என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday, 22 January 2013

* துளிகள் *

* துளிகள் *

உன்னை சுற்றிய,
என் பிரியத்தை,
உணராது,
வேறு எங்கோ வாசம் செய்கிறாய்.

என் தூய அன்பு,
உனக்கு புரியும் நாளில்,
நான் உன்னை விட்டு,
வெகு தூரம் சென்றிருப்பேன்.

முடிந்தவரை,
இப்பொழுதே உணர்ந்துவிடு,
என் பேரன்பை.
 **
அன்பை பேசும்,
அழகிய,
உன் உருவம்,
மிக அற்புதமாய்,
ஆழ பதிந்து விட்டது,
என்னுள்.

இனி,
என்னுள் உன் உருவம்,
உன் நினைவு,
என்றும் அழியாது..

தொடரும் நாட்களில்,
இனி, உன்னை,
சுமந்தபடி,
என் பயணம் தொடரும்.
**
சட்டென்று,
தேகமெங்கும் பரவிய,
சிலிர்ப்பு,
அழகிய கலவை,
உணர்ச்சிகளை சுமந்து,
ஆர்பரிக்க வைத்தது,
சில விநாடி நேரம்..

வினாடி நேரத்தில்,
ஒரு புன்னகை வைத்து,
எனை பார்த்து,
நீ தலை குனிந்த,
வினாடியில்,
என்னுள் உண்டான,
அழகிய உணர்வலைகள், அவை.
 **
தொடரும் காலங்கள்,
உன்னுடன் இணைந்தே,
விரையும் இனி..

உன் மீது நான் கொண்ட,
பிரியம் இனி,
உச்சம் தொடும்.

அதனால் வாழ்வியல்,
மிக அழகாய் நகரும்.

என் கனவுகள் தினம்,
இதுவே.

கனவுகள் உயிர்பெறும் நாளை,
நோக்கி தவிப்பு தொடர்கிறது.

என் மீது பிரியம் கொள்ள,
உன் மௌனம் கலைத்துவிடு..
 
 
 

No comments: