என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday, 20 February 2012

மூதாட்டிகள்..

மூதாட்டிகள்..
கிராமத்து மூதாட்டிகள்..
இப்பொழுதெல்லாம் ,,

கிராமங்களில் கூட இந்த மூதாட்டிகள் ,,
அரிதாகி வருகிறார்கள்..
அழகிய வெற்றிலை கிண்ணத்தில்,,
வெற்றிலையும் பாக்கும் நிரப்பி,,
அழகிய தாளத்துடன்,, இடித்து,,
காதோரம் பெரிய குண்டலங்கள்,,
அசைந்தாட,,
வெள்ளந்தி மனதுடன்,
கிராமத்து வாசனையை,, தன் பேச்சில் வைத்து கொண்டு,,
அன்பு உபசரிப்பில்,
விருந்தினரை கவனித்து,,
குழந்தைகளுக்கு கதைகள் பல சொல்லி,,
தாலாட்டி தூங்க வைத்த,,
நம் கிராமத்து மூதாட்டிகளை,,
இப்பொழுதெல்லாம் காணவில்லை..
ஏனோ வலிக்கிறது நெஞ்சம்,,

No comments: