என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 11 September 2012

ஞானி..

ஞானி,

என்பவன், முற்றும் துறந்தவன் அல்ல..

வாழ்வியல்,, தத்துவம் அறிந்தவன்..

**
ஞானி..

பற்றற்றவன்.

உள்ளது உள்ளபடி,,

உண்மைகளை புரிந்து வைத்திருப்பவன்..

**
ஞானி..

அடக்கம் என்றொரு ஆயுதம் கொண்டவன்..

வெற்று ஜம்பம் பேசாதவன்.

**
ஞானி.

பகைவனுக்கும் உதவி செய்பவன்.

**
ஞானி.

கடவுள் அல்ல..

மனிதன்..

உணர்ந்த மனிதன்..

தெளிந்த மனிதன்..

மனிதம் கொண்ட மனிதன்..

**
பகட்டான போலி வாழ்வு வாழும்,,

இன்றைய போலி ஞானிகள் உலகில்,,

இந்த எளிய ஞானிகளை காண்பது சிரமமாக இருக்கிறது...

**
எளிய ஞானிகளை இனம் கண்டு,,

வணங்குவோம்.. என்றும்..

** வாழ்க வளமுடன் **.

No comments: