என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Wednesday 29 August 2012

அன்றொரு நாளில்..

அன்றொரு நாளில்,,

நான் பள்ளி சிறுவன்..

இன்றைய சிறார் போல அல்ல,

அன்று,,

என் போன்றவர்கள் எல்லாம்,,

பள்ளி இறுதி வரையில்,,

குழந்தைகளாகவே இருந்த ஒரு காலம் அது..

**
அன்றெல்லாம்,,

என் அறையில்,, இரவு உறக்கத்தில்,

கண்ட கனவுகள்,

ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்..

**
கனவுகள் வராத,,

நினைவு இரவுகளில்,,

என் உடல் மட்டும்,,

படுக்கையில் இருக்க,,

நான் மெல்ல பறந்து,,

ஜன்னலின் வழியே,,

வெளியேற முற்பட்டதுண்டு..

**
அவ்வப்போது,,

சிறுவனாகிய என்னை,,

இறைவன் அழைப்பார் போலும்..

இன்றும் நினைவிருக்கிறது,,

உடல் இருக்க,,

நான் மட்டும் அந்தரத்தில் உலவியது..

**
நான் மனதார நேசித்த,

என் நண்பனின் தந்தை,,

இறந்தபோது கூட,,

அதே வினாடிகளில்,,

அவர் என் கனவினில் வந்து சொல்லி,,

சென்றதும் நினைவிருக்கிறது..

அன்று குழந்தை உள்ளத்தோடு இருந்தேன்.

அதனால்தானோ அந்த சம்பவங்கள்.?

**
இன்று,, ?!!

கனவுகள் வருகின்றன,

வெறும் பயங்கர கனவுகள்.,,

சர்ப்பம் எனை தீண்ட,,

பிறிதொரு கனவில்,,

நடுநிசி பேய்கள் எனை துரத்த,

நான் எங்கோ தடம் மாறி விட்டேன் ,,

என்று புரிகிறது,, இப்பொழுது..

**
ஆம்,,

அறநெறி வாழ்விலிருந்து,,

சற்றே எங்கோ சறுக்கி இருக்கிறேன்..

அதன் விளைவுதான்,

இன்றைய துயரங்களும்,,

பயங்கர கனவுகளும்.

No comments: