என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 24 April 2012

வீணான பொழுதுகள்

அழகிய மிக பெரும் ,,

நவநாகரீக கட்டிடம் அது..

**
யாரோ பெரும் செல்வாக்கான ,,

மனிதர்களால் கட்டிய கட்டிடம் போலும்,,

திரும்புமிடமெல்லாம் பிரமிப்பு,,

அதனுள் இருந்த அத்துணை கடைகளும்,,

இன்னும் பிரமிப்பு,,

**
அலங்கார விளக்குகளால்,,

பொருட்கள் மின்னின,,

கடும் வெப்பம் தணிக்க,,

அதிகப்படியான குளிரூட்டும் ,,

இயந்திரம் உதவியோடு,,,

சிலு சிலுவென்று இருந்தது,.,.

***
பெரும் கடலென மக்கள் கூட்டம்,

உழைத்து சேர்த்த பணத்தை,,

வெற்று பகட்டோடு,,

கடைகாரர் சொன்ன விலைக்கே,,

பேரம் பேசாமல்,,

வாங்கி சென்றனர்,...

**
எங்கெங்கு காணினும்,,

மக்கள் கூட்டம்,,

பெரும் பணத்தை கையில் வைத்து,..

பொருட்களை குவித்து,,

வெளியேறிய வண்ணம் இருந்தனர்..

சொற்ப பணம் கொண்டு,,

ஏதும் வாங்காமல்..

அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி.,

வெளியே வந்தேன்..

**
வெளியே கட்டிடத்தின் ஓரமாக,,

கடும் வெய்யிலில் நின்றிருந்த,,

பூக்கார கிழவியிடம்,,

முழம் என்ன விலை என்று,,

வாய் ஓயாமல் பேரம் பேசி கொண்டு இருந்தது,,

அந்த பெரும் பணக்கார கூட்டம்..

***
சூழல்.. உழைப்பு.. வீணான பொழுதுகள்..

***

No comments: