என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 12 August 2012

அன்றே நான்...

அன்றே நான்,,

வாழ்ந்து மடிந்திருக்க வேண்டும்..

ஆம்,

அந்த காலகட்டத்தில்,,

வாழ்ந்திருக்க வேண்டும்.

**
உழைத்து வாழ்ந்த,

மக்களோடு..

மகத்தான தலைவர்கள்,,

வாழ்ந்த அந்த காலத்தில்,,

நான் வாழ்ந்திருக்க வேண்டும்.

**
ஆம்,,

சுதந்திர தீயின் போராட்டத்தில்,,

பங்கெடுத்து என் வாழ்வை துவக்கி,,

பின் நாட்களில்,,

உழைப்பை மூலதனமாய்,

நீதி நெறி கொண்ட மக்களோடு,,

பாமர வெள்ளந்தி மனிதர்களோடு,,

நான் கலந்திருக்க வேண்டும்..

**
பிறிதொரு நாளில்,

என் மனம் கவர்ந்த தலைவர்கள்,,

கக்கன்,, காமராஜர்,,

பெரியார்,

போன்ற தலைவர்கள்,,

மரணித்த போது,

நானும் மரணித்திருக்க வேண்டும்..

**
அப்படி மரணத்திருந்தால்,,

நிம்மதியாக பிரபஞ்சத்தில் ,,

உறங்கி கொண்டிருக்கும் என் ஆன்மா..

**
அந்த நல்ல தலைவர்கள்,,

மறைந்த பின்னே,,

பிறந்து,,

இன்றைய விஞ்ஞான உலகத்தில்,

நேசம் தொலைத்த மனிதர்களோடு,,

கலந்து,,

ஊழல் அரசியல்வாதிகளின் செய்திகளை,

படித்து கொண்டே,,

வாழும் கொடுமையை,,

அனுபவித்து இருக்க கூடாது..

**
ஏதோ பாவம் செய்திருக்கிறேன்,,

முற்பிறவியில்,,

அதனால்தான்,

நல்ல மனிதர்கள் எல்லாம் ,

மறைந்து போன பிறகு,,

பிறந்திருக்கிறேன் போலும்..

No comments: