என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 16 August 2012

கனவுகள் ...

நான் கனவுகள் பல கண்டவன்..

இந்த பரந்த உலகில்,,

நான் மட்டுமே மகிழ்வானவன்,,

என் கனவுகளில்..

**
அவ்வப்போது,

இந்த பூவுலகில் இருந்து,,

பிரிந்து,,

அவ்வப்போது வான வெளியில்,,

பிரபஞ்சத்தில் திரிவேன்..

எல்லாம் என் சிறுவயது,,

கனவுகளில்..

**
சற்றே இளைஞனாக,

உருவம் பெற்ற பின்,,

ஏனோ,,

சில உண்மை கனவுகள்,,

படை எடுத்தன..

**
என் நண்பரின் தந்தை,

இப்பூவுலகில் இருந்து,

விடைபெற்ற போது,

என் கனவினில் வந்து,,

சொல்லி விடை பெற்று சென்றார்,..

**
அப்பொழுதெல்லாம் சிறிது,,

நேர்மையானவனாக இருந்திருக்க வேண்டும்..

அதனால்தான்,

சில நேர்மையான கனவுகளை,,

கண்டிருக்க வேண்டும்..

**
பிறகு புரட்டி எடுத்த,,

வாழ்வியல் சூழலில்,,

சற்றே தடுமாற்றம் அடைந்த போது,,

விலங்குகளிடம் இருந்து,,

தப்பிப்பதே என் கனவுகளில் ,

என் முக்கிய பணியாக இருந்தது..

**
அவ்வபொழுது,,

நிஜத்தை போலவே நிகழ்ந்த,,

ஆவி கனவுகளின் பயங்கரங்கள், வேறு..

**
தொடர்ந்த நிஜ வாழ்வின் ,,

வீழ்ச்சியில்,,

கனவுகள் பயங்கரமாக உருவெடுத்து,,

சர்ப்பம் தீண்டும் அளவிற்கு,,

வலுபெற்றது..

**
சற்றே நிதானித்து,,

சிந்தித்த பொழுது,,

நான் நிஜத்தில் ,,

தெளிவாக சறுக்கி இருக்கிறேன்..

சற்றே, அற நெறி தவறி இருக்கிறேன்..

**
கனவுகளின் பயங்கரத்தின்,,

அர்த்தம் புரிந்து,,

இப்போது,

மெளனமாக இருக்கிறேன்,,

உயிர் துடிப்பின் ஓசையை மட்டும்,,

கேட்டபடி..


** வாழ்வியல்.. கனவுகள் உணர்த்தும் நெறிகள் **

No comments: