக மகிழ்ந்து போயிருப்பாய்..

**
நான் வளர வளர,,

படிப்பில் சற்று முன் பின் இருந்தபோதெல்லாம்,,

தந்தையின் கண்டிப்பில் இருந்து,,

என்னை காத்து நின்றிருக்கிறாய்..

உன் அழகிய வாழ்கையை,,

எனக்காகவே செதுக்கினாய்..

எனக்கு உடல்நிலை,,

சரி இல்லாத பொழுதெல்லாம்,,

துடித்து போய்,,

மருத்தவமனைக்கு விரைந்திருக்கிறாய்  .. ..

**
பிற்காலத்தில் ஒரு நாள்,,

அதே மருத்தவரிடம் நான் ஒரு முறை,,

என்னை அறிமுகபடுத்தியபோது,,

அந்த மருத்துவர் அப்போது  கூட,

சின்ன வயதில்,

உனக்கு சிறு உடல் நிலை சரி இல்லை என்றாலும்,,

உன் அம்மா பதறி போய் வருவாங்க,,

அம்மா இப்போ நல்லா இருக்காங்களா என்று கேட்டார்..

**
அப்படி எல்லாம் பாசம் கொட்டி வளர்த்து,,

பிறிதொரு நாளில்,,

மதிப்பெண்  குறைவாக வாங்கியதால்,, 

ஏதோ ஒரு சுமாரான கல்லூரியில்,,

தந்தை திட்டியபடியே சேர்த்துவிட்டபோது  கூட,,

உன் ஏமாற்றத்தை விழுங்கி கொண்டே,,

புன்னகைத்தாய்..

**
எனக்கு அடுத்து வந்தவர்கள் எல்லாரும்,

முன்னேறி செல்ல செல்ல..

ஏனோ என்னை மட்டும்,,

கடவுள் தொடர்ந்து சோதித்து போல உணர்வில்,,

என் இயலாமையும் சேர,,

வீழ்ந்தேன்..
 
**
தொடர்ந்த மனவேதனையில்,,

நான் சோர்ந்துகொள்ள,,

வாழ்கையின் சற்றே பின் பகுதியில்,,

நான் நுழைந்து விட்டாலும்,,

இன்னமும்,,

நான் வீட்டிற்க்குள் ,,

என்றாவது  நுழையும்போதெல்லாம்,,

இன்னமும் பரவசம்  கொண்டு ,,

என்னை கவனித்து  கொள்கிறாயே,,

இந்த  தள்ளாத  வயதிலும்..

**
எப்படி அம்மா,,

உன்னால் இப்படி  மனம் நிறைய அன்பு  காட்டமுடிகிறது ..

இத்தனை வருட,,

என் இயலாமை வாழ்கையில்,,

ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன்,,

வேஷம் அற்ற,,

தூய அன்பு கொண்ட,,

ஒரே ஜீவன் ,,

நீதான் அம்மா..

**
இன்னமும் நிறைய எழுத வேண்டும் போல,,

இருப்பினும்,,

கண்களை மறைத்த கண்ணீரால்,,

என்னால் வெள்ளைத்தாளை பார்த்து,,

எழுத முடியவில்லை..

மீண்டும் ஒரு கடிதத்தில்.. சந்திக்கிறேன்..

**
அன்புடன்,,

அன்பு மகன்..

No comments: